சென்னை, திருப்பூரில் என்ஐஏ ரெய்டு.. போலி ஆதார் அட்டை கொடுத்த ஏஜெண்ட்.. வங்க தேசத்தினர் சிக்கினர்
சென்னை: தமிழ்நாடு, புதுச்சேரியில் என்ஐஏ அதிகாரிகள் நடத்திய சோதனையில் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். திரிபுரா மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என போலியான ஆதார் அடையாள அட்டை வைத்திருந்த வங்கதேசத்தை சேர்ந்த மூன்று பேரையும் போலி ஆதார் அட்டை தயாரித்து கொடுத்த ஏஜெண்ட்டையும் கைது செய்து விசாரித்து வருகின்றனர். புதுச்சேரியில் போலி முகவரி கொடுத்து தங்கியிருந்தவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.
கார் குண்டு வெடிப்பு: கோவையில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் தீபாவளிக்கு முன்பாக 23ஆம் தேதி நிகழ்ந்த கார் குண்டு வெடிப்பு சம்பவம் பதற்றத்தை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் தொடர்பாக 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். என்ஐஏ வசம் வழக்கு ஒப்படைக்கப்பட்டுள்ளது. கார் குண்டு வெடிப்பு தொடர்பாக என்ஐஏ அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வரும் நிலையில் அவ்வப்போது சந்தேகத்திற்கு இடமான வகையில் சோதனை நடத்தப்படுகிறது. சென்னையில் கடந்த சில வாரங்களாகவே பல பகுதிகளில் சோதனை நடத்தப்பட்டு பொருட்கள் கைப்பற்றப்பட்டு வருகின்றன.

என்ஐஏ அதிகாரிகள்: தமிழ்நாடு முழுவதும் கோவை, நெல்லை பகுதிகளில் தடை செய்யப்பட்ட அமைப்புகளுடன் தொடர்பில் இருப்பவர்களின் வீடுகளில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை நடத்துவது வழக்கமான ஒன்றாகும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பல்வேறு இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அதன்படி, பள்ளிக்ககரனை, படப்பை உள்ளிட்ட பகுதிகளில் சோதனை நடைபெற்றது.
6 இடங்களில் சோதனை: செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் அடுத்துள்ள கருநீலம் பகுதியில் உள்ள தனியார் அடுக்கு மாடி குடியிருப்பு பகுதியிலும் அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். மறைமலைநகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வரும் நபரின் செல்போன் பேச்சுக்கள் சந்தேகத்திற்கு இடமான நிலையில் இருந்ததை அடுத்து என்ஐஏ அதிகாரிகள் சோதனை மேற்கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சென்னையை அடுத்த தாம்பரம், பள்ளிக்கரனை,படப்பை, கேளம்பாக்கம் உள்ளிட்ட இடங்களிலும் என்ஐஏ அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.
சிக்கிய நபர்: இந்த நிலையில் படப்பையில் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்த சகாபுதீன் என்பவரை என்ஐஏ அதிகாரிகள் கைது செய்தனர். சகாபுதீன் கடந்த 2 மாதங்களாக படப்பையில் தங்கியிருந்த நிலையில் என்ஐஏ அதிகாரிகள் அவரது குடியிருப்பில் சோதனை நடத்தினர். அவரது நடவடிக்கைகள் சந்தேகத்திற்கு இடமான வகையில் இருந்ததை அடுத்து என்ஐஏ அதிகாரிகள் கைது செய்தனர்.
4 பேர் கைது: கைது செய்யப்பட்ட சகாபுதீனிடம் இருந்து போலி ஆதார் அட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டன. இதே போல மறைமறை நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்த முன்னா மற்றும் அவருடன் தங்கியிருந்தவரையும் என்ஐஏ அதிகாரிகள் கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட 3 பேருமே வங்க தேசத்தை சேர்ந்தவர்கள் என்றும் திரிபுராவை மாநிலத்தவர்கள் போல என போலி ஆதார் அட்டை தயார் செய்து சென்னையில் தங்கி வேலை செய்து வந்தது காவல்துறை விசாரணையில் தெரியவந்துள்ளது.
போலி ஆதார் அட்டை: வங்க தேசத்தில் இருந்து போலி ஆதார் அட்டையை பயன்படுத்தி சென்னையில் ஊடுருவி மறைமலைநகர் பகுதியில், ஜூஸ் கடையில் வேலை செய்து வந்திருக்கிறார் முன்னா, மற்றும் அவருடன் தங்கி இருந்த மியான் ஆகியோரையும் கைது செய்த என்ஐஏ அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டுள்ளனர். போலி ஆதார் அட்டை தயாரித்து கொடுத்து அவர்களுக்கு வேலை கொடுத்து ஏஜெண்ட் ஆக செயல்பட்ட சாகித் உஷேன் என்பவரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
திருப்பூரில் என்ஐஏ: இதே போல திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் உள்ள பனியன் நிறுவனங்களில் பணிபுரியும் வடமாநில தொழிலாளர்கள் தங்கியுள்ள இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை மேற்கொண்டுள்ளனர். வட மாநில தொழிலாளர்கள் போர்வையில் திருப்பூரில் வங்கதேசத்தை சேர்ந்தவர்கள் பணி செய்கிறார்களா என்றும் என்ஐஏ அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். வட மாநிலங்களில் இருந்து வேலைக்கு அழைத்து வரும் நிறுவனங்களிலும் சோதனை நடைபெற்றது.
புதுச்சேரி: இதே போல புதுச்சேரியிலும் என்ஐஏ அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். புதுச்சேரியின் 100அடி சாலையில் உள்ள எல்லைபிள்ளைச்சாவடி பகுதியில் உள்ள தனியாருக்கு சொந்தமான குடோனிலும் என்ஐஏ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். புதுச்சேரி போலீசாரிடன் உதவியுடன் இந்த சோதனையில் 5 அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். இந்த நிலையில் தற்போது போலி முகவரி வைத்து தங்கியிருந்த கொல்கத்தாவைச் சேர்ந்த பாபு என்பவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
என்ஐஏ ரெய்டு பின்னணி: வடமாநில தொழிலாளர்கள் போர்வையில் இந்தியாவுக்குள் ஊடுருவும் வங்கதேசத்தினர், மியான்மர் நாட்டினர் ஊடுருவுவதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக என்ஐஏ வழக்கு பதிவு செய்துள்ளது. அதனடிப்படையில் தமிழ்நாடு மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களிலும் என்ஐஏ அதிகாரிகள் இன்று சோதனை மேற்கொண்டுள்ளனர்.
-
அந்த 2 லேடீஸ்..1 மாஜி தலை! பாஜக மண்ணைக் கவ்வ ‘இவர்கள்’ தான் காரணம்! அமித் ஷாவிடம் அடுக்கிய அண்ணாமலை! -
பழைய பன்னீர்செல்வமா வாங்க.. அண்ணாமலையை விடாத அமித் ஷா! பாஜக அள்ளிக் கொடுக்கும் ரெண்டு லட்டு! என்ன? -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
அமித்ஷா தரும் அந்த 'பவர்ஃபுல்' புதிய ஆஃபர்.. அண்ணாமலை பச்சை கொடி காட்டுவாரா? இன்று என்ன முடிவு? -
திருச்சியில் கார் ஓட்டுநரால் 14 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடுமை.. மது கொடுத்து பாலியல் தொல்லை! -
அமித் ஷாவிடம் நேரடியாக அண்ணாமலை சொன்ன மேட்டர்.. அடுத்த நொடி அலறிய சென்னை பாஜக அலுவலகம்! என்ன நடந்தது -
திருச்சி நர்சிங் மாணவி உயிரிழப்புக்கு தரமற்ற மருந்தே காரணம்.. ஆய்வறிக்கையில் வெளியான அதிர்ச்சி தகவல் -
அப்பன் மகனுக்கு சம உரிமை கொடுக்க இது என்ன குடும்ப சொத்தா? கே.என்.நேரு குறித்து திருச்சி சூர்யா -
அண்ணாமலை தலைவராக இருந்தால் இந்த வெற்றி கூட வந்திருக்காது.. பாஜக துணை தலைவர் கேபி ராமலிங்கம் விளாசல் -
அண்ணாமலைக்கு, விஜய் கொடுத்த நம்பிக்கை! பாஜகவிற்கு ‘குட்பை' கூறி புது கட்சி தொடங்குவது ஏன்? பின்னணி -
விஜய் ‘இன்னும் மாறவில்லை’.. சீறும் திமுக, அதிமுக! திருச்சியில் வெடித்த அடுத்தகட்ட அரசியல் போர்! -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா?












Click it and Unblock the Notifications