உயர பறந்த தேமுதிக.. அதலபாதாளத்தில் தள்ளி விட்டாரே பிரேமலதா.. இளவரசி மகள் வருத்தம்
Recommended Video

சென்னை: "உயரத்தில் இருந்த ஒரு கட்சியை அதல பாதாளத்தில் தள்ளி விட்டது பிரேமலதாவும், சுதீஷும் தான்" என்று இளவரசியின் மகள் கிருஷ்ணபிரியா தெரிவித்துள்ளார்.
நேற்று பிரேமலதா செய்தியாளர்கள் சந்திப்பின்போது ஏடாகூடமாக நடந்துகொண்டாலும், ஒரு விஷயத்தை சொன்னார். "இன்றைய அதிமுக ஆட்சியே எங்கள் தேமுதிகவின் தயவால்தான் நடக்கிறது" என்று.
எதை வைத்து பிரேமலதா அதை சொன்னார் என்று தெரியாது. உண்மையில் அதிமுகவுடன் முதல் முறையாக தேமுதிக கூட்டணி வைத்தபோது, அந்த தேர்தலால்தான் அக்கட்சி உயிர் பிழைத்தது. இல்லாவிட்டால் அது அப்போதே காணாமல் போயிருக்கும்.

காலியானது கூடாரம்
அடுத்து கடந்த சட்டசபைத் தேர்தலின்போது எல்லோருடனும் பேரம் பேசி எதுவும் படியாமல், மக்கள் நலக்கூட்டணி அமைத்து மொத்தமாக காலியாகிப் போனது தேமுதிக. அதிமுக மீண்டும் வென்றது. அந்த தேர்தலில் அதிமுக அல்லது திமுக யாருடன் சேர்ந்திருந்தாலும் தேமுதிக நிச்சயம் பலன் பெற்றிருக்கும். ஆனால் அதைத் தவறி விட்டது. அதன் பிறகுதான் தேமுதிக சிதறிப் போனது.
|
கிருஷ்ணபிரியா
இந்நிலையில்தான் கிருஷ்ணபிரியா ஒரு ட்வீட் போட்டுள்ளார். சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலாவுடன் சேர்ந்து சிறைக்கு சென்ற இளவரசியின் மகள் கிருஷ்ணப்ரியா. அவ்வப்போது அரசியல் கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்.

சதீஷ், பிரேமலதா
அதில், "2006 முதல் தே.மு.தி.க , திரு விஜயகாந்த் அவர்களால் , அடைந்த உயரத்தின் அடையாளங்கள் எல்லாம் அழிக்கப்பட்டு , அதல பாதாளம் செல்லகூடிய அறிகுறிகளெல்லாம் அருமையாக தென்படுகிறது. அவ்வாறான ஒரு நிலைக்கு அக்கட்சியை தள்ளியதில் சம பங்கு வகிக்கிறார்கள் திருமதி பிரேமலதாவும் , திரு சுதீஷும்" என்று பதிவிட்டுள்ளார். கிருஷ்ணபிரியா மீதான விருப்பு-வெறுப்பு என்பதெல்லாம் தாண்டி, இந்த ட்வீட்டை மட்டுமே பார்த்தோமானால், அப்பட்டமாக உண்மையை வெளிப்படுத்தி இருக்கிறார்.

உயரம்
இதுவரை யாருமே அதிமுக அன்று விஜயகாந்த்தை தூக்கி உயர்த்தியதை பேசாமலே இருக்கிறார்கள், எல்லாவற்றையும் இன்றைய அதிமுக தலைமை மறந்துவிட்டதா என்று தெரியவில்லை. ஆனால் விஜயகாந்த எட்ட முடியாத உயரத்துக்கு போனது எந்த அளவு உண்மையோ அதே அளவு உண்மைதான் அதல பாதாளத்துக்கும் போனது.

தீதும் நன்றும்...
இதில் விஜயகாந்த்துக்கும் பங்கு இல்லை என்று சொல்ல முடியாது. அவருக்கு இன்றைக்குதான் உடம்பு சரியில்லை. அன்று நன்றாக இருந்தபோதே குடும்பத்தாரை கட்சிக்குள் விடாமல் சுதாரிக்க தவறியது விஜயகாந்த்தான்., "தீதும் நன்றும் பிறர் தரர் வாரா" என்று விஜயகாந்த்துக்கும்தான் பொருந்தும்.
-
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்? -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
திமுக-அதிமுக இடையே கடும் போட்டி.. ஆட்சியை பிடிப்பது யார்? ஆட்டத்திலேயே இல்லாத தவெக! புதிய சர்வே -
யார் அந்த அதிர்ஷ்டசாலி? நகைக்கடை, விவசாயக்கடன் தள்ளுபடி, மாதம் 10000 சலுகை? விவசாயிகளின் செம திட்டம் -
சொதப்பிட்டீங்களே.. இப்போ பாருங்க போக முடியல.. கடுப்பான விஜய்.. காரணம் புஸ்ஸி, ஆதவ்? என்னாச்சு? -
திடீரென வீடியோ வெளியிட்டு மதுரை மத்திய தொகுதி வேட்பாளர் சுந்தர் சி உருக்கம்! பிடிஆர் இருக்காரே! -
சிலிண்டர் ஏஜென்சி வைத்திருக்கும் நண்பனின் தந்தைக்கு மாதம் 1.90 லட்சம் வருமானம்.. நெட்டிசன் தகவல் -
Free Fridge: அதிமுகவின் இலவச பிரிட்ஜ்! யாருக்கெல்லாம் கிடைக்கும்? எவ்வளவு ரூபாய்க்கு இருக்கும்? -
எவ்வளவு வேகம்! சிட்டிக்கு நடுவே வளர்ந்து நிற்கும் ஸ்டீல் ராட்சசன்.. சென்னையின் காஸ்ட்லி ப்ராஜெக்ட் -
ஸ்டாலின் தான் சிறந்த CM வேட்பாளர்.. பின்னாலேயே துரத்தும் எடப்பாடி.. விஜய்க்கு அதிர்ச்சி! புதிய சர்வே -
தவெகவில் விஜய்க்கு அடுத்ததாக அதிக சொத்து உள்ள நபர் இவரா? அதுவும் இத்தனை கோடி! ஆச்சரியத்தில் நெட்டிசன்கள்












Click it and Unblock the Notifications