விஜய்யை வளர விடக்கூடாது.. உதயநிதி டீமுக்கு போகும் "பவர்"?.. மைசூரில் ஸ்டாலின் போடும் பெரிய பிளான்
சென்னை: தமிழக சட்டசபை தேர்தலில் மீண்டும் வென்று ஆட்சியை பிடித்து விடலாம் என்ற நம்பிக்கையில் திமுக இருந்தது. ஆனால் அது நடக்கவில்லை. விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்திடம், திமுக ஆட்சியை பறிகொடுத்துள்ளது. இந்த தோல்வியில் இருந்து மீண்டு வர திமுக பல்வேறு வேலைகளில் ஈடுபட்டு வருகிறது. அந்த வகையில் தற்போது திமுக தலைவர் முக ஸ்டாலின், எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின், மருமகன், சபரீசன், கட்சியின் பொருளாளர் டிஆர் பாலு, முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் உள்ளிட்டோர் மைசூருவுக்கு தனி விமானத்தில் பறந்துள்ள நிலையில் திமுகவில் மேஜர் ஆபரேஷனை மேற்கொள்ள அங்கு திட்டமிட்டு வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
தமிழக சட்டசபை தேர்தலில் வென்று ஆட்சியை பிடிக்கும் முனைப்பில் திமுக இருந்தது. ஆனால் திமுக சறுக்கலை சந்தித்தது. குறிப்பாக முதல்வராக இருந்த திமுக தலைவர் முக ஸ்டாலின், சென்னை கொளத்தூர் தொகுதியில் தவெக வேட்பாளர் விஎஸ் பாபுவிடம் தோல்வியடைந்தார்.
மொத்தமாக திமுக 59 எம்எல்ஏக்களை மட்டுமே பெற்றுள்ளது. பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் உள்பட 15 அமைச்சர்கள் வரை தேர்தலில் தோல்வியடைந்துள்ளனர்.

அதுமட்டுமின்றி முதல்வர் விஜய்க்கு பெரும்பான்மை கிடைக்காததால் திமுக கூட்டணி கட்சிகளான 2 கம்யூனிஸ்ட்டுகள், விசிக மற்றும் இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் கட்சிகள் தவெகவிற்கு ஆதரவு தெரிவித்துள்ளன. இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகள் வெளியில் இருந்து முதல்வர் விஜய்க்கு ஆதரவு அளிக்கும் நிலையில் விசிக மற்றும் இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் கட்சிகள் விஜய்யின் அமைச்சரவையில் இடம்பெற்றுள்ளன. அதோடு காங்கிரஸ் கட்சி திமுக கூட்டணியில் இருந்து முழுமையாக வெளியேறி தவெக அமைச்சரவையில் 2 இடத்தை பெற்றுள்ளது.
இது திமுகவுக்கு பெரும் சிக்கலாக பார்க்கப்படுகிறது. இந்நிலையில் தான் சட்டசபை தேர்தல் தோல்வி குறித்து திமுகவில் தீவிர ஆய்வு கூட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இப்படியான சூழலில் தான் திமுக தலைவர்கள் கர்நாடகா மாநிலம் மைசூருவுக்கு 5 நாள் பயணமாக நேற்று சென்றனர். இவர்கள் 1ம் தேதி சென்னை திரும்ப உள்ளனர். ஸ்டாலின் உடன் அவரது மகனும், கட்சியின் இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின், மருமகன் சபரீசன், கட்சியின் பொருளாளர் டிஆர் பாலு, முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் தனி விமானத்தில் பயணம் செய்தனர்.
இது ஸ்டாலினின் தனிப்பட்ட பயணம் என்று கட்சி தரப்பில் கூறப்படுகிறது. ஆனால் உண்மையில் அரசியல் வட்டாரங்களில் இது பல ஊகங்களை எழுப்பியுள்ளது. குறிப்பாக திமுகவில் இளைஞரணியை சேர்ந்தவர்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் மைசூருவில் ஆலோசனை மேற்கொள்ளப்பட உள்ளதாக கூறப்படுகிறது. தேர்தல் தோல்வியடைந்தது எப்படி? விஜய்யின் தவெகவிற்கு இளைஞர்கள், இளம்பெண்கள் மத்தியில் செல்வாக்கு உள்ள நிலையில் அதனை எப்படி திமுக பக்கம் இழுப்பது? இளைஞருக்கு முக்கியத்துவம் கொடுத்து கட்சியின் எதிர்கால நடவடிக்கை தொடர்பாக ஆலோசனை மேற்கொள்ளப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
ஏற்கனவே விஜய்யின் அரசியல் எழுச்சியால் திமுகவில் உதயநிதி ஸ்டாலினுக்கு செயல் தலைவர் பதவி வழங்கப்படலாம் என்று கூறப்படும் நிலையில் அதுபற்றியும், கட்சியில் பிற இளம் தலைவர்களுக்கு கூடுதல் பொறுப்பு வழங்கப்படுவது பற்றியும் விவாதிக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. தவெகவிற்கு நிகராக திமுகவில் இளைஞர்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் நகர்வுகளை மேற்கொள்வது சார்ந்து இந்த பயணத்தில் முக ஸ்டாலின் ஆலோசிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதனால் விரைவில் திமுக நிர்வாக பதவிகளில் மாவட்ட வாரியாக பெரிய அளவில் மாற்றம் செய்யப்பட அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
-
தவெக ஆட்சி முடிவில் தமிழக கடன் ரூ.20 லட்சம் கோடியாக உயரும்.. சவால்விட்டு சொன்ன தங்கம் தென்னரசு! -
'நான் முதல்வன்' திட்டத்தின் பெயரை மாற்றிய தவெக.. பழைய பதிவுகளை கூண்டோடு நீக்கிய விஜய்! -
'Sofa Model' தவெக ஆட்சியில் எம்எல்ஏ-க்களை கொள்முதல் செய்றாங்க.. உதயநிதி ஸ்டாலின் நேரடி அட்டாக்! -
சென்னை அதிர்ச்சி.. தமிழகத்தின் கஜானா காலிக்கு காரணம் இவரா? விஜய் வெளியிட்ட "வொயிட் பேப்பர்" ரகசியம் -
OG திமுக இதுதான்.. ரெண்டு பேருமே பெரிய தலக்கட்டாச்சே! மணி & கோவை தட்டித் தூக்கும் திமுக! பரபர கொங்கு -
சேலத்தில் பெரியார் சிலை அவமதிப்பு.. கீழ்த்தரமான செயல் என திமுக கண்டனம் -
ஆட்டம் போடாதீங்க! சிறுபான்மை மக்களும் நிரந்தரமாக குட்பை சொல்லிடுவாங்க.. திமுகவை எச்சரித்த காங்கிரஸ் -
விஜய் சார் இதை மறந்துடாதீங்க.. திமுக ஐடி விங்க் வெளியிட்ட மீம் வீடியோ..! -
திமுக செய்த சாதனை.. உண்மையை ஒப்புக்கொண்ட TVK.. அப்போ பெண்களுக்கான 'இந்த' திட்டம் வருமா? வரதா? -
சைலண்ட் கில்லரான ஸ்டாலின்.. அதிமுக நிர்வாகிகளுக்கு பறந்த அழைப்பு.. தவெகவுக்கு செக் -
“கோட் போட்டு வந்தாரு.. டிபன் எடுத்து வந்தாரு.. நாட்டுல பல அக்கிரமம் நடக்குது” விஜய்யை சாடிய ஸ்டாலின் -
தோல்விக்கு காரணம் என்ன? ரிப்போர்ட்டை கண்டதும் உதயநிதி தந்த ரியாக்சன்.. ஸ்டாலினுக்கு போன மெசேஜ்












Click it and Unblock the Notifications