நியாயமா பார்த்தா ’பராசக்தி’யை தடை செய்திருக்கனும்! ஜனநாயகன் வராதது எனக்கு வருத்தம்! குஷ்பூ ஓபன் டாக்
சென்னை: நடிகர் விஜயின் ஜனநாயகன் படத்தை வெளியிட சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ள நிலையில், படம் வெளியாக முடியாத நிலையில் உள்ளது. இந்நிலையில், ஒரு விஜய் ரசிகராக ஜனநாயகன் படம் வெளிவராததற்கு நானும் எனது மகளும் வருத்தப்படுகிறோம் என நடிகையும், பாஜக மகளிர் அணி நிர்வாகியுமான குஷ்பூ கூறியுள்ளார்.
பாஜக மகளிர் அணி நிர்வாகி குஷ்பூ சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறுகையில்," பராசக்தி படம் வெளிவந்துள்ளதுக்கும் ஜனநாயகம் படம் வெளிவராததற்கும் மத்திய அரசை எப்படி குற்றம் சாட்ட முடியும்.
மத்திய அரசு ஒரு படத்தை தடுக்க வேண்டுமென்றால் ரெட் ஜெயிண்ட் வெளியிடும் படத்தை தான் தடுக்க வேண்டும். ஏனென்றால் திமுகவை தான் எதிரியாக பார்க்கிறோம். இதைப் பற்றி தவறாக விமர்சனம் செய்யும் நபர்கள் கொஞ்சம் கூட யோசித்து பேச மாட்டார்களா?

நடிகை குஷ்பூ
ஒரு குழந்தை அழுதால் அது பசிக்கிறதால் அழுகிறது என்று பார்ப்பதில்லை. மத்திய அரசுதான் காரணம் என கூறுவது போல அவர்களை நான் என்ன சொல்வது என்று தெரியவில்லை. மத்திய சென்சார் போர்டு விதிமுறைகள் படி அனைத்து சான்றிதழ்களும் கிடைக்கப் பெற்ற பிறகுதான் படத்தின் வெளியீடு தேதிகளை அறிவிக்க வேண்டும். ஆனால் எந்த தயாரிப்பாளரும் இந்த விதிமுறைகளை பின்பற்றுவதில்லை. படத்தில் நடிக்கும் நடிகர்கள் மீது தவறு சொல்லவில்லை. தயாரிப்பாளர்கள் தான் தவறு செய்கிறார்கள்.
ஜனநாயகன்
நானும் எனது மகளும் மிகப்பெரிய விஜய்யின் ரசிகர்கள் அதன் அடிப்படையில் அவர் படம் வெளிவராவது மிகவும் வருத்தம் தான். மத்திய அரசு தடை செய்ய வேண்டும் என்றால் முதலில் பராசக்தியை தான் தடை செய்திருக்க வேண்டும். திசை திருப்புவதற்கு திமுக மத்திய அரசை குற்றம் சாட்டுகிறது. தமிழ்நாடு முதல்வர் மக்களை ஏமாற்ற வாய்க்கு வந்ததெல்லாம் சொல்கிறார். திமுக மக்களை எந்த அளவிற்கு ஏமாற்றுவார்கள் என அனைவருக்கும் தெரியும். கடந்த ஐந்து வருடங்களாக மக்களை ஏமாற்றும் வேலையை மட்டும் திமுக செய்து வருகிறது.
திமுக அரசு
இதற்கு முன்பு பொங்கல் பண்டிகைக்கு திமுக அரசு பணம் கொடுக்கவில்லை இந்த ஆண்டு தேர்தல் வருகிறது என்பதால் மூன்றாயிரம் ரூபாய் கொடுத்துள்ளனர். தேர்தல் நேரத்தில் ஆயிரம் பொய்களை சொல்லி மக்களை ஏமாற்றும் வேலையை திமுக செய்கிறது. ஊழலோட கூட்டணியில் தான் காங்கிரஸ் இருக்கிறது. திமுகவும் காங்கிரசும் சொல்வதை காதில் வாங்க கூடாது அவர்கள் ஏமாற்று வேலையை மட்டும் செய்கிறார்கள். கரூர் விவகாரத்தில் விஜய்தான் சிபிஐ விசாரணை வேண்டும் என கேட்டார் தற்போது சிபிஐ விசாரணை செய்கிறது அதை அவர்கள் பார்க்கதான் வேண்டும்.
பொங்கல் பரிசு
இந்த விபத்துக்கு காரணம் முழுக்க முழுக்க திமுக தான் என விஜய் கூறினார். தற்போது ஜனநாயகன் வெளியாகவில்லை என திமுக விஜய்க்கு ஆதரவு கொடுக்கிறது. தேர்தல் வருவதால் தான் பெண்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் ரேஷன் அட்டைகளுக்கு 3000 ரூபாய் மாணவ மாணவிகளுக்கு லேப்டாப் அனைத்தையும் திமுக கொடுக்கிறது. என்னைப் பொறுத்த வரைக்கும் எங்கள் கட்சி ஜெயிக்க வேண்டும் பிரதமர் தமிழ்நாடு வருகை குறித்து தற்போது என்னால் பேச முடியாது" என்றார்.
-
டிகே.சிவகுமார் என்ட்ரி.. விஜய் கொடுத்த பலம்.. அசைக்க முடியாத CBN.. வரலாற்று சம்பவம் மக்களே! -
கோட்டையில் முதல்வர் விஜய்யின் அசுர வேகம்.. பரந்தூர், FSI, ஹூண்டாய் மெகா டீல்.. ஒரே நாளில் அதிரடி! -
தவெக-வின் 'யு-டர்ன்' அரசியல்.. வெளுத்து வாங்கிய அன்புமணி -
எடப்பாடி பழனிசாமியை விஜய் சந்திக்காதது ஏன் தெரியுமா? இதென்ன ட்விஸ்ட் ? மொத்த அதிமுகவை அள்ளுதே தவெக -
முடிவுக்கு வந்த 9 மாத காத்திருப்பு.. தமிழக புதிய டிஜிபியாக மகேஷ்குமார் அகர்வால் இன்று பொறுப்பேற்பு! -
விஜய் சொன்ன ஒரு வரி... கமல் எழுதிய கடிதம்... ஸ்டாலின் நினைவுபடுத்திய கலைஞர்! இளையராஜா நெகிழ்ச்சி -
மகள் பற்றி விஜய் சந்தோஷமாக பேசினாரு.. அவ்ளோ மகிழ்ச்சி அவருக்கு! சர்ச்சைகளுக்கு மத்தியில் நடிகை ஓபன் -
ஸ்டாலினை ஓரங்கட்டிவிட்டு விஜய்யை வாரி அணைத்த ராகுல் காந்தி! பின்னணியில் டெல்லி மாஸ்டர் பிளான் -
உடனே வாங்க.. அதிகாரிகளை மீட்டிங் ரூமிற்கு அழைத்த விஜய்.. துளைச்சு எடுத்துட்டாரே.. வாத்தி ரெய்டு! -
மகள் கல்யாணத்திற்காக முதல்வர் விஜய்யை சந்தித்த குஷ்பு குடும்பம்.. வெளியே வந்ததும் உருக்கமான பதிவு -
13 மாவட்டங்களில் பெண் கலெக்டர்கள்.. விஜய்யின் சிங்கப்பெண் ரூட்.. மாவட்டம்தோறும் அதிரடி -
மதுரை மக்கள் அதிர்ச்சி.. திடீரென உயர்ந்த தனியார் பஸ் கட்டணம்! டீசல் விலை உயர்வு வேலையை காட்டியது












Click it and Unblock the Notifications