கருணாநிதிக்கு பேனா சின்னம் அமைக்கக் கூடாது என்பவர்களின் டி.என்.ஏ.வை பரிசோதிக்கணும் -கே.எஸ்.அழகிரி
சென்னை: கருணாநிதிக்கு பேனா சின்னம் அமைக்கக் கூடாது என்பவர்களின் டி.என்.ஏ.வை பரிசோதிக்க வேண்டும் என தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி கூறியிருக்கிறார்.
கருணாநிதிக்கு பேனா சின்னம் அமைக்க விடமாட்டேன் என அண்மையில் சீமான் எதிர்ப்பு தெரிவித்திருந்த நிலையில் கே.எஸ்.அழகிரி டி.என்.ஏ.சோதனை கோரியிருக்கிறார்.
தமிழக காங்கிரஸ் கமிட்டியை பொறுத்தவரை கருணாநிதியின் நினைவாக பேனாச் சின்னம் அமைப்பதை வரவேற்பதாக அவர் தெரிவித்திருக்கிறார்.

பேனாச் சின்னம்
சென்னை மெரினாவில் கருணாநிதியின் நினைவாக கடலில் ரூ.80 கோடி செலவில் பேனாச் சின்னம் அமைக்கப்படவுள்ளதாக ஒரு தகவல் கசிந்தது. தமிழக அரசு சார்பில் அதிகாரப் பூர்வமாக அறிவிக்கப்படாவிட்டாலும் கூட அதற்கு வரவேற்பும், எதிர்ப்பும் அரசியல் கட்சியினர் மத்தியில் காண முடிந்தது. கருணாநிதிக்கு நினைவிடம் கட்டிக்கொள்வதோடு நின்று கொள்ள வேண்டும், பேனாச் சின்னம் அமைப்பதெல்லாம் சேட்டை நான் விடமாடேன் எனக் கூறியிருந்தார் நாம் தமிழர் கட்சியின் முதன்மை ஒருங்கிணைப்பாளர் சீமான்.

சீமானுக்கு பதிலடி
இந்நிலையில் கருணாநிதிக்கு பேனா சின்னம் அமைக்கக் கூடாது என்பவர்களின் டி.என்.ஏ.வை பரிசோதிக்க வேண்டும் எனக் கூறி பரபரப்பை கிளப்பியிருக்கிறார் தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி.மேலும், பேனாச் சின்னத்தை பொறுத்தவரை இலக்கிய நயமிக்கது என்றும் ரசனையானது எனவும் கே.எஸ்.அழகிரி கூறியிருக்கிறார். கருணாநிதிக்கு பேனா சின்னம் அமைக்கக் கூடாது என சீமான் எதிர்ப்பு தெரிவித்துள்ள நிலையில் கே.எஸ்.அழகிரி டி.என்.ஏ. பரிசோதனை நடத்தக் கோரியிருப்பது கவனிக்கத்தக்கது.

தவறு இல்லை
தன் வாழ்நாள் முழுவதும் எழுதியவர் கருணாநிதி என்றும் தமிழ் மக்களுக்காக உழைத்த ஒருவருக்கு அவரது நினைவாக பேனாச் சின்னம் அமைப்பதில் எந்த தவறும் இல்லை என கே.எஸ்.அழகிரி தெரிவித்தார். தமிழக காங்கிரஸ் கமிட்டியை பொறுத்தவரை கருணாநிதியின் நினைவாக பேனாச் சின்னம் அமைப்பதை வரவேற்பதாக அவர் கூறியிருக்கிறார்.
Recommended Video

மரபணு சோதனை
மேலும், கருணாநிதியின் சிலையை வைக்காமல் பேனாவின் சின்னத்தை தானே வைக்கிறார்கள், அதிலென்ன தவறிருக்கிறது என வினவினார். இதனிடையே கருணாநிதிக்கு பேனாச் சின்னம் அமைக்க எதிர்ப்பு தெரிவிப்பவர்களின் மரபணுவை பரிசோதிக்க வேண்டும் என கே.எஸ்.அழகிரி கூறியிருப்பது யார் மீதோ அவர் உச்சக்கட்ட கோபத்தில் இருப்பது புரிகிறது.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications