நில அளவீடு.. பட்டா மாறுதலில் இனிமே நிம்மதி.. வரப்போகிறது "தனி மையம்".. நில அளவை துறை இப்படி அசத்துதே
சென்னை: பட்டா மாறுதல், நில அளவை பணிகளின் சேவைகளில் தரத்தை உறுதி செய்வதற்காக புதிய வசதி ஒன்று ஏற்படுத்த போவதாக தகவல் ஒன்று வெளியாகியிருக்கிறது. அது என்ன?
சமீபத்தில், தமிழ்நாடு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை https://tamilnilam.tn.gov.in/citizen என்ற இணையதளத்தை NIC மூலம் உருவாக்கியுள்ளது.

சேவைகள்: நில உரிமையாளர்கள் தங்களது நிலங்களை அளவீடு (F-line application) செய்ய சம்மந்தப்பட்ட வட்ட அலுவலகங்களுக்கு நேரில் செல்லாமல் https://tamilnilam.tn.gov.in/citizen என்ற இணைய வழியில் விண்ணப்பிக்கும் புதிய வசதியை தமிழக முதல்வர் கடந்த 2023ம் ஆண்டு தொடங்கி வைத்திருந்தார்.
இந்த புதிய சேவையின் மூலம் பொதுமக்கள் நிலஅளவை செய்ய 'எந்நேரத்திலும் எவ்விடத்திலிருந்தும்' நிலஅளவை கட்டணம் உள்ளிட்ட கட்டணங்களை செலுத்த வங்கிகளுக்கு நேரில் செல்ல தேவையில்லை.. மாறாக ஆன்லைனிலேயே விண்ணப்பிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.
மெசேஜ்: இதன்மூலம் நிலஅளவை செய்யப்படும் தேதி மனுதாரருக்கும் மெசேஜ் அல்லது போன் மூலமாக தெரிவிக்கப்படும்... நிலஅளவை செய்யப்பட்டதுமே, மனுதாரர் மற்றும் நிலஅளவர் கையொப்பமிட்ட அறிக்கை/வரைபடம் போன்றவற்றை https://eservices.tn.gov.in/ என்ற இணையவழி சேவையின் மூலமாக பதிவிறக்கம் செய்து கொள்ளும் வகையில் நிலஅளவரால் பதிவேற்றம் செய்யப்படும்.
இந்த புதிய சேவையானது மக்களின் நம்பிக்கையை அபரிமிதமாகவே பெற்று வருகிறது. எனினும், தமிழகத்தில் வீடு, மனை வாங்குவோர், பட்டாக்களை பெறுவதற்காக அதிகமாகவே விண்ணப்பிக்கின்றனர். இதை எளிமைப்படுத்தவும், பொது மக்களுக்கு ஏற்படும் அலைக்கழிப்பை குறைப்பதற்காகவும், இன்னும் ஏராளமான அதிரடிகளை தமிழக அரசு எடுத்து வருகிறது.
அந்தவகையில், பட்டா மாறுதல், உட்பிரிவு செய்தல் தொடர்பான நில அளவை சேவையில், தரத்தை மேம்படுத்த வேண்டி அவசியமும் எழுந்துள்ளது. ஏனென்றால் நிறைய இடங்களில் பட்டா மாறுதல், உட்பிரிவு உருவாக்குவதில் நிலத்தின் எல்லைகள், பரப்பளவு போன்ற விபரங்களில், பிழைகள் வருகிறதாம்.. இதுபோன்ற பிழைகளை சரி செய்ய விண்ணப்பித்தாலும், அதன் மீது, சில அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுப்பதில்லையாம்.
பிழைகள்: அதனால்தான், இந்த பிரச்சனைக்கும் ஒரு முற்றுப்புள்ளியை வைக்க அரசு முடிவெடுத்துள்ளது.. இதற்காகவே, மாநில அளவில் தரக் கட்டுப்பாடு மற்றும் கண்காணிப்பு மையம் ஏற்படுத்த முடிவு செய்திருக்கிறதாம். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வரும் என்கிறார்கள்.
இது குறித்து, நில அளவை துறை அதிகாரிகள் தரப்பில் சொல்லும்போது, "நில அளவை பணியில் தரக்கட்டுப்பாடு வழிமுறைகளை அமல்படுத்த, அரசு முடிவு செய்துள்ளது. சர்வே எண், அதன் உட்பிரிவு எண்ணுக்கு உட்பட்ட நிலத்தின் அளவை, துல்லியமாக பதிவிட வேண்டும். மேலும், நில அளவை வரைபட விற்பனை உள்ளிட்ட சேவைகளில் தரத்தை உறுதி செய்ய வேண்டியிருக்கிறது. அதனால்தான்
ஆன்லைன் வசதி: இதற்காகவே, மாநில அளவில் தரக் கட்டுப்பாடு மற்றும் கண்காணிப்பு மையம் ஏற்படுத்தப்பட திட்டமிடப்பட்டு வருகிறது. அந்தவகையில், சென்னையில், நில அளவை துறை வளாகத்தில், மையம் அமைக்கப்படும். இதன்மூலம், நில அளவை துறையின் சேவைகள் குறித்த புள்ளி விபரங்களை, ஆன்லைனிலேயே உடனுக்குடன் உயரதிகாரிகள் கண்காணிக்க வசதி செய்யப்படும்" என்கிறார்கள்.
இந்த வசதி மட்டும் கொண்டுவரப்பட்டால் பட்டா மாறுதல், உட்பிரிவு உருவாக்குவதில் நிலத்தின் எல்லைகள், பரப்பளவு போன்ற விபரங்களில், பிழைகள் ஏற்படுவது விரைவாக சர்செய்யப்பட்டு விடும் என்றே நம்பப்படுகிறது.
-
முதல் நாளே அமெரிக்காவுக்கு வெற்றி.. ஹார்முஸ் வழியாக 34 கப்பல்கள் சென்றன - டிரம்ப் பதிவு -
கைப்புள்ள, நாய் சேகர்னு எனக்கும் பட்ட பெயர் வைக்க தெரியும்! பிடிஆருக்கு சுந்தர் சி பதிலடி -
ஹார்முஸில் இறங்கும் இந்திய கடற்படை.. நடுக்கடலில் சிக்கியுள்ள இந்திய கப்பல்களை மீட்க அதிரடி ஆபரேஷன் -
10 கோடி வீட்டை 100 கோடிக்கு விற்ற நடிகை மீனா.. சென்னையில் நில மதிப்பு ராக்கெட் போல் உயர்ந்த இடங்கள் -
கடைசி சான்ஸ்.. மிஸ் பண்ணிடாதீங்க.. பிறப்புச் சான்றிதழில் வருது மேஜர் முடிவு.. ஆவணங்களை ரெடி பண்ணுங்க -
வார்த்தையை விட்ட எடப்பாடி பழனிசாமி.. வரிந்து கட்டிய பிரேமலதா.. செல்போனில் காரசார உரையாடல் -
”5 கேப்டன் இருந்தும் என் பக்கத்துல இருக்கான் மச்சா” மும்பை அணியை செய்யும் சிஎஸ்கே! தெறிக்கும் மீம்ஸ் -
நாய்க்கு கூட நன்றி இருக்கும்.. எடப்பாடி பழனிசாமி குறித்து சசிகலா விமர்சனம் -
LIK vs TN 2026 box office: மூன்று நாள் முடிவில் பிரதீப் ரங்கநாதன் Vs நட்டி யாருக்கு வெற்றி? வசூல் நிலவரம் -
மகளிருக்கு டபுள் ஜாக்பாட்.. மகளிர் உரிமை தொகை + ரூ.8000.. மொத்தம் ரூ.10,000! திமுக மெகா ப்ளான்! -
Tamil New Year Wishes in Tamil: சித்திரை திருநாளில் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் பகிர அழகிய படங்கள் -
ஜனநாயகன் லீக்.. இயக்குநர் அமீர் கருத்துக்கு வலுக்கும் எதிர்ப்பு.. ஆர்கே செல்வமணி விளக்கம்












Click it and Unblock the Notifications