2 அருமையான தலைவர்களை அடுத்தடுத்து இழந்து விட்டோம்.. குஷ்பு வேதனை #Arunjaitley
அருண் ஜெட்லி மரணம் குறித்து குஷ்பு ட்வீட் போட்டுள்ளார்
Recommended Video
சென்னை: இந்தியா அடுத்தடுத்து 2 அருமையான தலைவர்களை இழந்துள்ளதாக நடிகை குஷ்பு வேதனை தெரிவித்துள்ளார்.
முன்னாள் மத்திய அமைச்சர் அருண் ஜேட்லி உடல் நலக்குறைவு காரணமாக இன்று பிற்பகல் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் மரணமடைந்தார்.
நிதியமைச்சராக, சட்டத்துறை அமைச்சராக பல்வேறு பதவிகளை வகித்தவர் அருண் ஜேட்லி. பன்முகம் கொண்ட அவரது மறைவால் பாஜக பெரும் துயரில் மூழ்கியுள்ளது.

குஷ்பு
சமீபத்தில்தான் முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் மரணமடைந்தார். இந்த நிலையில் தற்போது அருண் ஜேட்லியின் மறைவுச் செய்தி வந்துள்ளது. இதுகுறித்து நடிகை குஷ்பு வேதனை தெரிவித்துள்ளார்.
|
பெரும் வேதனை
முன்னாள் நிதியமைச்சர் அருண் ஜேட்லியின் மறைவுச் செய்தி அறிந்து வேதனை அடைந்தேன். அவர் ஒரு மிகச் சிறந்த ஜென்டில்மேன். அரசியலுக்கு அப்பாற்பட்டு அனைவராலும் நேசிக்கப்பட்டவர்.

மிஸ் செய்வோம்
இந்தியா நிச்சயம் அவரை மிஸ் செய்யும். அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார் நடிகை குஷ்பு.
|
அடுத்தடுத்து இழப்பு
இந்தியா அடுத்தடுத்து 2 அருமையான தலைவர்களை குறுகிய காலத்தில் இழந்துள்ளது. முதலில் சுஷ்மா சுவராஜ். இப்போது அருண் ஜேட்லி. சாகும் வயதில்லை இவர்களுக்கு. அதுவும் குறுகிய காலத்தில் இறந்துள்ளனர். இருவருமே அருமையான தலைவர்கள். மனது சொன்னபடி கேட்டு நடந்தவர்கள் என்று குஷ்பு இன்னொரு டிவீட்டில் இரங்கல் தெரிவித்துள்ளார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications