அவிநாசியில் முருகன்.. மத்திய அமைச்சராகும் மலை? ரூட் போடும் அண்ணாமலை! எகிறும் எதிர்பார்ப்பு!
சென்னை: மத்திய அமைச்சர் எல். முருகன் இந்த முறை அவிநாசி தொகுதியில் களம் காண்கிறார். ஒருவேளை அவர் வெற்றிபெற்றால், தனது ராஜ்யசபா எம்.பி. பதவியை ராஜினாமா செய்ய வேண்டியிருக்கும். அப்படி நடந்தால், அவர் வகிக்கும் மத்திய அமைச்சர் பதவியும் காலியாகும். இப்போது அந்த இடத்திற்குத் தான் அண்ணாமலை செக் வைத்திருப்பதாகக் கோட்டை வட்டாரத்தில் கிசுகிசுக்கப்படுகின்றன.
தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் அனல் பறக்கத் தொடங்கியிருக்கும் நிலையில், திருப்பூர் மாவட்டத்தின் அவிநாசி (தனி) தொகுதி இப்போது விவிஐபி அந்தஸ்தைப் பெற்றுள்ளது. காரணம், மத்திய இணையமைச்சர் எல். முருகன் இந்த முறை டெல்லி அரசியலில் இருந்து நேரடியாக தமிழக சட்டமன்றத் தேர்தலுக்குள் குதித்திருப்பதுதான். அவிநாசியில் வெற்றிவாகை சூடி கோட்டைக்குள் நுழைய வேண்டும் என்பதில் முருகன் மிகத் தீவிரமாக இருக்கிறார்.

ஆனால், முருகனின் இந்த அவிநாசி பயணம் டெல்லி மேலிடத்தில் ஒரு பெரிய வெற்றிடத்தை உருவாக்கப் போகிறது. ஒருவேளை முருகன் அவிநாசியில் வெற்றிபெற்று எம்.எல்.ஏ-வாகப் பதவியேற்றால், அவர் தனது ராஜ்யசபா எம்.பி. பதவியை முறைப்படி ராஜினாமா செய்ய வேண்டும். அப்படி ராஜினாமா செய்யும் பட்சத்தில், அவர் தற்போது வகித்து வரும் மத்திய அமைச்சர் பதவியும் காலியாகும்.
திருப்பத்தை ஏற்படுத்துமா 'தமிழ்நாடு' கோட்டா?
முருகன் விலகும் பட்சத்தில் காலியாகும் அந்த ராஜ்யசபா சீட்டை 'தமிழ்நாடு' கோட்டாவின் கீழ் கைப்பற்றி, அப்படியே டெல்லி அமைச்சரவைக்குள் நுழைந்துவிடலாம் என்பதுதான் அண்ணாமலையின் மாஸ்டர் பிளான் என்கிறார்கள் விபரமறிந்தவர்கள். முருகன் வகித்த அதே இலாகாவைத் தான் அண்ணாமலையும் குறிவைத்திருப்பதாகவும், அதில் அவர் மிகுந்த நம்பிக்கையுடன் இருப்பதாகவும் கூறப்படுகிறது.
அண்ணாமலையின் ஸ்கெட்ச்: 'ராஜ்யசபா டூ யூனியன் மினிஸ்டர்'!
சட்டமன்றத் தேர்தலில் வேட்பாளர் பட்டியலில் இடம்பெறாத அண்ணாமலை, பின்வாங்கிவிட்டதாகப் பலரும் விமர்சித்தார்கள். ஆனால், 'ஆழம் பார்க்காமல் காலை விடமாட்டார் அண்ணாமலை' என்கிறார்கள் கமலாலய உடன்பிறப்புகள். முருகன் காலி செய்யும் அந்த 'தமிழ்நாடு' கோட்டா ராஜ்யசபா சீட் மற்றும் மத்திய அமைச்சர் பதவி ஆகிய இரண்டையும் ஒரே கல்லில் அடிப்பதற்கு அண்ணாமலை ரகசியத் திட்டம் தீட்டியுள்ளதாகத் தகவல் கசிந்துள்ளது.
தேர்தலில் போட்டியிடாத அண்ணாமலை, மாநிலம் முழுவதும் சூறாவளிப் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். "முருகன் அவிநாசியில் ஜெயிக்கட்டும், நான் டெல்லிக்குச் செல்கிறேன்" என்பதுதான் அண்ணாமலையின் கணக்காக இருக்கிறதாம். மத்திய அமைச்சர் பதவிக்கான ரேஸில் தனது பெயரைக் கொண்டு செல்ல அண்ணாமலை மிகுந்த நம்பிக்கையுடன் இருப்பதாகக் கூறப்படுகிறது.
"அண்ணா நினைச்சா நடக்கும்!" - காத்திருக்கும் தம்பிகள்
இந்தத் திடீர் திருப்பம் குறித்து அண்ணாமலை தனது நெருங்கிய நட்பு வட்டாரத்திலும், தீவிர ஆதரவாளர்களிடமும் சூசகமாகப் பகிர்ந்து கொண்டதாகத் தெரிகிறது. இதனால் உற்சாகமடைந்த அவரது ஆதரவாளர்கள், "எங்க அண்ணா ஒரு முடிவு எடுத்துட்டாருன்னா, அதை கண்டிப்பா நடத்திக் காட்டுவார். டெல்லியில் அண்ணாமலையின் குரல் ஒலிக்கும் காலம் வெகுதூரத்தில் இல்லை" என இப்போதே சமூக வலைதளங்களில் ஆரூடம் சொல்லத் தொடங்கிவிட்டனர்.
"நம்ம அண்ணா ஒன்னு நினைச்சுட்டா, அதை கண்டிப்பா முடிச்சுக் காட்டுவார்" என அவரது தம்பிகள் இப்போதே தேர்தல் முடிவுகளை நோக்கித் தவமிருக்கத் தொடங்கிவிட்டனர்.
அண்ணாமலையின் இந்த 'டெல்லி கனவு' பலிக்குமா? அல்லது தேர்தல் முடிவுகள் வேறு ஏதும் அதிர்ச்சியைத் தருமா? முருகனின் வெற்றியும், அண்ணாமலையின் பதவியும் ஒன்றோடொன்று பிணைந்து கிடப்பதால், அவிநாசி தேர்தல் முடிவுகளை டெல்லி மேலிடமும் ஆவலோடு கவனித்து வருகிறது.
-
“யார் அந்த 18 பேர்? அமாவாசை காலத்து டெக்னிக்குடன் கோவை வந்துள்ளார் செந்தில் பாலாஜி”- அண்ணாமலை தாக்கு -
கோயம்பேடு வா.. தாம்பரம் காதலியிடம் இருந்து வந்த அழைப்பு.. காதலனுக்கு கனவிலும் நினைக்காத சம்பவம் -
முதல் கூட்டத்திலேயே வானதிக்கு நோஸ் கட்.. கோவையில் ஆட்டத்தை ஆரம்பித்த பாஜக -
பி.எஃப் கணக்கு வைத்திருக்கும் எல்லோருக்கும்.. அடிக்குது மெகா ஜாக்பாட்.. தேடி வரும் பணம்.. எவ்வளவு? -
சிறகடிக்க ஆசை: விஜயா ஆட்டத்தை அடக்க வரும் புது மருமகள்.. சரியான பதிலடி கொடுத்த மீனா! சந்தோஷத்தில் மனோஜ் -
கேஸ் சிலிண்டர் புக்கிங்கில் 35 நாட்கள் இடைவெளி.. புதிய 5 ரூல்ஸ் தெரியுமா? மானியம் வரவில்லைனா உஷார் -
சவுதி அரேபியாவுக்கு வேட்டு வைக்கும் ஈரான்.. சூயஸ் கால்வாய்-க்கு செக்.. ஹாட்ஸ்பாட் ஆக மாறும் பாப் அல்-மண்டப்! -
தமிழக தேர்தல்.. எந்த கட்சிக்கு அரியணை ஏறும் வாய்ப்பு.. இதுவரை வந்த கருத்து கணிப்புகள்.. சொல்வது என்ன? -
கூட்டணி மாறியதால் தேமுதிகவுக்கு ராஜ்யசபா சீட் கொடுக்கலை! ஆனால் அது உண்மைதான்! எடப்பாடி பழனிசாமி -
நகைக்கடன் வைத்த 3 பேரில் ஒருவர் கவனிக்கலனா பிரச்சனை? RBI எச்சரிக்கை என்ன சொல்கிறது? -
எத்தனை வருட சோகம்.. எவ்வளவு டிரைவர்கள் ஏக்கம்.. முடிவிற்கு வரும் தொப்பூர் கணவாய் கொடூரம்.. எப்படி? -
ரூ.1 லட்சம் கோடி இழப்பை சந்தித்த அம்பானி குடும்பம்.. பங்குச் சந்தையில் என்ன நடந்தது?












Click it and Unblock the Notifications