மார்ச் 22ம் தேதி மக்கள் ஊரடங்கு.. கோயம்பேடு மார்க்கெட்டுக்கு விடுமுறை.. வியாபாரிகள் அறிவிப்பு
சென்னை: பிரதமர் மோடி ஊரடங்கை கடைபிடிக்க வலியுறுத்தியதை அடுத்து நாளை மறு நாள் (22ம் தேதி) கோயம்பேடு காய்கறி மார்கெட் செயல்படாது என வியாபாரிகள் சங்கத்தினர் அறிவித்துள்ளனர்.
கொரோனா வைரஸ் தொற்று உலகத்தின் ஒட்டுமொத்த மக்களையும் கடுமையாக பாதித்து வருகிறது. இந்தியாவில் இப்போது வேகமாக பரவி வருகிறது. மூன்று பேருக்கு இருந்த கொரோனா இப்போது 176 பேருக்கு பரவி உள்ளது. இதுவரை இந்தியாவில் நான்கு பேர் இறந்துள்ளனர்.

தமிழத்தில் இதுவரை 3 பேருக்கு கொரோனா வைரஸ் பரவி உள்ளது. கேரளாவில் 28 பேருக்கு பரவி உள்ளது. நாட்டிலேயே அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 45 பேருக்கு பரவி உள்ளது. தெலுங்கானாவில் 13 பேருக்கும், டெல்லியில் 10 பேருக்கும், ஹரியானாவில் 15 பேருக்கும் பரவி உள்ளது.இதேபோல் கர்நாடகாவில் 11 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கவிட்டால் உலகமே பேரழிவை சந்திக்கும் அபாயம் உள்ளது.இதையடுத்து உலக சுகாதார அமைப்பு பல்வேறு அறிவுறுத்தல்களை வழங்கி வருகிறது. இதேபோல் மத்திய அரசும் மாநில அரசுகளும் அறிவுறுத்தல்களை வழங்கி வருகின்றன. இந்நிலையில் வரும் 22ம் தேதி காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை ஊரடங்கை கடைபிடிக்குமாறு பிரதமர் மோடி மக்களிடம் வலியுறுத்தி உள்ளார்.
இதை ஏற்று சென்னை கோயம்பேடு காய்கறி மார்க்கெட் வியாபரிகள் சங்கத்தினர். வரும் 22ம் தேதி அன்று ஒரு நாள் மட்டும் கோயம்பேடு மார்க்கெட் முழுவதுக்கும் விடுமுறை அறிவித்துள்ளனர். அன்று ஒரு நாள் மட்டும் செயல்படாது என்றும் அடுத்த நாள் முதல் வழக்கம் போல் செயல்படும் என்றும் அறிவித்துள்ளனர்.
-
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மீண்டும் வந்த அதே வரலாற்று சிக்னல்.. தங்கம் விலை மிகப்பெரிய அளவில் சரிகிறது.. இப்போ வாங்கலாமா? -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
கேஸ் சிலிண்டர் விலை ரூ.1,600.. விலை உயர்வை அறிவித்த கையோடு.. மத்திய அரசு சொன்ன முக்கியமான பாயிண்டு -
இன்னும் சில மணி நேரம் தான்.. பூமியை நோக்கி வரும் 'சூரிய புயல்'! மெகா அலர்ட் கொடுத்த நாசா












Click it and Unblock the Notifications