அதிமுக பொதுக்குழுவில் இதை கவனத்தீர்களா? முக்கிய சீனியர் புள்ளி வரவில்லையே! என்ன பின்னணி?
சென்னை: அதிமுக பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டம் மிகவும் எழுச்சியோடு நடைபெற்று முடிந்துள்ள நிலையில் அதில் அக்கட்சியின் மிக முக்கிய சீனியர் புள்ளியான கே.பி.முனுசாமி கலந்துகொள்ளாதது கட்சியினர் மத்தியில் சிறியளவில் சலசலப்பை ஏற்படுத்தியது.
அதிமுக பொதுக்குழுக் கூட்டம் வழக்கமான உற்சாகத்துடனும் எழுச்சியுடனும் சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு வெங்கடாஜலபதி பேலஸ் மஹாலில் இன்று நடைபெற்றது. இதில் பங்கேற்க வந்த எடப்பாடி பழனிசாமிக்கு ஜெயலலிதாவுக்கு நிகரான உற்சாக வரவேற்பு கொடுக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து மேடையேறிய அவர், எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா படங்களுக்கு மலர்கள் தூவி மரியாதை செலுத்திவிட்டு பொதுக்குழு உறுப்பினர்களை நோக்கி இரட்டை இலைச் சின்னத்தை காட்டி புன்னகைத்தவாறு அவர்களை உற்சாகப்படுத்தினார்.

அதைத் தொடர்ந்து பொதுக்குழு தீர்மான புத்தகம் கைக்கு வந்தவுடன் அதனை படித்துக் கொண்டிருந்தார். இதனிடையே எடப்பாடி பழனிசாமி அருகே அமரக்கூடிய கே.பி.முனுசாமியை மேடையில் காணவில்லை. பிறகு தான் அவர் பொதுக்குழுவில் கலந்துகொள்ளவில்லை என்பது அங்கிருந்தவர்களுக்கு தெரிய வந்தது. இது பற்றி நாம் விசாரித்ததில், அதிமுக பொதுக்குழுவுக்கு கே.பி.முனுசாமி வராததன் பின்னணியில், அவர் தந்தை மறைந்து ஒரு வாரம் கூட ஆகாததால் தான் அவர் வரவில்லையே தவிர மற்றபடி வேறு எந்த காரணமும் இல்லை என்று தெரிவித்தார்கள்.
மேலும், மூன்று நாட்களுக்கு முன்னர் தான் கே.பி.முனுசாமி இல்லத்துக்கே சென்று அவரது தந்தை மறைவுக்கு ஆறுதலும் இரங்கலும் தெரிவித்து வந்தார் எடப்பாடி பழனிசாமி. இதனால் அவர்கள் இருவருக்கும் இடையே எந்த மனக்கசப்பும் இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டது.எடப்பாடி பழனிசாமியின் வலது புறம் அதிமுக அவைத் தலைவர் தமிழ் மகன் உசேனும், இடது புறம் அதிமுக பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசனும் அமர்ந்திருந்தனர்.
எஸ்.பி.வேலுமணி அய்யப்பன் கோவிலுக்கு மாலை அணிந்திருப்பதால் வழக்கமான கட்சி கரை வேட்டியை தவிர்த்து ஊதா நிற வேட்டியுடன் காட்சியளித்தார்.
-
அதிமுக சிதறி சின்னாபின்னமாகிடுச்சு.. தவெகவில் இணைந்த கையோடு எடப்பாடியை வெளுத்த வெல்லமண்டி நடராஜன்! -
அதிமுகவில் இன்னொரு பெரிய ‘விக்கெட்’.. தவெகவில் இணைந்தார் முன்னாள் டிஜிபி நடராஜ்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
பதவியும் போனது.. வீடும் போனது! செவ்வந்தி இல்லத்தை காலி செய்த எடப்பாடி பழனிசாமி.. பின்னணி என்ன? -
ரெண்டு பேருமே பெரிய புள்ளி.. தவெகவுக்கு தாவும் விஜயபாஸ்கர்! ரெடியான சண்முகம்! எடப்பாடிக்கு சிக்கல்! -
அதிமுகவில் நீடிக்கிறீர்களா? கேள்வியை தவிர்த்துவிட்டு எஸ்கேப்பான முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர்! -
29 பேருக்கும் மீண்டும் பதவி கிடையாது.. மறைமுகமாக சொன்ன எடப்பாடி பழனிசாமி.. அதிமுகவில் நடப்பது என்ன? -
அதிமுகவில் அடுத்த விக்கெட்.. தவெகவில் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்.. 2016 -இல் திருச்சி கிழக்கில் வெற்றி பெற்றவர் -
அதிமுக இரு அணிகளின் வாபஸ் மனுக்கள் ஏற்கப்படுமா? இன்று அறிவிக்கும் சபாநாயகர்.. பரபரப்பில் ர.ரக்கள் -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி!












Click it and Unblock the Notifications