பாலியல் வன்கொடுமைக் குற்றம்.. மரண தண்டனை விதிக்க சட்டம் தேவை.. சீமான் ஆவேசம்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: பாலியல் வன்கொடுமைக் குற்றங்களுக்கு மரண தண்டனை விதிக்க சட்டம் இயற்ற வேண்டும் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார்.

திருவண்ணாமலை மாவட்டம் கெங்கை சூடாமணி கிராமத்தில் தனியார் பள்ளியில் படித்து வந்த 4 வயது குழந்தை பள்ளி தாளாளரின் கணவர் காமராஜ் என்பவரால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்த மிருகத்தனமான செயலை செய்த காமராஜ் அரசு பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறாராம். இவரைப் போன்றவர்கள் ஆசிரியர் சமூகத்திற்கே இழுக்கு என்று பொதுமக்களும், அரசியல் கட்சியினர் விமர்சித்தனர்.

சீமான் அறிக்கை

சீமான் அறிக்கை

கணவனின் மிருகத்தனமான செயலுக்கு உடந்தையாக இருந்த காமராஜின் மனைவியான பள்ளித் தாளாளரையும் வழக்கில் சேர்க்க வேண்டும்; அவரையும் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் பாலியல் வன்கொடுமைக் குற்றங்களுக்கு மரண தண்டனை விதிக்க சட்டம் இயற்ற வேண்டும் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தி உள்ளார்.

வேதனை

வேதனை

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், திருவண்ணாமலை மாவட்டம், சேத்துப்பட்டு அருகே கெங்கை சூடாமணியிலுள்ள தனியார் பள்ளியில் 4 வயது பெண் குழந்தை அரசுப் பள்ளி ஆசிரியரால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட செய்தியறிந்து பெரும் அதிர்ச்சியும், ஆழ்ந்த மனவேதனையும் அடைந்தேன்.

சீமான் கவலை

சீமான் கவலை

தாய்வழிச் சமூகமாக விளங்கிப் பெண்களுக்கு முதன்மைத்துவம் வழங்கிப் போற்றிக் கொண்டாடிய தமிழ்ச்சமூகத்தில், பெண் பிள்ளைகள் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்படுகிற இன்றைய கொடும் நிலை கண்டு வெட்கி தலைகுனிகிறேன். குற்றச்சமூகமாக மாறிப்போன இச்சமூகத்தில் வாழும் பெண் பிள்ளைகளின் பாதுகாப்பு குறித்தப் பெருங்கவலை என்னை வாட்டி வதைக்கிறது.

மரண தண்டனை

மரண தண்டனை

அரிதினும் அரிதான வழக்குகளில் வழங்கப்படும் மரணத் தண்டனையை பாலியல் வன்கொடுமைக் குற்றங்களுக்கான தண்டனையாக வரையறுத்து, அதற்கென தனிச்சட்டமியற்றி, தண்டனைகளைக் கடுமையாக்குவதே இக்குற்றச்செயல்களைத் தடுப்பதற்கான ஒரே வாய்ப்பாகும்.

சீமான் வலியுறுத்தல்

சீமான் வலியுறுத்தல்

ஆகவே, இக்குற்றச்செயலில் ஈடுபட்டு கைது செய்யப்பட்டுள்ள அரசுப்பள்ளி ஆசிரியரான காமராஜை நிரந்தரப் பணி நீக்கம் செய்து, கடும் சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து, உச்சபட்ச தண்டனை கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும். பாதிக்கப்பட்டுள்ள குழந்தைக்கு தகுந்த மருத்துவச் சிகிச்சையும், உளவியல் சிகிச்சையும் அளித்து, மீண்டு வர அரசு ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+