சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

டைம் நெருங்குகிறது.. வருமான வரி தாக்கலுக்கு ஜூலை 31 கடைசி நாள்.. மீறினால் ரூ.5,000 அபராதம்..!

வருமான வரி கணக்கு தாக்கல் செய்யாதவர்களுக்கு 31-ந் தேதிக்கு பிறகு ரூ.5,000 அபராதம்

Google Oneindia Tamil News

சென்னை: ஜூலை 31-ம் தேதி அதாவது நாளை மறுநாளுக்குள் வருமான வரி கணக்கை தாக்கல் செய்யாவிட்டால், ரூ.5000 அபராதம் செலுத்த நேரிடும் என்று வருமான வரித்துறை தெரிவித்துள்ளது.

மாத ஊதியம் பெறுவோரும், தொழிம் முனைவோரும் வருடத்துக்கு ஒருமுறை வருமான வரி விவரங்களை தாக்கல் செய்ய வேண்டும் என்பது பொதுவான விதிமுறை.

மார்ச் மாதத்துடன் நிறைவடையும் நிதி ஆண்டுக்கான விவரங்களை, அதே ஆண்டு ஜூலை 31-ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டியதும் முக்கிய நடைமுறையாகும்.

ஆண்டு வருமானம் ரூ.2.50 லட்சத்திற்கும் மேல் பெறும், யாராக இருந்தாலும், வரிக்கணக்கு தாக்கல் செய்ய வேண்டும்.. அதிலும், ஆண்டு வருமானம் ரூ.5 லட்சம் வரையிலான வருமான வரிக்கணக்கிற்கு, கூடுதல் வரி எதுவும் இல்லை.

6 ஆண்டுகளில் புதிய தொழில்கள் எண்ணிக்கை 15,000 சதவீதம் அதிகரிப்பு: பிரதமர் மோடி பெருமிதம் 6 ஆண்டுகளில் புதிய தொழில்கள் எண்ணிக்கை 15,000 சதவீதம் அதிகரிப்பு: பிரதமர் மோடி பெருமிதம்

டிசம்பர்

டிசம்பர்

ஆனால் அதே ரூ.5 லட்சத்துக்கு மேல் அதிகமான வருமானம் இருந்தால் வரி விதிக்கப்பட்டு வருகிறது. முன்கூட்டியே வருமான வரி தாக்கல் செய்து விட்டால் , அவருக்கு அரசு சலுகைகளையும் வழங்கி வருகிறது.. இந்நிலையில், கொரோனா தொற்று பரவல் இந்தியாவில் கடந்த 2 வருடங்களாகவே மிக தீவிரமாகிவிட்டது.. அடுத்தடுத்த லாக்டவுன்களும் போடப்பட்டுவிட்டன.. அதனால், வருமான வரித் தாக்கல் செய்ய, டிசம்பர் மாதம் வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டது.

 வருமான வரிக்கணக்கு

வருமான வரிக்கணக்கு

அந்தவகையில், 2021 - 2022ம் நிதி ஆண்டுக்கான வருமானம் வரிக்கணக்கை தாக்கல் செய்வதற்கான காலக்கெடு நாளை மறுநாள் அதாவது ஜூலை 31-ம் தேதியுடன் முடிவடைகிறது... கடந்த 2 வருடங்களை போல இந்த ஆண்டு கூடுதல் கால அவகாசம் எதுவும் வழங்கப்படாது என்று மத்திய அரசும் திட்டவட்டமாக சொல்லிவிட்டது.. ஒருவேளை கடைசி தேதியை தவறவிட்டு, மறுநாள் ஆகஸ்ட் 1ம் தேதிக்கு பிறகு சமர்ப்பிக்கப்படும் வருமான வரிக்கணக்குகளுக்கு தாமத கட்டணத்தை செலுத்த வேண்டிய நிலை ஏற்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது..

 5000 ரூபாய்

5000 ரூபாய்

கடந்த ஜூலை 26-ம் தேதி வரை ரூ.3.4. கோடிக்கும் அதிகமானோர் வருமான வரி தாக்கல் செய்துள்ளதாகவும், கடந்த 26-ம் தேதி மட்டும் ரூ.30 லட்சம் வருமான வரிக்கணக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும் வருமான வரித்துறை தகவல் வெளியிட்டுள்ளது.. அத்துடன் தாமதமாக தாக்கல் செய்தால் ரூ.5 லட்சத்திற்கும் குறைவான வருமான வரிக்கணக்கிற்கு1000 ரூபாயும், ரூ.5 லட்சத்திற்கும் அதிகமான வருமான வரிக்கணக்கிற்கு 5000 ரூபாயும் அபராதமாக வசூலிக்க வேண்டும், என்று தெரிவிக்கப்பட்டுள்ளது...

 கடைசி தேதி

கடைசி தேதி

இப்படி யாரும் கடைசி தேதியை மிஸ் செய்ய வேண்டாம் என்பதற்காகவும், தாமத கட்டணத்தை செலுத்திவிட நேர்ந்திட கூடாது என்றும் என்பதற்காகவும், வரி செலுத்துவோருக்கு மெசேஜ்கள் மூலம், மெயில்களை அனுப்பியும் வருமான வரித்துறை நினைவூட்டி வருகிறது.. அதேசமயம், ஒருவர் முன்னதாகவே வருமான வரி தாக்கல் செய்துவிட்டால், அதற்கு நிறைய சலுகைகளையும் அரசு வழங்கி வருவதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

English summary
last date: income tax: penalty of rs 5000 for non filing of income tax returns after 31st வருமான வரி கணக்கு தாக்கல் செய்யாதவர்களுக்கு 31-ந் தேதிக்கு பிறகு ரூ.5,000 அபராதம்
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X