நிலம், வீடு சொத்து பத்திரங்கள்.. மகளிர் பத்திரப்பதிவு கட்டணம் 1% குறைப்பு: நாளை முதல் அமல்.. ஹேப்பி

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாட்டில் சொத்து பத்திரங்களை பதிவு செய்யும்போது, அதன் மதிப்பில் 7 சதவீதத்தை, முத்திரை தீர்வையாகவும், 2 சதவீதத்தை பதிவு கட்டணமாகவும், செலுத்த வேண்டும்.. சமீபத்தில் "மகளிர் பெயரில் பதிவாகும் பத்திரங்களுக்கு, பதிவு கட்டணத்தில் ஒரு சதவீதம் குறைக்கப்படும்" என்று தமிழக அரசு அறிவித்திருந்த நிலையில், இந்த அறிவிப்பானது, நாளை முதல் அமலுக்கு வரவுள்ளதாக பதிவுத்துறை செயலர் குமார்ஜெயந்த், செய்திக்குறிப்பு மூலம் தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் சட்டப்பேரவையில் அமைச்சர் தங்கம் தென்னரசு பத்திரப்பதிவு தொடர்பாக முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருந்தார்.. அப்போது, "சமூகத்தில் மட்டுமின்றி அவரவர் குடும்பங்களிலும் மகளிருக்கான சம பங்கை உறுதி செய்திடும் வகையில், வரும் ஏப்ரல் மாதம் 1ம் தேதி முதல் ரூ.10 லட்சம் வரையிலான மதிப்புள்ள வீடு, மனை, விவசாய நிலம் உள்ளிட்ட அனைத்து அசையா சொத்துக்கள் பெண்கள் பெயரால் பதிவு செய்யப்பட்டால் அத்தகைய ஆவணங்களுக்கு பதிவு கட்டணம் 1% குறைக்கப்படும்.

Land House Owners Registration Department

பத்திரப்பதிவுகள்

இப்போது மேற்கொள்ளப்படும் பத்திரப்பதிவுகளில் 75% பதிவுகள் இந்த அறிவிப்பினால் பயன்பெற இயலும். இதன் மூலம் மகளிர் சுய சார்பும் பொருளாதார சுதந்திரமும் மேலும் உயர்ந்திடும் என்று இந்த அரசு நம்புகிறது" என்று அறிவித்திருந்தார்..

இந்த அறிவிப்பானது, பொதுமக்களின் கவனத்தை குறிப்பாக, பெண்கள் மத்தியில் பெருத்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. மகளிர் நலன் காக்க சுய உதவிக் குழுக்கள், விடியல் பயணம், கலைஞர் மகளிர் உரிமை திட்டம், புதுமைப்பெண், தோழி பணிபுரியும் பெண்கள் விடுதி என பல்வேறு முன்னோடி திட்டங்களை திமுக அரசு செயல்படுத்தி வரும்நிலையில், பத்திரப்பதிவிலும் சலுகையை கொண்டுவந்தது, மக்களை வெகுவாகவே ஈர்த்திருந்தது..

வெளியான அரசாணை - மகிழ்ச்சியில் பெண்கள்

அதன்படி, பெண்கள் பெயரில் பதிவு செய்யப்படும் சொத்துகளுக்கு பதிவு கட்டணம் ஒரு சதவீதம் குறைப்பு தொடர்பாக தமிழ்நாடு அரசு அரசாணையும் நேற்றுமுன்தினம் வெளியாகியிருந்தது. இதன்மூலம் பத்திரப் பதிவுகளில் 75% பதிவுகள் பயன்பெறக்கூடும்.. அதன்படி, மகளிர் பெயரில் பதிவாகும் பத்திரங்களுக்கு, பதிவு கட்டணத்தில், ஒரு சதவீதம் குறைப்பு நாளை அதாவது ஏப்ரல் 1 முதல் அமலுக்கு வர உள்ளது.

இதனை செயல்படுத்தும் வகையில், 10 லட்சம் ரூபாய் வரையிலான வீடு, மனை, விவசாய நிலங்களை, மகளிர் பெயரில் வாங்குவோருக்கு, ஒரு சதவீதம் பதிவு கட்டணம் குறைப்பு சலுகை, நாளை முதல் அமலுக்கு வருகிறது. இதற்கான அறிவிப்பை பதிவுத்துறை செயலர் குமார்ஜெயந்த் வெளியிட்டுள்ளார்.

முற்றிலும் விலக்கு எப்போது - பெயிரா கேள்வி

இதனிடையே அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பின் தலைவர் டாக்டர் ஹென்றி, தமிழ்நாடு அரசுக்கு முக்கிய வேண்டுகோளை விடுத்துள்ளார். இது தொடர்பாக வெளியிட்டிருக்கும் அறிக்கையில்:

"முத்திரைத் தீர்வை விலக்கு பெற பத்து லட்சம் வரை மதிப்புள்ள சொத்துக்களுக்கு மட்டும் என்கிற வரம்பினை நிர்ணயிக்காமல், தமிழகத்திலும் நிரந்தரமாக வசிக்கும் பெண்கள் பெயரில் சொத்துக்களை வாங்கினால் அவர்களுக்கும் முத்திரைத் தீர்வையில் 50% விலக்கு அளிக்கும் வகையில், தாங்கள் நடவடிக்கையை மேற்கொண்டு உரிய வழிவகை செய்ய வேண்டும்" என்று கேட்டுக்கொண்டுள்ளது நினைவுகூரத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+