வைரமுத்துவிற்கு விளக்கம் தர வாய்ப்பு அளிக்க வேண்டும்.. குஷ்பு கருத்து
வைரமுத்து கண்ணியமான மனிதர்களுள் ஒருவர் என குஷ்பு தெரிவித்துள்ளார்.
சென்னை: நான் என் வாழ்க்கையில் பார்த்தவர்களில், வைரமுத்து கண்ணியமான மனிதர்களுள் ஒருவர் என்றும், வைரமுத்துவிற்கு விளக்கம் தர வாய்ப்பு அளிக்க வேண்டும் என்றும் காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் குஷ்பு தெரிவித்துள்ளார்.
பிரபல தனியார் தொலைக்காட்சி ஒன்றிற்கு காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் குஷ்பு பேட்டியளித்தார். அப்போது, மீ டூ விவகாரம் மற்றும் கமலின் காங்கிரசுடன் கூட்டணி என்ற பேச்சு குறித்து குஷ்புவிடம் கருத்து கேட்கப்பட்டது.

வந்தால் வரவேற்போம்
அதற்கு பதிலளித்த குஷ்பு, "கமல் வந்தால் வரவேற்போம். திமுகவுடன் கூட்டணி உடையும் என்று கமல்தான் சொல்கிறார். அது அவரது கருத்தாக இருக்கலாம். அதேபோல் கூட்டணி வைக்க ரெடி என்றும் அவரேதான் சொல்கிறார். காங்கிரஸ் சார்பில், திமுகவுடன் கூட்டணி முறிவு என்றோ கமலுடன் கூட்டணி என்றோ சொல்லவில்லையே.. அதனால் கமல் எங்களிடம் வந்தால் நிச்சயம் வரவேற்போம்" என்றார்.

நடிகைகள் தவறானவர்களா?
பிறகு மீ டூ புகார் குறித்த கேள்விக்கு, "படுக்கைக்கு மறுத்ததால் சில படங்களில் நடிப்பதற்கு வாய்ப்புகள் கிடைக்கவில்லை என சில நடிகைகள் கூறுகின்றனர். அப்படியெனில், அந்த படங்களில் நடித்த நடிகைகள் தவறானவர்களா? என கேள்வி எழுகிறது.

பாலியல் தொல்லை
எனவே, புகார் கூறுவதற்கு முன்பு யோசித்து பேச வேண்டும். பெயரை மட்டும் வெளியே சொல்லி, ஒருவரை குற்றம் சொல்லாமல், சட்ட ரீதியாகவும் அந்த பிரச்சனையை அணுக வேண்டும். நான் 30 வருடங்களுக்கும் மேல் சினிமாவில் இருக்கிறேன். ஆனால், பாலியல் தொல்லைகளை சந்திக்கவில்லை.

வைரமுத்துவுக்கு வாய்ப்பு
மீ டூ இயக்கம் தேவைதான். வைரமுத்து பற்றி சின்மயி புகார் கூறியுள்ளார். ஆனால், அதேசமயம், வைரமுத்துவிற்கு விளக்கம் அளிக்க வாய்ப்பு அளிக்க வேண்டும். இவ்வாறு குஷ்பு அந்த பேட்டியில் தெரிவித்திருந்தார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications