கண்ணீர் விட்ட குஷ்பு.. நொறுங்கிப் போன தொண்டர்கள்.. ஆயிரம் விளக்கு தொகுதியில் பரபரப்பு
சென்னை: நல்லாத்தான் பேசிக் கொண்டு இருந்தார் குஷ்பு.. ஆனால் ஒரு கட்டத்தில் அவரால் கட்டுப்படுத்த முடியவில்லை.. குரல் தளுதளுக்க உடைந்து லேசாக அழுதுவிட்டார்.
Recommended Video

குஷ்பு இப்படி உடைந்து போய் விம்மியதை பார்த்த பாஜக தொண்டர்களும் சோகத்தில் உறைந்து போயினர். இந்த உருக்கமான காட்சிகள் ஆயிரம் விளக்கு தொகுதியில் அரங்கேறின.
சென்னை ஆயிரம் விளக்கு தொகுதியில் பாஜக வேட்பாளராக குஷ்பு போட்டியிடுகிறார்.

வேட்பாளர் அறிமுகம்
இதையொட்டி, நடந்த வேட்பாளர் அறிமுக கூட்டத்தில் குஷ்பு பங்கேற்றார். அப்போது ரொம்பவே உணர்ச்சி மிகுந்தவராக இருந்தார் குஷ்பு. நான் வெற்றி பெற வேண்டும் என்று தனது தாய், கடவுளை வேண்டி வருவதாகவும், தாய் இல்லாமல் நான் இல்லை என்றும் குஷ்பு கூறினார்.

குஷ்பு அழுகை
கொஞ்சம் கடினமாக உழைத்தால் வெற்றி கிடைக்கும் என்ற நம்பிக்கை இருப்பதாகவும் அவர் கூறினார். தனது தாய்தான் சிறு வயதிலிருந்து தன்னை வளர்த்தார் என்று குஷ்பு கூறும்போது அவரையும் அறியாமல் குரல் உடைந்து போய் விட்டது. கண்களில் கண்ணீர் வடிந்தது. அதை துடைத்தபடியே பேசினார்.

தொண்டர்கள் சோகம்
குஷ்பு உடைந்துபோனதை பார்த்த பாஜக தொண்டர்களும் சோகமே உருவாக அமர்ந்திருந்தனர். இதனால் அந்த இடமே நெகிழ்ந்து போனது. பிறகு தன்னை தேற்றிக் கொண்டு வழக்கமான அழுத்தம் திருத்தமான பேச்சை ஆரம்பித்தார் குஷ்பு. இதன்பிறகுதான் அந்த இடமே இயல்பு நிலைக்கு வந்தது.

சீட் கேட்கவில்லை
குஷ்பு காங்கிரசில் மற்றும் அதற்கு முன்பு திமுகவில் இருந்தபோது, போட்டியிட சீட் கேட்கவில்லை என்று தனது பேச்சில் குறிப்பிட்டார். பாஜகதான் தனக்கு சீட் தந்து கவுரவித்துள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார். கடந்த லோக்சபா தேர்தலில் காங்கிரஸ் சார்பில் குஷ்பு போட்டியிட சீட் கேட்டார். அது தர மறுக்கப்பட்டதால், அவர் பாஜகவில் சேர்ந்தார் என்பதுதான் பரவலான பேச்சு. ஆனால், தான் சீட் கேட்கவில்லை என கூறியுள்ளார் குஷ்பு.
-
ஓரங்கட்டப்பட்ட அண்ணாமலை.. நீண்ட நாள் ரகசிய ஆயுதத்தை கையில் எடுக்க முடிவு! அதிரடி திட்டம் -
ஐபிஎஸ் டூ அரசியல்.. 5 பக்க லெட்டரில் முடிந்த 7 ஆண்டு பாஜக பயணம்.. அண்ணாமலைக்கு அடுத்தது என்ன? -
அந்த 2 லேடீஸ்..1 மாஜி தலை! பாஜக மண்ணைக் கவ்வ ‘இவர்கள்’ தான் காரணம்! அமித் ஷாவிடம் அடுக்கிய அண்ணாமலை! -
அண்ணாமலை முடிவால் கண்சிவந்த அமித்ஷா.. நயினாரை உடனே டெல்லி அழைத்த பாஜக மேலிடம்.. பாஜகவில் பரபரப்பு -
பாஜக கொடியை நீக்கிய அண்ணாமலை.. உருவாகும் 'மக்கள் சக்தி இயக்கம்'.. காரில் வரும் புதிய கொடி! -
ரொம்ப அவசரப்படாதீங்க அண்ணாமலை.. அமித் ஷா போட்ட அன்புக் கட்டளை! இன்னும் தமிழ்நாடு திரும்பாதது ஏன்? -
டெல்லி கொடுத்த ஸ்வீட் பாக்ஸ்.. அப்படியே அமுக்கிய தலைகள்! அடுக்கிய அண்ணாமலை! காங்கிரஸில் கலகம்! -
பழைய பன்னீர்செல்வமா வாங்க.. அண்ணாமலையை விடாத அமித் ஷா! பாஜக அள்ளிக் கொடுக்கும் ரெண்டு லட்டு! என்ன? -
பாஜக போல் வேண்டாம்.. அண்ணாமலையின் பிளான் என்ன? கிறிஸ்தவர் + இஸ்லாமியர்களையும் அரவணைத்து தனிக்கட்சி -
அடிச்சு ஆடுங்க ஜி.. இனி உங்க காலம்! சாமியாரைப் பார்த்து ஐடியா கேட்ட அண்ணாமலை.! இது தான் காரணமா? -
ராஜ்யசபா சீட் கொடுத்த பாஜக தலைமை.. திட்டவட்டமாக மறுத்த அண்ணாமலை.. அடுத்த 6 மாதத்திற்கு மெகா பிளான் -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு












Click it and Unblock the Notifications