கொங்கு நாடு என்பது கற்பனை- தமிழ்நாட்டில் பிரிவினைவாதத்துக்கு இடம் கிடையாது: கே.எஸ். அழகிரி
சென்னை: கொங்கு நாடு என்பது கற்பனை; தமிழ்நாட்டில் பிரிவினைவாதத்துக்கு இடம் கிடையாது என்று தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ். அழகிரி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
Recommended Video
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவருமான பா.ராமச்சந்திரன் நூற்றாண்டு விழா கொண்டாட்டம் சென்னை சத்தியமூர்த்தி பவனில் இன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பா.ராமச்சந்திரன் உருவப்படத்துக்கு கே.எஸ். அழகிரி மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

இதன்பின்னர் செய்தியாளர்களிடம் கே.எஸ். அழகிரி கூறியதாவது: தமிழகத்தில் பிரிவினைவாதம் வேண்டாம். வேளாண்துறையில் வளர்ச்சிதான் இங்கு தேவை.
கொங்கு நாடு என்பது அமையாது; அது ஒரு கற்பனை. தமிழக மக்கள் பிரிவினையை ஒருபோதும் ஏற்கமாட்டார்கள். ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு என்பதுதான் தமிழகத்தின் குரல்.
தமிழர்கள் ஒற்றுமையை தான் என்றும் விரும்புவார்கள் பாஜகவின் இத்தகைய பிரித்தாளும் சூழ்ச்சிகளை காங்கிரஸ் வன்மையாக கண்டிக்கிறது. தமிழகத்தின் வெற்றி என்பது அது பரந்துபட்ட தமிழகமாக இருப்பதால்தான் உள்ளது. இவ்வாறு கே.எஸ். அழகிரி தெரிவித்தார்.
-
பாஜக கொடியை நீக்கிய அண்ணாமலை.. உருவாகும் 'மக்கள் சக்தி இயக்கம்'.. காரில் வரும் புதிய கொடி! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
பாஜக போல் வேண்டாம்.. அண்ணாமலையின் பிளான் என்ன? கிறிஸ்தவர் + இஸ்லாமியர்களையும் அரவணைத்து தனிக்கட்சி -
அண்ணாமலை மாதிரி இனி ஒருத்தர் வர மாட்டார்.. பாஜகவிலிருந்து விலகியதால்.. கலங்கிய ஆர்எஸ்எஸ்! -
அடிச்சு ஆடுங்க ஜி.. இனி உங்க காலம்! சாமியாரைப் பார்த்து ஐடியா கேட்ட அண்ணாமலை.! இது தான் காரணமா? -
ராஜ்யசபா சீட் கொடுத்த பாஜக தலைமை.. திட்டவட்டமாக மறுத்த அண்ணாமலை.. அடுத்த 6 மாதத்திற்கு மெகா பிளான் -
"வீட்டு வேலை செய்த பெண் டூ மாண்புமிகு அமைச்சர்.." மேற்கு வங்கத்தில் பாஜக செய்த சம்பவம்! -
பாஜகவில் இருந்து விலகினார் அண்ணாமலை! நிதினிடம் தமிழக பாஜக மீது அடுக்கடுக்கான புகார் -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
"சிங்க பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத ஆட்சி!" பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.. சாடிய நயினார் நாகேந்திரன் -
CBSE: மொபைல்களில் ஸ்கேன் செய்யப்பட்ட விடைத்தாள்கள்! குற்றச்சாட்டுகளை அடுக்கும் ராகுல் காந்தி!












Click it and Unblock the Notifications