சென்னை, கோவையில் நில வழிகாட்டி மதிப்பு உயருகிறது.. அப்ப அப்பார்ட்மென்ட்கள்? பத்திரப்பதிவு துறை அதிரடி
சென்னை: சென்னை மற்றும் கோவையில் நில வழிகாட்டி மதிப்பு உயர உள்ளதாக அமைச்சர் மூர்த்தி தெரிவித்துள்ளார்.. மேலும் பத்திரப்பதிவு கட்டண விவரங்கள் குறித்து பல்வேறு விவரங்களையும் அமைச்சர் வெளியிட்டுள்ளார்.
பதிவுத்துறை சார்பில், பதிவு நடைமுறைகள் குறித்து, நேற்றைய தினம், சேப்பாக்கம் கலைவாணர் அரங்கில் கருத்து கேட்பு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி, பதிவுத்துறை தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவ, பதிவுத்துறை செயலர் ஜோதி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தமிழக பத்திரம்: மேலும், இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பு, இந்திய ரியல் எஸ்டேட் மேம்பாட்டாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பான கூட்டமைப்பான கிரெடாய், இந்திய கட்டுனர் வல்லுனர் சங்கம், தமிழக பத்திரம் நகல் எழுதுவோர் சங்கம் உள்ளிட்ட அமைப்புகளின் நிர்வாகிகளும் பங்கேற்று பேசினார்கள். அப்போது பொது அதிகார ஆவண பதிவு கட்டணம், 1 சதவீதமாக நிர்ணயிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.
மேலும் இவர்கள் பேசும்போது, கிராமப்புறங்களில் 3 சென்ட் நிலத்தை பதிவு செய்ய மறுக்கிறார்கள், இதனால் மக்கள் கஷ்டப்படுவதாகவும், பத்திரப்பதிவு மென்பொருளால் ஒரே நேரத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட பதிவுகளை மேற்கொள்ள முடியவில்லை என்றும், இதனால் 3 முறை டோக்கன் வாங்க வேண்டியுள்ளது என்றும் சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர். அத்துடன் பதிவுத்துறையில் 55 A பிரிவை ரத்து செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது.
வருவாய் குறைவு: இதையடுத்து அமைச்சர் மூர்த்தி பேசியதாவது: "கூட்டத்தில் அமைச்சர் மூர்த்தி பேசியதாவது:- பெங்களூரு போன்ற இடங்களுக்கெல்லாம் போய் பாருங்கள். அங்கே, இப்போதைக்கு சந்தை மதிப்புக்கு ஏற்ப பத்திரப்பதிவு செய்யப்படுகிறது. ஆனா இங்கே அப்படியில்லை. வழிகாட்டி மதிப்பை கொண்டு பத்திரப்பதிவு செய்யப்படுகிறது.
சென்னையில் சந்தை மதிப்பை விட வழிகாட்டி மதிப்பு குறைவாக இருக்கிறது. சதுர அடி ரூ.50 ஆயிரம் என்பது ரூ.15 ஆயிரமாக இருக்கிறது. அதனால், நில வழிகாட்டி மதிப்பு குறித்து பேச வேண்டும்.
வீடு விற்பனை: விரைவில் வழிகாட்டி மதிப்பு மற்றும் அடுக்குமாடி திட்டங்களில் வீடு விற்பனை பதிவுக்கான நடைமுறையில் புதிய மாற்றங்களை அறிமுகப்படுத்த இருக்கிறோம். நிலம், வீடு ஆகியவற்றின் மொத்த மதிப்பு அடிப்படையில், அடுக்குமாடி திட்ட வீடுகளின் பத்திரங்களை பதிவு செய்ய, புதிய நடைமுறையை உருவாக்கி வருகிறோம்.
கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில், மாநிலங்களில், நிலத்தின் சந்தை மதிப்புக்கும், வழிகாட்டி மதிப்புக்கும் இடையிலான வேறுபாடு, 10 சதவீதம் வரை தான் இருக்கிறது. ஆனால், தமிழகத்திலோ, 60 சதவீதத்துக்கு மேல் இருக்கிறது..
வருவாயை அதிகரிக்க, மற்ற மாநிலங்களில் உள்ளது போல, வருடந்தோறும், தானாகவே வழிகாட்டி மதிப்புகள் உயரும் நடைமுறையை அமல்படுத்த வேண்டியுள்ளது.. முக்கியமாக, சென்னை, கோவை நகரங்களில், 10 சதவீதம் வரை உயர்த்தலாம். பிற நகரங்களில், 3, 5, 7 சதவீதங்களில் வழிகாட்டி மதிப்பை உயர்த்த ஆராய்ந்து வருகிறோம்.
அப்பார்ட்மென்ட்கள்: அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு கர்நாடகம் உள்ளிட்ட மற்ற மாநிலங்களை போல் செய்ய அரசுக்கு பரிந்துரை செய்ய இருக்கிறோம். கிராமங்களில் வழிகாட்டி மதிப்பு சதுர அடிக்கு ரூ.21 முதல் இருப்பதாக சொல்லியிருக்கிறீர்கள். இனி நிலத்துக்கான குறைந்தபட்ச மதிப்பு சதுர அடிக்கு, 50 ரூபாயாக இருக்கும் வகையில் மாற்றங்கள் மேற்கொள்ளப்படும். பத்திரப்பதிவு முறைக்கான நடைமுறையை இணையதளத்தில் பதிவு செய்தால் பத்திரப்பதிவில் எந்த பிரச்சினையும் இல்லை என்றார்.
-
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா? -
சேலத்தில் விபச்சாரத்தில் தள்ளப்பட்ட 50 பெண்கள்? பல ஆபாச வீடியோக்கள்! தவெக மணிகண்டன் சிக்கியது எப்படி -
"காலம் எனக்கு ஆப்பு வைத்து விட்டது.." கடவுள் தான் காப்பாற்றினாரு..! பாடகி ராஜலட்சுமி உருக்கம் -
திமுக மகளிரணி கூட்டத்திற்கு வந்து! வரவேற்க யாரும் இல்லாததால் திரும்பிச் சென்ற துரைமுருகன் -
ரூ.115 லட்சம் கோடி சொத்து இருந்து என்ன பயன்.. எலான் மஸ்க் வீட்டை பார்த்தீங்களா.. ஒரு 3BHK வீட்டை விட சிறியது? -
"விஜய் ஒழிக".. தமிழக முதல்வருக்கு எதிராக கர்நாடகாவில் கொந்தளித்த கன்னட அமைப்பினர்! அதிரடி கைது -
விவாகரத்து பேப்பர்களை கிழித்தெறிந்து கணவரை கட்டி பிடித்த மனைவி! கோர்ட் வாசலில் நடந்த உருக்கமான செயல்












Click it and Unblock the Notifications