தவெக ஜெயித்தது எப்படி.. ஸ்டாலின் சார் களம் மாறிடுச்சு, காட்சியும் மாறிதான் ஆகனும்.. திமுக ஆதரவாளர்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தவெக 20% வாங்கி எதிர் ஓட்டுகள் பிரிக்கும், அதனால நாம ஈசியா ஜெயிச்சுரலாம்ன்னு மெத்தன கணக்கு போட்டு, தவெகவை எதிர்க்க பல நியாயமான காரணங்கள் பல சந்தர்ப்பங்கள் கிடைச்சும், அமைதியா இருந்து, அவன் 30% கிராஸ் பண்ணி போறாங்கனு ரிலீஸ் பண்றப்ப நாம் மிகவும் லேட். இதான் முக்கியமான காரணம் என்று திமுக ஆதரவாளர் ஒருவர் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்

முன்னாள் முதல்வரும், திமுக தலைவருமான ஸ்டாலின் திமுக 2026 சட்டசபை தேர்தலில் தோற்றது குறித்து பேசுகையில், "எல்லாருக்கும் வணக்கம். ஒரு சின்ன கேப்புக்கு பிறகு உங்ககிட்ட வீடியோவில பேசுறேன். கடைசியாக தொகுதி மறுவரையறை பற்றி பேசி இருந்தேன். அதை தொடர்ந்து தேர்தல் எல்லாம் நடந்து முடிஞ்சிருச்சு, ரிசல்ட்டும் வந்துச்சு. ரிசல்ட்டுக்கு பிறகு என்னவெல்லாம் நடந்துச்சு. என்ன நடக்குதுன்னு எல்லாத்தையும் பார்த்துட்டுதான் இருக்கோம். 2 வாரமா எல்லா வீடுகளிலேயும் நியூஸ் சேனல் தான் ஓடிட்டே இருக்கு. அந்த அளவுக்கு பரபரப்புக்கு பஞ்சம் இல்லாம போகுது.

mk stalin

2026 தேர்தல் முடிவுகளை எடுத்துக்கிட்டா, திமுக ஒரு பெரிய பின்னடைவை சந்திச்சிருக்கு. அதை நாம ஏத்துக்கிட்டுதான் ஆகணும். இது நிச்சயமா நாம எதிர்பார்த்த ரிசல்ட் இல்ல. இதுக்கு அவர் காரணம், இவர் காரணம்னு யாரும் யார் மேலயும் பழி போடாதீங்க. தலைவரா இந்த தோல்விக்கு நானே பொறுப்பேத்துக்கிறேன். வெற்றி கிடைக்கும்போது எனக்குத்தான் அந்த கிரெடிட் வந்து சேருது. அப்போ தோல்வி அடையும் போதும் அந்தப் பழியை நான் தான் ஏத்துக்கணும். அதுதான் ஒரு நல்ல தலைவருக்கான இலக்கணம்.

சரி, தோத்துட்டோம்னு அதையே நினைச்சுக்கிட்டு முடங்கிட மாட்டேன். உடனே அப்டேட் ஆகி மீண்டும் வருவேன். நாம எல்லாருமே அப்படித்தான் வரணும். அதுக்கு உங்களோட ஆலோசனைகள், பரிந்துரைகள், ஐடியாக்கள் எனக்கு வேணும். எலெக்சனா இருந்தாலும், கரெக்சனா இருந்தாலும் உங்ககிட்டதான் வந்தாகணும். மக்கள்தான் எல்லாம். இந்த தேர்தல் முடிவுகளுக்கு என்ன காரணம்? திமுக இன்னும் எப்படி எல்லாம் உங்களுக்காக உழைக்கணும்னு நீங்க நினைக்கிறீங்கன்னு சொல்லுங்க. உங்களோட கருத்துகளை ஓப்பனா சொல்லுங்க.அதுக்காகத்தான் இந்த 'உடன்பிறப்பின் குரல்' வெப்சைட். இதுல உங்க கருத்துகளை பதிவிடுறது ரொம்ப சிம்பிள். உங்க வாய்ஸ்லயே பேசி கருத்துகளைச் சொன்னீங்கன்னா அதுவே டைப் ஆகிடும். நேரடியா நீங்களே டைப் பண்ணியும் சொல்லலாம், இல்லைன்னா நீங்க பேப்பர்ல எழுதி அந்த போட்டோவை அப்லோட் பண்ணலாம், டாக்குமெண்ட்டா அனுப்பலாம். உங்க கருத்துகள் எனக்கு வந்து சேர்ந்துடும்.

அதையெல்லாம் படிச்சுப் பரிசீலிச்சு, நம்ம அடுத்தகட்ட நடவடிக்கையை வடிவமைக்கப் போறேன். நம்முடைய அணுகுமுறை, சிந்தனை, செயல்பாடு எல்லாத்தையும் மாத்தி ஆகணும். காலத்துக்கு ஏத்த மாதிரி எவால்வ் ஆகித்தான் ஆகணும். உங்க கருத்துகளின் அடிப்படையில 'டிஎம்கே 2.0' வரும். கட்சியோட எல்லா லெவல்லயும் தேவையான மாற்றங்களைச் செய்யப் போறேன். இதனால அடுத்த 100 ஆண்டுகளுக்கும் இந்த இயக்கம் உயிர்ப்போடு இயங்கும், உங்களுக்காக இயங்கும். உடன்பிறப்பே நீங்க சொல்லுங்க, நான் கேட்கிறேன்" இவ்வாறு மு.க.ஸ்டாலின் பேசியுள்ளார்.

இதுபற்றி பல திமுகவினர் ஏன் திமுக தோற்றது, தவறுஎங்கே நடந்து என்று விளக்கம் அளித்து வருகிறார்கள். அந்தவகையில் திமுக ஆதரவு நெட்டிசன் ஒருவர் அளித்த விளக்கத்தில், தவெக 20% வாங்கி எதிர் ஓட்டுகள பிரிக்கும், அதனால நாம ஈசியா ஜெயிச்சுரலாம்ன்னு மெத்தன கணக்கு போட்டு,தவெகவை எதிர்க்க பல நியாயமான காரணங்கள் பல சந்தர்ப்பங்கள்ல கிடைச்சும், அமைதியா இருந்து, அவன் 30% கிராஸ் பண்ணி போறாங்கனு ரிலீஸ் பண்றப்ப நாம் மிகவும் லேட். இதான் முக்கியமான காரணம்.

விஜய் திமுகவை திட்டி, விக்டம் பிளே பண்ணி ஸ்கோர் பண்ணிட்டு இருந்தப்ப அமைதியா இருந்தது. கரூர்ல செந்தில் பாலாஜிதான் பண்ணாரு என்று தவெக பரப்புனதுக்கு அதிகாரிகள் கிளாரிபை பண்ணிட்டு இருந்த சமயத்துல "தொண்டன் சாகுறது எந்த தலைவனும் விரும்ப மாட்டான்" ன்னு புறா விட்டதெல்லாம் பெரும் தவறான கணிப்பு.

இத்துப்போன எடப்பாடி தான் எதிர்கட்சி தலைவர், அவருக்கு தான் பதில் சொல்லுவோம்ன்னு திரிஞ்சது தான், விஜய் மக்களுடன் தனது ஒருவழிப் பாதையிலான வெறுப்புத் தொடர்பை மேற்கொள்ள வழிவகுத்தது.. ஒரு தடவ கூட திமுக விஜய மறுத்து பேசவில்லை. இந்த ஸ்டேட்டர்ஜியை சொன்னவன தூரமா வச்சுட்டு ஒரு 3 வருசம் அமைதியாக இருங்க...

கரூர்ல உள்ள போனா உயிர் சேதாரம் ஆகும்ன்னு போலீஸ் சொல்லியும் உள்ளதான் போவம்ன்னு சொன்ன ஆதவ் அன்னிக்கு நைட் ஜெயில்ல இருந்திருக்கனும்.விஜயோட பண்ணையார்த்தனம், லாட்டரி மாஃபியா, ஆந்திர காரானைட் மாஃபியா லிங்க்ன்னு நிறைய இருக்கு விஜய எதிர்த்து பேச, ஒரு மண்ணும் பண்ணல.

இந்த அளவுக்கு வெறுப்பு அரசியலை ப்ரீ கேண்ட் ஆ பண்ண விட்டது எந்த ஒரு அரசியல் கட்சியும், தலைவரும் பண்ணாத காரியம். இது தன்னோட அரசியல் பிம்பத்துக்கு ஒத்துப்போகுதுன்னு ஸ்டாலின் ஒத்துகிட்டதுலாம் மோசமான தவறு. களம் மாறிடுச்சு, காட்சியும் மாறிதான் ஆகனும்.. ஸ்டாலின் சார்.. எழுந்திருங்க சார்..." என்று கூறியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+