சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

2 பேர் யார்.. அமைச்சரவை திடீர் மாற்றம்?.. 10வது கேட் வாசலில்.. 2வது மாடி ரூமில்.. பூரிப்பில் திமுக

அமைச்சரவை மாற்றம் என்ற செய்திகள் இணையத்தில் பரபரத்து வருகிறது

Google Oneindia Tamil News

சென்னை: திமுக அமைச்சரவை விரிவுபடுத்தப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாக உள்ள நிலையில், உதயநிதி ஸ்டாலின் குறித்த முக்கிய செய்தி ஒன்று இணையத்தில் வலம்வந்து, உடன்பிறப்புகளை நெகிழ வைத்து கொண்டிருக்கிறது.. என்னவாம்?

உதயநிதி ஸ்டாலினுக்கு அமைச்சர் பதவி என்பது கடந்த ஒரு வருட காலமாகவே, வெளிவந்து கொண்டிருக்கும் செய்தியாகும்.. ஒவ்வொருமுறையும் அதுகுறித்த செய்திகளும் மீடியாவில் இடம்பிடிப்பதும், பிறகு சத்தமே இல்லாமல் காணாமல் போவதும் தொடர்ந்து கொண்டே வருகிறது.

கடந்த ஜுன் 3-ம் தேதி மறைந்த கருணாநிதியின் பிறந்தநாளை கொண்டாடுவது குறித்த தீர்மானத்தோடு, திமுக உதயநிதியை அமைச்சராக்க வேண்டும் என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது..

வெயில்னு சொன்னா மழை வருது! வானிலை மையத்தில் எல்லாமே பழுதான கருவி! கேள்வி கேட்ட திமுக எம்பி வில்சன்! வெயில்னு சொன்னா மழை வருது! வானிலை மையத்தில் எல்லாமே பழுதான கருவி! கேள்வி கேட்ட திமுக எம்பி வில்சன்!

தர்மசங்கடம்

தர்மசங்கடம்

ஆனால், இதற்கு உதயநிதி அப்போதே ரியாக்ட் செய்திருந்தார்.. "இப்படித் தீர்மானங்கள் நிறைவேற்றி தலைமைக்குத் தர்மசங்கடத்தை ஏற்படுத்த வேண்டாம்" என்று உதயநிதி அறிக்கை வெளியிட்டு கேட்டுக் கொண்டிருந்தார்.. ஆனால் அதேசமயம், அமைச்சர் பதவியை ஏற்கனவே மாட்டேன் என்றோ அல்லது அமைச்சர் பதவி கிடைத்தாக வேண்டும் என்றோ உதயநிதி ஒருநாளும் சொன்னதில்லை.. உதயநிதிக்கு அமைச்சர் பதவி என்றதுமே, அதுகுறித்து 2 விதமான அலசல்கள் சோஷியல் மீடியாவில் வலம் வந்தன..

 கொதிப்பு பாஜக

கொதிப்பு பாஜக


முதல் ஆளாக வழக்கம்போல் பாஜக கொந்தளித்தது.. ஸ்டாலின் பல ஆண்டுகள் அரசியல் அனுபவம் பெற்று முதல்வராக ஆட்சிபுரியும்போது, உதயநிதியின் அரசியல் முதிர்ச்சியின்மை உள்ளது.. மக்களின் தேவை குறித்த நல்ல சிந்தனை எந்த அளவுக்கு உள்ளதென்று தெரியவில்லை.. வாரிசு என்ற அடிப்படையில் அமைச்சராக்க வேண்டும் என்று சொல்வது மக்களைத்தான் தர்ம சங்கடத்தில் ஆழ்த்தும்... மேலும் திமுகவில் இருக்கும் மூத்த தலைவர்களையும் முகம் சுளிக்கவைக்கும்...

ஜூனியர்கள்

ஜூனியர்கள்

சட்டரீதியாகப் பார்த்தால் அவர்கள் செய்வது சரி என்றாலும், மனசாட்சியின்படி, ஜனநாயகத்தின்படி அதிகாரம் அனைத்தையும் தன் குடும்பத்தினருக்கே கொடுப்பது எந்த வகையில் சரியானதாக இருக்கும்? என்றெல்லாம் தங்கள் கருத்தை பாஜக சீனியர்கள் முன்வைத்தனர். மற்றொருபக்கம், உதயநிதியின் அரசியல் பிரமிப்பை கூட்டுவதாகவே உள்ளதாக, திமுக தொண்டர்கள் முதல் மூத்த தலைவர்கள் நெகிழ்ந்து சொல்கிறார்கள்.. இளைஞரணி செயலாளராக கட்சிக்கும், சட்டமன்ற உறுப்பினராக தொகுதி மக்களுக்கும் உதயநிதி செய்த பணிகள் அளப்பரியவை.. சேப்பாக்கம் தொகுதி மக்களை போய் கேட்டுப் பாருங்க..

போஸ்டிங்

போஸ்டிங்

உதயநிதிக்கு அமைச்சர் போஸ்டிங் என்பது, முதலில் அமைச்சர்களின் கருத்தாக இருந்து, பிறகு தொண்டனின் கருத்தாக மாறி, கடைசியில் மக்களின் விருப்பமாகவும் மாறிவிட்டது.. அமைச்சர்களின் தொகுதியில் நடக்கும் நலத்திட்ட உதவிகளைகூட, உதயநிதியை அழைத்து, அவர் கையாலேயே துவக்கி வைக்கும் அளவுக்கு, அவருக்கான முக்கியத்துவம் கட்சியில் உயர்ந்து வருகின்றன.. தமிழக சட்டசபை கூட்டத் தொடர்களிலும் தவறாமல் பங்கேற்று மக்கள் பிரச்சினைகள் பற்றி பேசுகிறார். இதனால் மக்கள் மத்தியில் பாராட்டுகளை உதயநிதி ஸ்டாலின் சம்பாதித்து வருகிறார். எனவே, அவருக்கு அமைச்சர் பதவி தந்தேயாக வேண்டும் என்று தங்கள் விருப்பத்தை உடன்பிறப்புகள் உரிமையுடன் வெளிப்படுத்தி வருகின்றனர்.

 ஓபன் டாக்

ஓபன் டாக்

இப்படியான விவாதங்களும், சலசலப்புகளும், ஆதரவுகளும், எதிர்ப்புகளும் மாறி மாறி எழுந்த நிலையில், மீண்டும் உதயநிதிக்கு அமைச்சர் பதவி என்ற பேச்சு, வட்டமடிக்க ஆரம்பித்துள்ளது.. கடந்த நவம்பர் 27-ந் தேதி அவரது பிறந்த நாளில் அமைச்சர்கள், எம்பிக்கள், எம்எல்ஏக்கள், மாவட்ட செயலாளர்கள், இதற்கு முந்தைய பிறந்த நாட்களில் இல்லாத வகையில் காத்திருந்து வாழ்த்துகளை தெரிவித்தார்கள்.. அமைச்சர்கள் மா.சுப்பிரமணியம், அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் உதயநிதி ஸ்டாலினுக்கு அமைச்சர் பதவி அளிக்கப்பட வேண்டும் என்று வெளிப்படையாக பேசி வருகின்றனர்...

 நல்ல தருணம்

நல்ல தருணம்

இதுபற்றி உதயநிதி ஸ்டாலினிடம் பத்திரிகையாளர்கள் பேசும்போது, 'நான் அமைச்சராவதை முதல்வர்தான் முடிவு செய்வார்' என்று பதிலளித்திருந்தார்.. இந்த நிலையில் உதயநிதி ஸ்டாலின் விரைவில் அமைச்சரவையில் சேர்க்கப்படுவார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன... அவரை அமைச்சராக்குவதற்கான நல்ல தருணம் கணக்கிடப்பட்டுள்ளது... அதன்படி, 14-ந் தேதியன்று அவர் அமைச்சராக நியமிக்கப்படலாம் என்கிறார்கள்.. இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறையை அவருக்கு வழங்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

 10வது ரூம்

10வது ரூம்

அதுமட்டுமல்ல, தலைமை செயலகத்தில் அமைச்சர்களுக்கு தரை தளம், முதல் மாடி, 2-வது மாடி, 3-வது மாடிகளில் தனித்தனி அறை ஒதுக்கப்பட்டு இலாகா வாரியாக அமைச்சர்கள் அந்த அறைகளை பயன்படுத்தி வருகின்றனர். அந்தவகையில், உதயநிதி ஸ்டாலினுக்கு அமைச்சர் பதவி விரைவில் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், தலைமை செயலகத்தில் 10-வது கேட் நுழைவு வாயில் அருகே உள்ள அறை வேகமாக தயாராகி வருகிறது.. இதேபோல் 2-வது மாடியிலும் ஒரு அறை முழு வீச்சில் புதுப்பிக்கப்பட்டு வருகிறது. எனவே அமைச்சரவை மாற்றி அமைக்கப்படும்போது உதயநிதிக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட்டால், அவருக்காக இதில் ஒரு அறை ஒதுக்கப்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

 2 சேஞ்ச்

2 சேஞ்ச்

இதனிடையே, கூட்டுறவுத் துறையை அமைச்சர் ராமச்சந்திரனுக்கும், வருவாய் துறையை பெரியசாமிக்கும் மாற்றிக் கொடுப்பது குறித்து முதல்வர் சமீபத்தில் ஆலோசித்துள்ளதாக தெரிகிறது.. இதையடுத்து, இது தொடர்பான முடிவையும் இருவரிடமும் முதல்வர் தெரிவித்து உள்ளார்... அவரது முடிவையும் இரண்டு அமைச்சர்கள் ஏற்றுக் கொண்டுள்ள நிலையில், அவர்கள் இலாகாக்கள் மாற்றியமைக்கப்படும் என்றும் சொல்கிறார்கள்.

க்ளைமேக்ஸ்

க்ளைமேக்ஸ்

அதாவது, தென் மண்டல கட்சி பொறுப்பாளராகவும், துணை பொதுச்செயலாளராகவும் அமைச்சர் பெரியசாமி இருந்து வருகிறார். அதேபோல, தென்காசி மாவட்டத்திற்கு அமைச்சர் பிரதிநிதித்துவம் இல்லாததால், பொறுப்பு அமைச்சராக ராமச்சந்திரன் உள்ளார்.. திமுக ஆட்சி அமைந்ததுமே, மிக முக்கியமான இலாகா கிடைக்கும் என்று பெரியசாமி எதிர்பார்த்தாராம்.. ஆனால், அவருக்கு கூட்டுறவுத் துறை வழங்கப்பட்ட நிலையில், அதிருப்தியாகவும் இருந்ததாக சொல்லப்பட்டது.. இந்நிலையில்தான், 2 நாளைக்கு முன்பு, முதல்வருடன் பெரியசாமியும் ரயிலில் பயணித்போது, துறையை மாற்றி தருவது குறித்து அவரிடம் ஆலோசிக்கப்பட்டதாம். பிறகுதான் முதல்வர் அந்த முடிவை சம்பந்தப்பட்டவர்களிடமும் தெரிவிக்க இருவருமே மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொண்டார்களாம்..

English summary
large room preparing in chief secretaries office and Is there going to be a change in the cabinet?
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X