நில அளவீடு.. இனி சர்வேயர் வர்ற வரை காத்திருக்க வேணாம்.. நில அளவை பணியில் செம ஏற்பாடு.. செம தமிழக அரசு
தஞ்சாவூர்: அதேபோல, தஞ்சை மாவட்டம் ஒரத்தநாட்டில் உள்ள நில அளவை பயிற்சி மையத்தில், ஒரே சமயத்தில், 180 பேர் பயிற்சி பெறுவதற்கான வசதிகள் உள்ளன.. இதையடுத்து, அண்ணா பல்கலை மையத்தில், 50 பேருக்கு பயிற்சி அளிப்பதற்கான வசதிகள் உள்ளதால், இங்கு கூடுதலாக, 50 பேர் பயிற்சி பெறலாம்..
அரசு பணியாளர் தேர்வாணையம் வாயிலாக, கடந்த ஆண்டு, 1,000 பேர் சர்வேயர்களாக நியமிக்கப்பட்டனர். இதை தொடர்ந்து மேலும், 300 பேரை தேர்வு செய்யக்கோரி, அரசு பணியாளர் தேர்வாணையத்துக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளது... இந்த நியமனங்கள் முடிந்தவுடன், பொது மக்கள் விண்ணப்பித்தவுடன் நில அளவை பணிகள் உடனே செய்து தரப்படும்.. இனிமேல் சர்வேயர் வருகைக்காக நீண்ட காலம் காத்திருக்க தேவையில்லை..

எனினும், பட்டா மாறுதல், உட்பிரிவு செய்தல் தொடர்பான நில அளவை சேவையில், தரத்தை மேம்படுத்த வேண்டிய அவசியம் எழுந்துள்ளது. தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் பட்டா மாறுதல், உட்பிரிவு உருவாக்குவதில் நிலத்தின் எல்லைகள், பரப்பளவு போன்ற விபரங்களில் நிறைய பிழைகள் வருவதால், இதனையும் களைய வேண்டியிருக்கிறது.
தரக்கட்டுப்பாடு: அதனால்தான், நில அளவை பணியில் தரக்கட்டுப்பாடு வழிமுறைகளை அமல்படுத்த, அரசு முடிவு செய்துள்ளது சர்வே எண், அதன் உட்பிரிவு எண்ணுக்கு உட்பட்ட நிலத்தின் அளவை, துல்லியமாக குறிப்பிட வேண்டும். இத்துடன், நில அளவை வரைபட விற்பனை உள்ளிட்ட சேவைகளையும், இத்துறை மக்களுக்கு வழங்கி வருகிறது... இதற்காக, மாநில அளவில் தரக் கட்டுப்பாடு மற்றும் கண்காணிப்பு மையம் ஏற்படுத்தப்படுகிறது.
ஏற்கனவே இதுகுறித்து அதிகாரிகள் சொல்லும்போது, சென்னையில், நில அளவை துறை வளாகத்தில், மையம் அமைக்கப்படும். குறிப்பாக, நில அளவை துறையின் சேவைகள் குறித்த புள்ளி விபரங்களை, இணைய வழியில், உடனுக்குடன் உயரதிகாரிகள் கண்காணிக்க வசதி செய்யப்படும் என்று நம்பிக்கை தெரிவித்திருந்தனர்.
விண்ணப்பம்: இதனிடையே, பொதுமக்கள் விண்ணப்பித்தவுடன் நில அளவை செய்து கொடுக்கும் அளவுக்கு, சர்வேயர்கள் எண்ணிக்கை அதிகரிக்கப்படும் என்று வருவாய் துறை அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் தெரிவித்திருக்கிறார்.. சென்னை அண்ணா பல்கலையில், நில அளவை பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தில், 1.47 கோடி ரூபாயில் கட்டப்பட்ட கூடுதல் கட்டடங்களை, திறந்து வைத்து பேசியபோது, அமைச்சர் சொன்னதாவது:
மத்திய அரசின் தேசிய நில ஆவணங்களை டிஜிட்டல் மயமாக்கும் திட்டத்தின் கீழ், 2023ல் அண்ணா பல்கலையின் நில அளவை பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்துக்கு, 1.47 கோடி ரூபாய் வழங்கப்பட்டது. இதை பயன்படுத்தி கூடுதலாக, 50 பேர் பயிற்சி பெறுவதற்கான கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்பட்டு உள்ளன.
தஞ்சாவூர்: அதேபோல, தஞ்சை மாவட்டம் ஒரத்தநாட்டில் உள்ள நில அளவை பயிற்சி மையத்தில், ஒரே சமயத்தில், 180 பேர் பயிற்சி பெறுவதற்கான வசதிகள் உள்ளன.. இதையடுத்து, அண்ணா பல்கலை மையத்தில், 50 பேருக்கு பயிற்சி அளிப்பதற்கான வசதிகள் உள்ளதால், இங்கு கூடுதலாக, 50 பேர் பயிற்சி பெறலாம்..
அரசு பணியாளர் தேர்வாணையம் வாயிலாக, கடந்த ஆண்டு, 1,000 பேர் சர்வேயர்களாக நியமிக்கப்பட்டனர். இதை தொடர்ந்து மேலும், 300 பேரை தேர்வு செய்யக்கோரி, அரசு பணியாளர் தேர்வாணையத்துக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளது... இந்த நியமனங்கள் முடிந்தவுடன், பொது மக்கள் விண்ணப்பித்தவுடன் நில அளவை பணிகள் உடனே செய்து தரப்படும்.. இனிமேல் சர்வேயர் வருகைக்காக நீண்ட காலம் காத்திருக்க தேவையில்லை..
பட்டா மாறுதல்: நில அளவை பணி விரைவாக முடிந்தால், பட்டா மாறுதல் பணிகளும் உடனுக்குடன் முடிந்து விடும்.. பட்டா மாறுதல் மேற்கொள்ளப்படும்போதே, நில அளவை வரைபடத்தையும் மக்கள் உடனடியாக பெறுவதற்கான நடவடிக்கைகள் எடுத்து வருகிறோம்.. எனவே, இந்த புதிய வசதிகள் விரைவில் நடைமுறைக்கு வரும்" என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார் அமைச்சர்.
-
தேர்தல் ஆணையத்தின் அதிரடி ‘டிரான்ஸ்பர்’ மேளா.. காலியான எடப்பாடி கணக்கு... ஸ்டாலின் பவர்ஃபுல் மூவ்! -
எடப்பாடிக்கு அருகில் சீட்.. ஒரே விமானத்தில் பயணம்.. கடைசி நேரத்தில் பிளானை மாற்றிய உதயநிதி! -
வில்லிவாக்கத்தில் ட்விஸ்ட்.. ஆதவ் அர்ஜுனாவுக்கு அடிக்குமா ஜாக்பாட்? களம் எப்படி இருக்கிறது? -
தவெக ஆட்சிக்கு வந்த 6 மாதத்தில் தமிழ்நாடு சேவை உரிமை சட்டம்.. குமரியில் விஜய் அளித்த வாக்குறுதிகள் -
"கொஞ்ச நேரம்.." என கொஞ்சியபோது காதலில் விழாதவர் உண்டோ? ஆஷா போஸ்லேவின் மறக்க முடியாத தமிழ் பாடல்கள் -
ஈரான் விரித்த வலையில் ஈரானே சிக்கிடுச்சு.. அமெரிக்காவே கவலைப்படும் அளவிற்கு நிலைமை கைமீறியது -
மகளிர் உரிமைத் தொகை.. இன்னும் ஆட்டம் முடியல.. வரப்போகும் 2 ‘மெகா’ மாற்றங்கள்.. கவனிங்க! -
விட்டு விளாசிய பிடிஆர்! கோபத்தின் உச்சிக்கே போன குஷ்பு சுந்தர் சி.. மோதல் உச்சகட்டம்! என்ன நடக்குது? -
இஸ்லாமாபாத் டாக்ஸ்.. ட்ரம்ப் - ஈரான் டீல்.. இந்தியா மிஸ் செய்த சான்ஸ்? அடித்து தூக்கிய பாகிஸ்தான் -
அவ்ளோதான் முடிச்சுவிட்டீங்க போங்க.. ஒரே வரியில் தவெக பர்னிச்சரை சல்லி சல்லியாக்கிய ஸ்டாலின் -
சுப்மன் கில் ஆட்டத்தை பார்க்க வந்த சாரா டெண்டுல்கர்.. பாவமாக அமர்ந்திருந்த அர்ஜுன் டெண்டுல்கர் மனைவி -
கோவை ஈஷா யோகா மையத்தில் எஸ்.பி.வேலுமணியுடன் பேசியது என்ன? உடைத்து பேசிய பிரேமலதா












Click it and Unblock the Notifications