கே.எஸ்.அழகிரி Vs செல்வப்பெருந்தகை! அனல் பறக்கும் அறிக்கை யுத்தம்! இங்கு தலைவர் யாருங்க?

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழக காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் இவரா? அவரா? என குழம்பிப் போகும் அளவுக்கு கே.எஸ்.அழகிரியும், செல்வப்பெருந்தகையும் அறிக்கை யுத்தம் நடத்தி வருகிறார்கள்.

உதாரணத்துக்கு கேஸ் சிலிண்டர் விலை குறைப்பு குறித்து அழகிரி அறிக்கை விடுத்த மூன்று மணி நேரத்தில் அதே சப்ஜெக்டில் செல்வப்பெருந்தகையிடம் இருந்து ஒரு அறிக்கை வருகிறது. இப்படி பல எடுத்துக்காட்டுகளை கூறலாம்.

KS Alagiri and Selvaperunthagai are fighting a statement war to the point of confusion.

தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே.எஸ்.அழகிரி அறிக்கை விடுகிறாரோ இல்லையோ செல்வப்பெருந்தகை எம்.எல்.ஏ. குறைந்தது 3 நாட்களுக்கு ஒரு முறையாது ஏதேனும் ஒரு விவகாரத்தை ஹைலைட் செய்து அறிக்கை விடுத்து பரபரப்பை கிளப்பிவிடுகிறார்.

இதன் மூலம் அரசியலில் தாம் ஆக்டிவாக இருப்பதை செல்வப்பெருந்தகை நிரூபித்துவருகிறார். இதில் குறிப்பிட வேண்டிய விவகாரம் என்னவென்றால், கே.எஸ்.அழகிரிக்கு அறிக்கை தயார் செய்து கொடுப்பதும், செல்வப்பெருந்தகைக்கு அறிக்கை தயார் செய்து கொடுப்பதும் வெவ்வேறு நபர்கள் என்றாலும் அதனை வெளியிடுவது என்னவோ தமிழக காங்கிரஸ் கமிட்டி தான்.

ஏற்கனவே அவர்கள் இருவருக்கும் இடையே தமிழக காங்கிரஸ் கமிட்டியின் புதிய தலைவர் பஞ்சாயத்து ஓடிக்கொண்டிருக்கும் நிலையில் அண்மைக்காலமாக அறிக்கை யுத்தமும் நடைபெற்று வருகிறது. இதன் மூலம் தமிழக காங்கிரஸ் கமிட்டியையும் கோஷ்டிப் பூசலையும் பிரிக்கவே முடியாது என்பது தெரியவருகிறது.

தமிழக காங்கிரஸ் கமிட்டியின் புதிய தலைவர் பதவிக்கான ரேஸில் செல்வப்பெருந்தகையும் இருக்கிறார் என்பது இங்கு கவனிக்கவேண்டியது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+