பிடிஆரை தோற்கடிக்க புது டீம் போடும் குஷ்பு.. சுந்தர்.சிக்காக விஜயிடமே பேசிட்டாராமே.. ஏன்? பின்னணி!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தவெக தலைவர் விஜய்யை சந்திக்க அவரிடம் நேரம் கேட்டிருக்கிறார் பாஜக நடிகை குஷ்பு. அதிமுக-பாஜக கூட்டணியிலுள்ள புதிய நீதிக்கட்சிக்கு ஒதுக்கப்பட்ட மதுரை மத்திய தொகுதியில் குஷ்புவின் கணவரும் பிரபல சினிமா இயக்குநருமான சுந்தர்.சி வேட்பாளராக களத்தில் நிற்கிறார்.

சுயேட்சை சின்னத்தில் அதாவது புதியநீதிக்கட்சிக்காக ஒதுக்கப்படும் தனி சின்னத்தில் தான் நிற்க முடியும். அது, வெற்றியை பாதிக்கும் என கருதிய குஷ்பு, அதிமுகவின் இரட்டை இலை அல்லது பாஜகவின் தாமரை ஆகிய இரு சின்னங்களில் ஒரு சின்னத்தில் போட்டியிட முடிவு செய்தார். தாமரையை விட இலை தான் மலரும் என தீர்மானித்த குஷ்பு மற்றும் அவரது கணவர் சுந்தர்.சி இருவரும் யோசித்து இரட்டை இலையில் நிற்கவே முடிவு செய்தனர்.

PTR Palanivel Thiagarajan

இரட்டை இலை சின்னம்

அதற்கேற்ப, தங்கள் கூட்டணியில் போட்டியிடுகிற சிறிய கட்சிகள் இரட்டை இலையில் போட்டியிட வேண்டும் என்று அதிமுகவும், தாமரையில் போட்டியிட வேண்டுமென பாஜகவும் வலியுறுத்தின. இதனால் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகளில் இரட்டை இலையில் ஒரு தொகுதியிலும், தாமரையில் ஒரு தொகுதியிலும் போட்டியிடும் என நூதனமான ஒரு முடிவை எடுத்து அறிவித்தார் புதிய நீதிக்கட்சியின் தலைவர் ஏ.சி.சண்முகம். அதற்கேற்ப, சுந்தர்.சிக்கு மதுரை மத்திய தொகுதி ஒதுக்கியதுடன் அதிமுகவின் இரட்டை இலையில் போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டார்.

இதற்கு காரணம், இந்த தொகுதியில் அதிமுகவிற்கான வாக்கு வங்கியும், திமுக சார்பில் போட்டியிடும் அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜனுக்கு எதிராக அமைச்சர் மூர்த்தியின் செயல்பாடுகளும் தான். அதாவது, பிடிஆருக்கும் மூர்த்திக்கும் எப்போதுமே ஏழாம் பொருத்தம் தான். அதுவும் மதுரை அரசியலில் தன்னைத் தவிர வேறு யாரும் கோலோச்சக்கூடாது என்பதில் தெளிவான அரசியலை செய்து வருபவர் அமைச்சர் மூர்த்தி. அதனால், இந்த முறை பிடிஆரை தோற்கடிக்க மூர்த்தியின் ஆதரவாளர்கள் சைலண்டாக வொர்க் பண்ணுவார்கள் என எடப்பாடி பழனிசாமியே குஷ்புவிடம் சொல்லியிருக்கிறார்.

பிடிஆரை தோற்கடிக்க மூர்த்தியின் ஆதரவாளர்கள் வேலை

இந்த தொகுதியில் அதிமுக வாக்கு வங்கி, திமுகவுக்கு இணையாக இருக்கிறது. திமுகவில் நடக்கும் உள்கட்சி மோதலில் திமுகவின் வாக்குகள் கணிசமாக சிதற வாய்ப்பிருக்கிறது. அந்த வாக்குகள் நிச்சயமாக, நடிகர் விஜய் கட்சிக்கு போகாது. மாறாக, இரட்டை இலைக்குத்தான் விழும். அதனால், தைரியமாக பிரச்சாரத்தில் இறங்குங்கள். வெற்றி நமக்குத்தான், உங்கள் கணவருக்குத்தான் என்று குஷ்புவிடம் ஏற்கனவே சொல்லியிருக்கிறார் எடப்பாடி பழனிசாமி.

இப்படிப்பட்ட சூழலில்தான், நடிகர் விஜய்யை கணவருடன் சென்று சந்திக்க அவரிடம் பேசியிருக்கிறார் குஷ்பு. அப்போது, சுந்தர்.சியும் விஜய்யிடம் பேச, அவருக்கு வாழ்த்துத் தெரிவித்துள்ளார் விஜய். அப்போது, என்னை சந்திக்க நீங்கள் வருவது எனக்கு சந்தோஷம் தான். ஆனால், எப்படியும் அந்த சந்திப்பு வெளியே லீக் ஆகும். அது, உங்களுக்கு கிடைக்கும் வெற்றிக்கு பாதிப்பை ஏற்படுத்தினால்...? என்று சொல்லி, சந்திப்பு வேண்டாமே என சொல்லியிருக்கிறார் விஜய்.

அதில் இருக்கும் அரசியலை சுந்தர்.சியும், குஷ்புவும் புரிந்து கொண்டனர். அதேசமயம், தவெகவின் ஆதரவை பெறுவதற்காகத்தான் விஜய்யை சந்திக்க குஷ்பு தம்பதிகள் முயற்சி செய்தனர். ஆனால், எதார்த்தத்தை விஜய் விளக்கிய நிலையில், அதனை யோசிக்க ஆரம்பித்தனர். அதன் விளைவாக, விஜய்யை தம்பி என்றும் அவரை விமர்சிக்க மாட்டேன் என்றும் குஷ்பு சொல்லி வருவதன் மூலம் தவெகவினரின் ஆதரவை மறைமுகமாக பெரும் முயற்சியில் குதித்துள்ளனர். இந்த யோசனைக்கூட குஷ்புவிடம் விஜய் சொன்னதாகவும் ஒரு தகவல், பாஜக தரப்பில் பரவலாகப் பேசப்படுகிறது.

- சிறப்பு நிருபர் எழில்

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+