பட்டா பெயர் மாற்ற விண்ணப்பம்..இ டிஸ்ட்ரிக்ஸ் சர்வர் என்னாச்சு? நிலம் வாங்குவோருக்கு பதிவுத்துறை ஹோப்
சென்னை: தமிழக பதிவுத்துறை, வருவாய்த்துறை டிஜிட்டல் முறையில் மாற்றப்பட்டுள்ளன.. சொத்து பரிமாற்றங்கள் தொடர்பான பல்வேறு விஷயங்களுக்கு ஆன்லைன் முறையிலேயே ஏராளமான வசதிகளும் செய்து தரப்பட்டுள்ளன.. அதிலும், தமிழகத்தில் வருவாய் உட்பட பல்வேறு துறைகளிடம் இருந்து சான்றிதழ்கள் பெற, இ சேவை மையங்கள் வாயிலாக விண்ணப்ப பதிவு மேற்கொள்ளப்படுகின்றன.. இப்படிப்பட்ட சூழலில் புதிதாக சிக்கல் ஒன்று கிளம்பியிருக்கிறது.. இதுகுறித்து வருவாய்த்துறை அதிகாரிகள் சொல்வதென்ன??
ஒரு நிலத்தின் உரிமையாள யார் என்பதை காட்டும் ஆவணத்தைதான், இ-பட்டா, மின்னணு முறையில் வழங்கப்படுகின்றன.. இந்த இ-பட்டாவுடன், ஆதார் நம்பரையும் போட்டோவையும் இணைத்து, ஆன்லைனில் வழங்கும் நடைமுறை, விரைவில் அமலுக்கு வரப்போவதாகவும் செய்திகள் வலம் வருகின்றன..

புதிய நடைமுறைகள்
இதன்மூலம் ஆள் மாறாட்டம், பட்டா மோசடிகள் நடக்க வாய்ப்பில்லை என்று அதிகாரிகள் நம்பிக்கை தெரிவிப்பதால், இ-பட்டாக்களுடன், ஆதார் நம்பரையும் போட்டோவையும் இணைப்பதற்கான பணிகள் நடந்து வருவதாகவும் செய்திகள் வந்தவண்ணம் உள்ளன.. இப்படிப்பட்ட சூழலில், இ சேவை மையங்களில் சில சிக்கல் எழுந்துள்ளதாக தெரிகிறது.
தமிழகத்தில் வீடு, மனை வாங்குவோர், அதற்கான பத்திரப்பதிவு முடிந்ததும், பட்டா பெயர் மாற்றத்துக்கு விண்ணப்பிக்க வேண்டும். இதற்காக பொதுமக்கள் தாலுகா அலுவலகங்களுக்கு அலைவதை தடுக்க, வருவாய் துறை பல்வேறு புதிய வசதிகளை அறிமுகப்படுத்தி வருகிறது.
குறிப்பாக, உட்பிரிவு சர்வே எண் உருவாக்க வேண்டிய தேவை இல்லாத சொத்துக்களுக்கு,. பத்திரப்பதிவு அடிப்படையில், ஆட்டோமெடிக்காகவே பட்டா பெயர் மாற்றம் செய்து தரப்படுகிறது. பிறகு உட்பிரிவு உருவாக்க வேண்டிய இனங்களுக்கும், பணிகளை விரைந்து முடிப்பதற்காக சர்வேயர்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கப்பட்டு வருகிறது.
பட்டா மாறுதல்
இதன்மூலம் விண்ணப்பதாரர்கள், பட்டா மாறுதலுக்காக இ சேவை மையங்கள் வாயிலாக பதிவு செய்யலாம்.. அந்தவகையில், ஒவ்வொரு இசேவை மையத்திலும், தினசரி தலா, 20 விண்ணப்பங்கள் வரை பதிவு செய்யப்படுகின்றன... எனினும், சில இ சேவை மையங்களில், விண்ணப்ப பதிவு பணிகள் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.. இதனால் பொதுமக்கள் அவதிக்கு உள்ளாகி வருகிறார்கள்..
இது குறித்து, இசேவை மைய தரப்பில் சொல்லும்போது, வருவாய் துறையின் அனைத்து சேவைகளும், இ டிஸ்ட்ரிக்ட் என்ற வெப்சைட் மூலம் மேற்கொள்ளப்பட்ட நிலையில், பட்டா மாறுதல் விண்ணப்பம் மட்டுமே இ டிஸ்ட்ரிக்ட்' இணையதளம் வாயிலாக தொடர்ந்து மேற்கொள்ளப்படுகின்றன.
பட்டா மாறுதல் தவிர்த்த மற்ற அனைத்து விண்ணப்ப பதிவு பணிகளும், இ சேவை வெப்சைட்டிற்கு மாற்றப்பட்டு நடந்து வருகின்றன..
சர்வர் பிரச்சனை
இதில், இ சேவை வெப்சைட் வழக்கம்போல செயல்படும் நிலையில், இ டிஸ்ட்ரிக்ட் வெப்சைட்டில் பட்டா மாறுதல் விண்ணப்பங்கள் பதிவு பணிகள் ஆரம்ப நிலையிலேயே தடைபடுவதால்தான், பட்டா மாறுதல் விண்ணப்பங்களை பதிவிடும் பணிகளும் பாதிக்கின்றன" என்கிறார்கள்.
ஆனால் வருவாய்த்துறை அதிகாரிகள் இதுகுறித்து சொல்லும்போது, "இ டிஸ்ட்ரிக்ட் வெப்சைட்டில் சர்வர் பிரச்சனை இருப்பதால், அவை சரி செய்யும் பணிகள் நடந்து வருவதாகவும், விரைவில் அப்பணிகள் சீரானதும் பட்டா மாறுதல் தடையின்றி நடைபெறும் என்றும் அதிகாரிகள் தரப்பில் நம்பிக்கை தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications