கோயம்பேட்டில்.. சின்ன வெங்காயம் சர்னு இறங்குது.. தக்காளியோ விர்னு ஏறுது.. சென்னையில் பெரிய மாற்றம்
சென்னை: கோடை காலம் துவங்கிவிட்ட நிலையில் காய்கறிகளின் விலையில் தாறுமாறான விலையேற்றங்கள் காணப்படுகின்றன. அந்தவகையில், கோயம்பேட்டில் என்ன நடக்கிறது தெரியுமா?
தமிழகத்தில் காய்கறிகள் உற்பத்தி நடந்தாலும், அவை உள்ளூர் தேவையை முழுமையாக பூர்த்தி செய்யும் அளவிற்கு எப்போதுமே இருப்பதில்லை.. சிலசமயம், பருவமழை கோளாறும் காரணமாகிவிடுகிறது.

காய்கறிகள்: அதனால்தான், வெளிமாநிலங்களில் இருந்து காய்கறிகள் தமிழகத்துக்கு கொண்டு வரப்படுகின்றன... குறிப்பாக, பெரிய வெங்காயம், தக்காளி போன்றவை கர்நாடகா, ஆந்திரா மற்றும் வடமாநிலங்களில் அதிகளவு விற்பனைக்கு கொண்டுவரப்படுகிறது.
கடந்த மாதம் பெய்த மழையால், காய்கறி பயிர்கள் நிறைய அழிந்துவிட்டன... முக்கியமாக தக்காளி, சின்ன வெங்காயம், உருளைக்கிழங்கு, பீன்ஸ், கத்திரிக்காய், கேரட், பீன்ஸ் போன்றவை உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டன. அதனால், இந்த வகை காய்கறிகள் சந்தைகளுக்கு குறைவாக வர துவங்கின.. விலையும் அதிகமாகவே இருந்தது.
பூண்டு இஞ்சி: அதேபோல, தக்காளி, வெங்காயம், பூண்டு, இஞ்சி என இந்த 4 பொருட்களின் விலைகளும் உயர்ந்தபடியே இருந்தன.. தற்போதுதான் கோடை காலம் துவங்கிய நிலையில் காய்கறிகளின் வரத்தும் அதிகமாகி உள்ளது.. இதனால், விலையும் தமிழகத்தில் மெல்ல குறைய துவங்கி உள்ளன.
அந்த வகையில், பெரிய வெங்காயம் ஒரு கிலோ 25 ரூபாய்க்கும், சின்ன வெங்காயம் ஒரு கிலோ 35 ரூபாய்க்கும், தக்காளி ஒரு கிலோ 25க்கும், பச்சை மிளகாய் ஒரு கிலோ 25 ரூபாய்க்கும், பீட்ரூட் ஒரு கிலோ 40 ரூபாய்க்கும், உருளைக்கிழங்கு ஒரு கிலோ 30 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது.
அவரைக்காய்: குடைமிளகாய் ஒரு கிலோ 40 ரூபாய்க்கும், பாகற்காய் ஒரு கிலோ 35 ரூபாய்க்கும், சுரைக்காய் ஒரு கிலோ 25 ரூபாய்க்கும், பட்டர் பீன்ஸ் ஒரு கிலோ 65 ரூபாய்க்கும், அவரைக்காய் ஒரு கிலோ 35 ரூபாய்க்கும், முட்டைக்கோஸ் ஒரு கிலோ 15 ரூபாய்க்கும், கேரட் ஒரு கிலோ 60 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது.
கடந்த மாதம்வரை ஒரு கிலோ இஞ்சி, 400 என மிரட்டிக் கொண்டிருந்த நிலையில், இப்போது ஒரு கிலோ 100 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.. அதேபோல, மாங்காய் ஒரு கிலோ 60 ரூபாய்க்கும், வெண்டைக்காய் ஒரு கிலோ 45க்கும், பூசணி ஒரு கிலோ 25க்கும், முள்ளங்கி ஒரு கிலோ 15 ரூபாய்க்கும், பீர்க்கங்காய் ஒரு கிலோ 50 ரூபாய்க்கும், புடலங்காய் ஒரு கிலோ 30 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது.
விரைவில் மாற்றம்: கடந்த வாரத்தைவிட இந்த வாரம் காய்கறிகளின் விலை குறைவாக உள்ளது.. இனி வரும் காலங்களில் கோடை காலம் துவங்க உள்ளதால் காய்கறிகளின் விலைகளில் மேலும் மாற்றம் நிகழ வாய்ப்புள்ளதாக சொல்கிறார்கள் வியாபாரிகள்.
-
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா?












Click it and Unblock the Notifications