2022 இன் கடைசி வானிலை ரிப்போர்ட்.. இன்று மழைக்கு வாய்ப்பு! ஜனவரி 3 முதல் அடுத்த ரவுண்டு ஸ்டார்ட்

Subscribe to Oneindia Tamil

சென்னை: கடந்த சில நாட்களுக்கு முன்பாக வங்கக்கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் குமரிக்கடல் பகுதி அருகே வலுவிழந்த நிலையில், இந்த ஆண்டின் கடைசி வானிலை அறிக்கை தற்போது வெளியாகி இருக்கிறது. அதன் படி தென் மாவட்டங்களில் இன்று மழைக்கான வாய்ப்பு இருப்பதாகவும், வடதமிழக மாவட்டங்களில் வறண்ட வானிலை நிலவக்கூடும் எனவும் தெரிவித்து இருக்கிறார்.

வங்கக்கடலில் கடந்த சில நாட்களாக நிலவி வந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதியாக வலுவிழந்து, அடுத்து குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு பகுதியாக நிலவியது.

தமிழ்நாட்டின் தென் மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களில் இதனால் சமீப நாட்களாக நல்ல மழை பெய்த நிலையில் அரபிக்கடலில் அருகே கடந்த 27 ஆம் தேதி இந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி வலுவிழந்தது.

கடைசி வானிலை அறிக்கை

கடைசி வானிலை அறிக்கை

இதனால் 30 ஆம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும், ஜனவரி தொடக்கத்தி வறண்ட வானிலை நிலவும் எனவும் வானிலை மையம் தகவல்கள் வெளியாகின. இந்த நிலையில் இந்த ஆண்டின் கடைசி நாளான இன்று சென்னை மண்டல வானிலை ஆய்வு மைய இயக்குநர் அறிக்கை வெளியிட்டு இருக்கிறார்.

லேசான மழைக்கு வாய்ப்பு

லேசான மழைக்கு வாய்ப்பு

அதில்,"கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக இன்று தென் தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். வடதமிழக மாவட்டங்களில் வறண்ட வானிலை நிலவக்கூடும். வடதமிழக உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டம் காணப்படும்.

அடுத்த ரவுண்டு மழை

அடுத்த ரவுண்டு மழை

நாளை மற்றும் நாளை மறுநாளான ஜனவரி 2 ஆம் தேதி தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். வடதமிழக உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டம் காணப்படும். ஜனவரி 3 ஆம் தேதி மற்றும் ஜனவரி 4 ஆம் தேதிகளில் தமிழக கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். உள் மாவட்டங்களில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.

சென்னை வானிலை

சென்னை வானிலை

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 31-32 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 23 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும். கடந்த 24 மணி நேரத்தில் சிவகங்கை மட்டும் 1 சென்டிமீட்டரில் பதிவான மழை அளவு பதிவாகி உள்ளதாவௌம், மீனவர்களுக்கான எச்சரிக்கை ஏதுமில்லை." என வானிலை மையம் தெரிவித்து உள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+