கிளாஸில் மஞ்ச தாலியுடன் நுழைந்த கிருஷ்ணகிரி அரசு பள்ளி மாணவி.. யாரிந்த 13 வயது தெலுங்கானா சிறுமி
சென்னை: தொழில்நுட்பமும், விஞ்ஞானமும், கல்வியும் வளர்ச்சியடைந்த போதிலும்கூட, இந்தியாவில் வரதட்சணை கொடுமையையும், குழந்தை திருமணங்களையும் முற்றிலுமாக ஒழிக்க முடியாமல் உள்ளோம்.. குழந்தை திருமணத்திற்கு எதிரான சட்ட நடைமுறைகள் அதிகமாக இருந்தபோதிலும்கூட, மேற்கண்ட கொடுமைகள் அடிக்கடி நடந்து, நம்முடைய நாட்டையே தலைகுனிய வைத்துவிடுகிறது.. இதில், குழந்தை திருமணங்களை தடுப்பதற்கான விழிப்புணர்வுகளும் விடாமல் வழங்கப்பட்டு வருகின்றன. எனினும் நேற்றுகூட தெலுங்கானா மாநிலத்தில் ஒரு அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது..
குழந்தை பருவத்திலேயே, பெண் பிள்ளைகளுக்கு திருமணம் செய்து வைக்கும் போக்கு, தமிழ்நாட்டிலும் நடந்து கொண்டுதானிருக்கிறது.. இப்படி திருமணம் செய்வதால், அந்த பிஞ்சு குழந்தைகளின் சமூக வாழ்க்கை மட்டுமல்ல, அவர்களது அடிப்படை உடலியல் ஆரோக்கியமும் சேர்ந்து கெட்டுப்போகின்றன.

ஊட்டச்சத்து குறைபாடுகள்
அதுமட்டுமல்ல, ஒரு குழந்தையே, இன்னொரு குழந்தையை பெற்றெடுப்பதால், பிறக்கும் குழந்தைகளும் ஊட்டச்சத்து குறைபாடுகளை கொண்ட குழந்தைகளாக பிறந்துவிடுகின்றன.. இதனால், கருவுற்ற குழந்தையும் பாதிப்புகளுக்குள்ளாகிவிடுகின்றன.. இதனால் பெண் சிசு கொலைகளும் பெருகிவிடுகின்றன.
அந்தவகையில் ,பெண்சிசு கொலை அதிகமாக நடைபெறும் மாவட்டங்களில், விழுப்புரம், திண்டுக்கல், ஈரோடு, கரூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, தேனி போன்றவை முன்னணியில் இருப்பது வேதனையாக உள்ளது.. மேற்கண்ட மாவட்டங்களில் நம்முடைய தமிழக அரசு மிகுந்த கவனத்தை செலுத்தி வருகிறது என்றாலும், முழுமையாக தடுத்து நிறுத்த முடியவில்லை..
கிருஷ்ணகிரி அரசு பள்ளி
சமீபத்தில் கிருஷ்ணகிரி காவேரிப்பட்டணம் பகுதியை சேர்ந்த 25 வயது இளைஞருக்கும்,
அரசு பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வரும் மாணவிக்கும், அவரது பெற்றோரே முன்னின்று திருமணம் செய்து வைத்துள்ளனர்.. திருமணம் முடிந்து மறுநாளே கழுத்தில் தாலிக்கயிறுடன் வகுப்பறைக்குள் அந்த மாணவி நுழைந்ததை கண்டு, ஆசிரியர்கள் அதிர்ச்சி அடைந்தனர்... உடனே மாணவியை அழைத்து விசாரித்தபோதுதான், தன்னுடைய திருமணத்தை பற்றி அழுதுகொண்டே சொல்லியிருக்கிறார்.
பிறகு வகுப்பு ஆசிரியர்களே சமூக நலத்துறை அதிகாரிகளுக்கும்,குழந்தைகள் நல அலுவலர்களுக்கும் தகவல் தந்து வரவழைத்தனர்.. சம்பந்தப்பட்ட மாணவியிடம் விசாரணை நடத்தியதுடன், மாணவி மற்றும் மணமகனின் பெற்றோர், மணமகன் ஆகிய 5 பேர் மீதும் வழக்குப் பதிவு செய்தது நினைவிருக்கலாம்.
8ம் வகுப்பு மாணவி தாலி
இதோ பக்கத்திலுள்ள தெலங்கானாவிலும் இதே துயரம் நடந்துள்ளது.. ரங்காரெட்டி மாவட்டம் நந்திகாமா பகுதியைச் சேர்ந்த அந்த பெண்ணுக்கு திருமணமாகி, 13 வயதில் மகளும், ஒரு மகனும் உள்ளனர். இந்த பெண்ணின் கணவர் இறந்துவிட்டதால் கூலி வேலை செய்து குடும்பத்தை காப்பாற்றி வருகிறார்..
13 வயது மகள் அரசுப் பள்ளியில் 8ம் வகுப்பு படித்து வரும்நிலையில், மகளுக்கு திருமணம் செய்து வைக்க முடிவெடுத்தார் அந்த பெண்.. இதற்காக 40 வயதான ஸ்ரீனிவாஸ் கவுடுவுடன் கடந்த மே 28ம் தேதி உறவினர்கள் முன்னிலையில் திருமணத்தையும் நடத்தியிருக்கிறார்..
ஆசிரியர்களிடம் கதறி அழுத மாணவி
ஆனால் சிறுமிக்கு இந்த திருமணத்தில் ஆரம்பத்திலிருந்தே விருப்பமில்லை.. எனினும் கட்டாயப்படுத்தி திருமணத்தை நடத்தியிருக்கிறார்கள்.. திருமணம் முடிந்த பிறகும்கூட, தான் பள்ளிக்கு சென்று படிக்க வேண்டும் என்று அடம் பிடித்துள்ளார்.. இதையடுத்து, கடந்த வாரம் முதல் பள்ளிக்கு அனுப்பி வைத்தனர்.
பள்ளிக்கு சென்ற முதல்நாளே மாணவி, தன்னுடைய ஆசிரியர்களிடம் நடந்த திருமணத்தை பற்றி சொல்லி கதறி அழுதுள்ளார்.. இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த ஆசிரியர்கள் போலீசாருக்கு தகவல் தந்தனர்.. விரைந்து வந்த போலீசார், மாணவியிடம் புகாரை பெற்று, அவரது அம்மா, புது மாப்பிள்ளை ஸ்ரீநிவாஸ் கவுடு, புரோக்கர் என 3 பேரையுமே கைது செய்துள்ளனர்.. இவர்கள் மீது குழந்தை திருமண தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கும் பதிவு செய்து விசாரித்து கொண்டிருக்கிறார்கள்..!!
-
ஹார்முஸில் இறங்கும் இந்திய கடற்படை.. நடுக்கடலில் சிக்கியுள்ள இந்திய கப்பல்களை மீட்க அதிரடி ஆபரேஷன் -
நாய்க்கு கூட நன்றி இருக்கும்.. எடப்பாடி பழனிசாமி குறித்து சசிகலா விமர்சனம் -
கடைசி சான்ஸ்.. மிஸ் பண்ணிடாதீங்க.. பிறப்புச் சான்றிதழில் வருது மேஜர் முடிவு.. ஆவணங்களை ரெடி பண்ணுங்க -
அஜிதா ஆடிய மைண்ட் கேம்.. தவெக-வை தவிக்கவிட்டு திமுக பக்கம் தாவ இதுதான் காரணமா? தூத்துக்குடி மாஸ் -
பேசி முடித்ததுமே சரிந்த பாமக நிறுவனர் ராமதாஸ்.. கேள்விப்பட்டதும் உடனே போன் போட்ட முதல்வர் ஸ்டாலின்! -
”5 கேப்டன் இருந்தும் என் பக்கத்துல இருக்கான் மச்சா” மும்பை அணியை செய்யும் சிஎஸ்கே! தெறிக்கும் மீம்ஸ் -
LIK vs TN 2026 box office: மூன்று நாள் முடிவில் பிரதீப் ரங்கநாதன் Vs நட்டி யாருக்கு வெற்றி? வசூல் நிலவரம் -
யாருங்க இந்த ஐடியாலாம் தருவது? தவெக விஜய் கொடுத்த வாக்குறுதியில்.. இருக்கும் பெரிய ஓட்டை! -
'ஜனநாயகன்' பட லீக்கில் என்ன நடந்தது.. தமிழக காவல்துறை முழு விளக்கம் -
சாத்தூரில் நயினார் வாங்கிய காத்து.. பாஜக தேசிய தலைவரையே கூட்டி வந்தும் கூட்டம் இல்லை -
ஆட்டம் ஆரம்பம்.. முதல் அடி தங்கம், வெள்ளி விலை.. இந்தியாவில் விடியும் முன்பே ஷாக்! -
ஹார்முஸில் வழிந்தோடும் ‘ரத்தம்’? பீதியில் உலக நாடுகள்.. கண்ணி வெடிகள் வேற குவிந்து கிடக்குதே












Click it and Unblock the Notifications