கிளாம்பாக்கம், பஞ்சப்பூர் மாதிரியே.. சென்னையில் நடக்கும் அடுத்த அதிசயம்.. இன்னும் 2 வாரம்தான்!
சென்னை: தமிழ்நாட்டில் பேருந்து நிலையங்களை.. புதிதாக பலகோடி செலவில் கட்டப்படும் பேருந்து நிலையங்களை நிர்வகிக்கும் பொறுப்புகள் தனியாரிடம் விடப்பட்டு வருகிறது. அரசு நிர்வகிக்கும் பேருந்து நிலையங்கள் விரைவில் சிதிலம் அடைகிறது, அசுத்தம் அடைகிறது என்பதால் இந்த பணிகள் தனியாரிடம் விடப்பட்டு வருகின்றன.
அந்த வகையில் கிளாம்பாக்கம், திருச்சி பஞ்சப்பூர் பேருந்து நிலையங்கள் ஏற்கனவே தனியாரிடம் நிர்வகிப்பிற்காக விடப்பட்டு உள்ளது. அடுத்த கட்டமாக குத்தம்பாக்கம் பேருந்து நிலையத்தை தனியாரிடம் விட ஒப்புதல் பெறப்பட்டு உள்ளது.
இன்னும் 2 வாரங்களில் சென்னையில் அமைக்கப்பட்டு வரும் புதிய குத்தம்பாக்கம் பேருந்து நிலையம் திறக்கப்பட உள்ளது. 427 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டு உள்ள குத்தம்பாக்கம் பேருந்து நிலையம் 2025ஆம் ஆண்டு ஜூன் மாதத்திற்குள் கட்டி முடிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. ஜூன் மாதம் இறுதியில் திறக்கப்படும்.

90 சதவிகிதம் இதன் கட்டுமானம் முடிந்துள்ளது. அழகுபடுத்தும் பணிகள், மின்சார இணைப்பு பணிகள் உட்பட்ட 10 சதவிகித பணிகள் அங்கே நடந்து கொண்டு இருக்கின்றன. இது போக அம்பத்தூர் மற்றும் தொண்டியார்பேட்டை பேருந்து முனையங்களில் முறையே 57 மற்றும் 52 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது ஆகும். இதன் சீரமைப்புப் பணிகளும் நிறைவு பெறும் தருவாயில் உள்ளது. இது போக செங்கல்பட்டு மற்றும் மாமல்லபுரத்தில் புதிய பேருந்து முனையங்கள் கட்டப்பட்டு வருகின்றன. சென்னை முழுவதும் உள்ள ஒன்பது பெருநகர பேருந்து முனையங்கள் பயணிகள் பயணத்தை எளிதாக்கும் வகையில் நவீனமயமாக்கப்பட்டு வருகின்றன.
இடமாற்றம் செய்யப்படுகிறது
இந்த நிலையில் பூந்தமல்லியில் இருந்து இயங்கி வரும் பேருந்துகள் இடமாற்றம் செய்யப்பட உள்ளன. சென்னையில் உள்ளூர் அளவிலான இணைப்பை மேம்படுத்த பூந்தமல்லி பேருந்து மையம் குத்தம்பாக்கத்திற்கு மாற்றப்படும் என்று அரசு அறிவித்து உள்ளது.
MTC பூந்தமல்லியில் இருந்து குத்தம்பாக்கத்திற்கு 150 பேருந்துகளை மாற்றி இணைப்பை மேம்படுத்தும். பூந்தமல்லி டெப்போவில் 120 மின்சார பேருந்துகள் இயங்கும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. சென்னையில் இருந்து மேற்கு நோக்கிச் செல்லும் பேருந்துகளுக்காக இந்த பேருந்து நிலையம் கட்டப்பட்டு உள்ளது.
முதல் கட்டமாக பெங்களூர், தர்மபுரி மற்றும் தமிழ்நாட்டின் மற்ற வடக்கு பகுதிகளுக்கு இயக்கப்படும் ஆம்னி பேருந்துகள் திருமழிசை அருகே குத்தம்பாக்கத்திற்கு மாற்றப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. அங்கு வரவிருக்கும் பேருந்து நிலையங்களில் மற்ற அரசின் பயன்படுத்தாத வாகனங்களை நிறுத்துவதற்கும் சென்னை பெருநகர வளர்ச்சி ஆணையம் (சிஎம்டிஏ) முடிவு செய்துள்ளது.
கிளாம்பாக்கம் பேருந்து நிலையம்:
இதனால் கிளாம்பாக்கத்தில் கூட்ட நெரிசல் குறையும் வாய்ப்புகள் உள்ளன. இன்னொரு பக்கம் கோயம்பேட்டில் பல்வேறு திட்டங்கள் வர உள்ளன. கோயம்பேடு பேருந்து நிலையம் மற்றும் மார்க்கெட்டில் குடியிருப்புகள், சில ஐடி நிறுவனங்கள், விளையாட்டு தொடர்பான திட்டங்கள் வர உள்ளன. அங்கே விளையாட்டு அரங்கம், ஹை ரைஸ் கட்டிடம் ஒன்றும் வர உள்ளது.
ஏற்கனவே கோயம்பேடு மார்க்கெட் காலியாகிவிட்டது. இதையடுத்து கோயம்பேடு பேருந்து நிலையமும் மூடப்பட உள்ளது. இப்படிப்பட்ட நிலையில்தான் பெங்களூர், தர்மபுரி மற்றும் தமிழ்நாட்டின் மற்ற வடக்கு பகுதிகளுக்கு இயக்கப்படும் ஆம்னி பேருந்துகள் திருமழிசை அருகே குத்தம்பாக்கத்திற்கு மாற்றப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. அங்கு வரவிருக்கும் பேருந்து நிலையங்களில் மற்ற அரசின் பயன்படுத்தாத வாகனங்களை நிறுத்துவதற்கும் சென்னை பெருநகர வளர்ச்சி ஆணையம் (சிஎம்டிஏ) முடிவு செய்துள்ளது.
இங்கே பிரம்மாண்ட ஐடி நிறுவனம் அமைக்கப்படலாம் என்று தகவல் வெளியாகி உள்ளது. இன்னும் சில மாதங்களில் இதற்கான அறிவிப்பு வெளியாகலாம். அங்கே நில ஆய்வு தொடர்பான சோதனைகள் மேற்கொள்ளப்படலாம் என்றும் கூறப்படுகிறது.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications