அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம் அமைக்க இடம் கொடுத்தவர் கருணாநிதி..முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்
சென்னை: தான் குடியேற இருந்த, குடியேறுவதற்காக பரிந்துரை செய்யப்பட்ட பூம்பொழில் இல்லத்தை டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம் அமைப்பதற்காக கொடுப்பதாக ஒதுக்கீடு செய்து உத்தரவிட்டவர் தலைவர் கலைஞர்" என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். ஏழை எளிய மக்களின் அடிப்படை உரிமைகளை காக்க மாணவர்கள் தங்களது சட்டப் படிப்பை பயன்படுத்த வேண்டும் என்று முதல்வர் மு.க ஸ்டாலின் கூறியுள்ளார்.
சென்னை பெருங்குடியில் உள்ள அம்பேத்கர் பல்கலைக்கழகத்தில் வெள்ளி விழா கல்வெட்டை முதலமைச்சர் முக ஸ்டாலின் திறந்துவைத்தார். அம்பேத்கர் பல்கலைக்கழகத்தில் வெள்ளி விழாவில் சிறப்பு மலரை வெளியிட்டு பேசினார்.
1997ல் கலைஞரால் தெற்காசியாவிலேயே முதல் முதலாக சட்டப் பல்கலைக்கழகம் தொடங்கப்பட்டது தான் அம்பேத்கார் சட்ட பல்கலைக்கழகம் என்றும் 1989ஆம் ஆண்டு நூற்றாண்டு கண்ட சென்னை சட்ட கல்லூரிக்கு அம்பேதகர் சட்டக்கல்லூரி என பெயர் சூட்டப்பட்டது.

இடம் கொடுத்த கருணாநிதி
தலைவர் கலைஞர் தான் குடியேற இருந்த, குடியேறுவதற்காக பரிந்துரை செய்யப்பட்ட பூம்பொழில் இல்லத்தை டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம் அமைப்பதற்காக கொடுப்பதாக ஒதுக்கீடு செய்து உத்தரவிட்டார். தன்னலம் கருதாது பொது நோக்கிலே பல்கலைக்கழகம் தொடங்கிட, செயல்பட வழிவகை செய்தவர் கலைஞர்.

சட்டப்பல்கலைக்கழகம் விரிவாக்கம்
2008ஆம் ஆண்டு முதல்வர் கலைஞர் தலைமையிலான அரசால் சட்டப் பல்கலைக்கழக விரிவாக்கப் பணிகளுக்கு 15 ஏக்கர் நிலபரப்பை பெருங்குடி பகுதியில் தகவல் தொழில்நுட்ப பூங்காவுக்கு அருகில் ஒதுக்கீடு செய்யப்பட்டது. 2009-ம் ஆண்டு தாம்பரம் பகுதியில் சட்டக் கல்வி வளர்ச்சிக்கென 2 ஏக்கர் நிலம் இந்த பல்கலைக்கழகத்திற்கென முதல்வர் கலைஞர் தலைமையிலான அரசால் வழங்கப்பட்டது. இதனை உருவாக்கியது முதல் சிறிதுசிறிதாக வளர்த்தவர் தலைவர் கலைஞர்.

சமூக நீதி கொள்கை
40 மாணவர்களுடன் ஆரம்பிக்கப்பட்ட இந்த பல்கலைக்கழகம் தற்போது 4500 மாணவர்களைக் கொண்டிருக்கிறது. தற்போது 11 முதுநிலை பிரிவுகளும், 5 இளங்கலைப் பிரிவுகளும் உள்ளன. 250-க்கும் மேற்பட்ட மாணவர்கள் சட்டம் மற்றும் ஆராய்ச்சி படிப்புகளை படித்து வருகின்றனர். இந்த பல்கலைக்கழகம் அரசின் சமூகநீதி கொள்கையின் அடிப்படையில் மாணவர்கள் சேர்க்கை நடைபெறுகிறது.

ஒரே பல்கலைக்கழகம்
அரசு சட்டக் கல்லூரிகளின் மூலமாக இந்தியாவிலேயே மிக சீரிய முறையில், சட்டக் கல்வி கிராமப்புற மாணவர்களுக்கு எளிதில் சென்றடையும் வகையில், சுமார் 20 ஆயிரம் மாணவர்களுக்கு பயிற்சி அளித்து வருகிறது. சட்டப்படிப்பிற்காக பல்கலைக்கழகம் உள்ள ஒரே மாநிலம் தமிழ்நாடு தான் என்றும் சட்ட அறிவை, வாத திறமையை ஏழை எளிய மக்களின் நீதிக்காக பயன்படுத்த வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.

அம்பேத்கர் சட்டப்பல்கலைக்கழக வெள்ளி விழா
தற்போது திமுக ஆட்சிக்காலத்தில் அம்பேத்கர் சட்டப் பல்கலைகழக வெள்ளி விழா நடைபெறுகிறது என்று தெரிவித்துள்ளார். இலவச பேருந்து சேவை மாணவிகளுக்கு பெரும் உதவியாக உள்ளது என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார். அடிப்படை உரிமைகளை காக்க மாணவர்கள் தங்களது படிப்பை பயன்படுத்த வேண்டும் என்று அம்பேத்கர் சட்டப்பல்கலைகழக விழாவில் முதல்வர் மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார்.

நான் முதல்வன் திட்டம்
நமது அரசு அனைத்து தரப்பினருக்கும் உயர் கல்வியை கொண்டு சேர்த்திட வேண்டும் என்ற முனைப்பிலேதான், பல்வேறு சீரிய திட்டங்களை அறிவித்து அதற்கு செயல்வடிவம் கொடுத்து வருகிறது. அனைத்து மாணவர்களையும் தகுதிப்படுத்தும் வகையில்தான் நான் முதல்வன் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. மகளிருக்கு வழங்கப்பட்டுள்ள இலவச பேருந்துசேவை மாணவிகளுக்கு பெரும் உதவிகரமாக அமைந்துள்ளது என்றும் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.
-
விஜய்யை வளர விடக்கூடாது.. உதயநிதி டீமுக்கு போகும் "பவர்"?.. மைசூரில் ஸ்டாலின் போடும் பெரிய பிளான் -
சென்னை மக்களுக்கு நிம்மதி.. கொட்டப்போகும் மழை! வானிலை ஆய்வு மையம் சொன்ன குட் நியூஸ்! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை! -
குடும்பத்தினருடன் குடகு மலைக்குச் சென்ற திமுக தலைவர் ஸ்டாலின்.. கூட யார் யார்லாம் பாருங்க! -
ஸ்டாலின், பினராயி, சித்தராமையா, கே.சி.ஆர்.. அடுத்தடுத்து சரிந்த ராஜ்ஜியம்.. பாஜகவிற்கு அடித்த லக்! -
அம்மாவை இழந்த அஜித்துக்கு மு.க. ஸ்டாலின் ஆறுதல்.. ஒரு வரியில் சொன்ன நெகிழ்ச்சி வார்த்தை.. குவியும் பாராட்டு -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக












Click it and Unblock the Notifications