அண்ணாமலை வெளியிட்ட கேசட்.. முதல்வர் ஸ்டாலின் தொடர்ந்த வழக்கு குறித்து வழக்கறிஞர் தேவராஜன் பேட்டி
சென்னை: சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் முதலமைச்சர் முக ஸ்டாலின் சார்பாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மீது சென்னை மாநகர குற்றவியல் வழக்கறிஞர் ஜி.தேவராஜன் அவதூறு வழக்கை தாக்கல் செய்துள்ளார். அந்த வழக்கு குறித்து ஒன் இந்தியாவிற்கு வழக்கறிஞர் தேவராஜன் பேட்டி அளித்துள்ளார்.
சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் சென்னை மாநகர குற்றவியல் வழக்கறிஞர் ஜி.தேவராஜன், முதலமைச்சர் சார்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவில்,பாஜக தலைவர் அண்ணாமலை கடந்த மாதம் 14 ம்தேதி பத்திரிக்கையாளர் சந்திப்பில் தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலினுக்கு எதிராக அவதூறான கருத்துக்களை வெளியிட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

எந்த ஒரு அடிப்படை ஆதாரமும் இல்லாமல் அவதூறு தகவல்களை வெளியிட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.. பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துக் கருத்துக்கள் பொய்யானது மட்டும் இல்லாமல் முதலமைச்சரின் நற்பெயருக்கும், புகழுக்கும் களங்கம் விளைவிக்கும் வகையில் இந்த கருத்துக்களை தெரிவித்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார். தமிழகத்தில் நல்லாட்சி நடத்திவரும், முதல்வருக்கு எதிராக எந்த ஒரு அடிப்படை ஆதாரமும் இல்லாமல் குற்றச்சாட்டுகளை கூறியுள்ளதாக அவர் சுட்டிகாட்டியுள்ளார்.
தமிழகத்தில், இரண்டு லட்சம் மாணவர்கள் பயன்பெறும் வகையில் புதுமைப் பெண் திட்டம் ,காலை உணவு திட்டம் என பல்வேறு திட்டங்களை தமிழக முதல்வர் செயல்படுத்தி வருவதையும் பட்டியலிட்டுள்ளார்.. எனவே பாஜக தலைவர் அண்ணாமலை மீது அவதூறு சட்டத்தின் கீழ் உரிய தண்டனை வழங்க உத்தரவிட வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார்.

இந்த மனு முதன்மை அமர்வு நீதிமன்ற கோடை விடுமுறை கால நீதிபதி உமாமகேஸ்வரி முன்பு விசாரணைக்கு வந்தது. மனு மீதான விசாரணை எட்டு வாரத்துக்கு நீதிபதி ஒத்தி வைத்துள்ளார்.
இந்நிலையில் வழக்கறிஞர் ஜி தேவராஜன் ஒன் இந்தியாவிற்கு அளித்த பேட்டியில், "தமிழ்நாட்டில் பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி, மக்கள் மனங்களில் இடம் பெற்றுள்ள முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் மீது தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை அவர்கள் பல்வேறு பட்ட புகார்களை தெரிவித்தார்.
கடந்த 14.04.2023 அன்று கமலாலயத்தில் பத்திரிக்கையாளர் சந்திப்பின் போது, முதல்வர் மீது பல்வேறுபட்ட அவதூறு புகார்களை கூறியிருக்கிறார். அதன்படி ஒரு கேசட்டையும் வெளியிட்டிருக்கிறார். ஆகையினால் முதல்வரின் சார்பாக அரசு உத்தரவின் படி அண்ணாமலை மீது அவதூறு வழக்கை தாக்கல் செய்தேன். அவதூறு வழக்கை ஏற்றுக்கொண்ட நீதிபதி உமா மகேஷ்வரி அவர்கள், 8 வாரங்கள் விசாரணைக்காக தள்ளி வைத்துள்ளார்" இவ்வாறு வழக்கறிஞர் தேவராஜன் கூறினார்.
-
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
கொந்தளித்த அண்ணாமலை.. வளர்த்த கிடா மார்பில் பாயுதே.. நீட் மறுதேர்வால் மத்திய அரசுக்கு வார்னிங் -
ஜூலையில் அரசியல் களம் சூடுபிடிக்கும்.. முக்கிய அறிவிப்பை வெளியிட்ட அண்ணாமலை! -
“கோட் போட்டு வந்தாரு.. டிபன் எடுத்து வந்தாரு.. நாட்டுல பல அக்கிரமம் நடக்குது” விஜய்யை சாடிய ஸ்டாலின் -
அண்ணாமலையின் புதிய அரசியல் அத்தியாயம்! செப்டம்பர் 14ல் வெளியாகிறது கட்சிப் பெயர்? -
தோல்விக்கு காரணம் என்ன? ரிப்போர்ட்டை கண்டதும் உதயநிதி தந்த ரியாக்சன்.. ஸ்டாலினுக்கு போன மெசேஜ் -
Waiting Is Over.. பாஜகவுக்கு டாடா சொன்ன அண்ணாமலை! புதிய கட்சி எப்போது உதயம்? லீக்கான தகவல்! -
விஜய்யின் அடிமடியில் கைவைக்கும் அண்ணாமலை.. தலித் அல்லாத வாக்குகளுக்கு குறி.. புதிய ரூட் எடுக்கிறார்? -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு












Click it and Unblock the Notifications