ரஜினி கமலை இணைத்து புதிய படம்.. படையப்பா ரீ ரிலீஸ்.. கேஎஸ் ரவிகுமார் சொன்ன முக்கியமான பாயிண்ட்
சென்னை: படையப்பா திரைப்படம் 27 ஆண்டுகளுக்குப் பிறகு ரீ-ரிலீஸ் தயாராக உள்ளது, விரைவில் வெளியாகும். ரஜினி மற்றும் கமலுடன் இணைந்து இயக்க நான் தயாராக இருக்கிறேன், அதை அவர்கள் தான் முடிவு செய்ய வேண்டும் என்று காஞ்சிபுரத்தில் திரைப்பட இயக்குநர் கே.எஸ். ரவிக்குமார் பேட்டியளித்தார்.
காஞ்சிபுரத்தில் உணவகம் ஒன்றின் திறப்பு விழாவில் கலந்து கொண்டு பிரபல இயக்குநர் கேஎஸ் ரவிகுமார் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் செய்தியாளர்களின் பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளித்தார். அப்போது அவர் கூறும் போது, பல்வேறு படங்கள் ரீ ரிலீசுக்கு தயாராகி வருகிறது. படையப்பா படத்தை தயார் செய்து வைத்துள்ளோம்.

படத்தை ரீ ரிலீஸ் செய்வதற்கு தேவையான ஆடியோ தொழில்நுடபம் மற்றும் வீடியோக்களை ஹெச்டி தரத்தில் டிஜிட்டலுக்கு மாற்றுவது உள்பட பல்வேறு விஷயங்களை ரெடி செய்திருக்கிறோம். படையப்பா படத்தின் தயாரிப்பாளர் ரஜினி சார் தான். அவர் தான் படத்தை எப்போது ரிலீஸ் செய்ய வேண்டும் என்று முடிவு செய்ய வேண்டும்.
முத்து படம் வந்து கவிதாலயா பண்ணிட்டாங்க.. இரண்டு வருடம் முன்பு செய்தார்கள். படையப்பா படம் வந்து 27 வருடம் ஆகிடுச்சு.. நிறைய படங்களை ரீ ரிலீசுக்கு கேட்கிறார்கள். அவ்வை சண்முகி, தெனாலி, தசவதாரம், வில்லன், வரலாறு என பல்வேறு படங்களை கேட்கிறார்கள்... சேரன் பாண்டியன், நட்புக்காக,நாட்டாமை போன்ற பல்வேறு படங்களை ரீ ரிலீஸ் பண்ணலாம்.. படங்களை ஒரு கேப் பார்த்து தியேட்டர்களில் மறுபடியும் ரிலீஸ் செய்தால், ஓரளவு கலெக்சன் வரும்..
எந்தப் படம் எடுத்தாலும் கலவையான விமர்சனங்கள் வருவது உண்டு, அந்த காலம் படம் வெளியான பிறகு விமர்சனங்கள் பேச வாய்ப்பில்லை தற்பொழுது கலவையான விமர்சனங்கள் பேச வாய்ப்பு கிடைக்கிறது, இதில் படத்தின் முடிவில் எவ்வளவு கலெக்சன் என்பது தான் தீர்மானிக்கும்" இவ்வாறு கூறினார்.
அண்மையில் கேப்டன் பிரபாகரன் திரைப்படம் மீண்டும் ரிலீஸ் ஆகி வசூலில் வெற்றி நடை போட்டு வருகிறது. தயாரிப்பாளருக்கு நல்ல லாபத்தை தந்துள்ளது. இதற்கு முன்னரும் பல்வேறு திரைப்படங்கள் மீண்டும் ரிலீஸ் ஆகி நல்ல வசூலை பெற்றுள்ளன. எனவே பழைய ஹிட்டான திரைப்படங்களை மறுபடியும் தியேட்டர்களில் ரிலீஸ் செய்ய தயாரிப்பாளர்களும், இயக்குநர்களும் ஆர்வம் காட்டி வருகிறார்கள். அந்த வகையில் ரஜினிகாந்தின் திரைப்படங்கள் சில விரைவில் ரிலீஸ் ஆக வாய்ப்பு உள்ளது. கமல்ஹாசனின் தெனாலி, அவ்வை சண்முகியும் ரிலீஸ் ஆக வாய்ப்பு உள்ளது. அஜித்தின் வரலாறு, வில்லன் திரைப்படமும் மறுபடியும் ரிலீஸ் ஆக வாய்ப்பு உள்ளது.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications