இதுதான் ஸ்டாலின்! கூட்டு நடவடிக்கை குழு கூட்டத்திற்கு வந்த தலைவர்கள் 1 நிமிடம் ஸ்டன்! தரமான சம்பவம்
சென்னை: நாடாளுமன்ற தொகுதி மறுவரையறைக்கு எதிராக தமிழ்நாடு அரசு மேற்கொண்டு உள்ள கூட்டு நடவடிக்கை குழுக் கூட்டத்தில் பல மொழிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு உள்ளது. தலைவர்களின் தாய் மொழிக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்ட சம்பவம் பெரிய அளவில் கவனம் பெற்றுள்ளது.
தொகுதி மறுவரையறையை செய்து நாடாளுமன்ற லோக்சபா தொகுதிகளின் எண்ணிக்கையை அதிகப்படுத்துவதில் மத்தியில் ஆளும் பாஜக அரசு தீவிரம் காட்டி வருகிறது. முக்கியமாக தமிழ்நாட்டின் எம்பிக்கள் எண்ணிக்கை குறையும். அப்படியே ஒருவேளை அதிகரித்தாலும்.. தமிழ்நாட்டை விட உத்தர பிரதேசம், பீகாரில் எம்பிக்கள் எண்ணிக்கை பல மடங்கு உயரும்.

மக்கள் தொகை அடிப்படையில்தான் இது நடைமுறைப்படுத்தப்படும் என்பதால், மக்கள் தொகையை சிறப்பாக கட்டுப்படுத்திய தென் மாநிலங்கள் பாதிக்கப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது. சென்னையில் இன்று தொகுதி மறுவரையறைக்கு எதிரான கூட்டம் நடைபெறுகிறது. ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் இந்தக் கூட்டத்தில், மூன்று மாநில முதல்வர்கள் பங்கேற்கிறார்கள். இந்தக் கூட்டம் நடைபெறும் கிண்டி ஐடிசி நட்சத்திர ஹோட்டலில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
ஜனசேனா
தொகுதி மறுசீரமைப்பு விவகாரம் தொடர்பான கூட்டத்தில் பவன் கல்யாண் கட்சியும் பங்கேற்கிறது. கூட்டு நடவடிக்கை குழு ஆலோசனைக் கூட்டத்தில் பாஜக கூட்டணியில் உள்ள பவன் கல்யாணின் ஜனசேனா கட்சியும் பங்கேற்கிறது. ஜனசேனா கட்சி முன்னாள் எம்பி உதய் சீனிவாஸ் சென்னையில் நடைபெறும் கூட்டத்தில் பங்கேற்கிறார். பாஜக கூட்டணியில் உள்ள ஜனசேனா பங்கேற்பது அரசியல் வட்டாரத்திலும் முக்கியத்துவம் பெற்றுள்ளது.
தொகுதி மறுவரையறை தொடர்பான கூட்டு நடவடிக்கை குழு ஆலோசனைக் கூட்டத்தில், பங்கேற்க மூன்று மாநில முதல்வர்கள் சென்னை வந்துள்ளனர். கேரள முதல்வர் பினராயி விஜயன் நேற்று முன் தினம் இரவு சென்னை வந்தார். தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி, பஞ்சாப் முதல்வர் பகவந்த் சிங் மான் ஆகியோர் நேற்று சென்னை வந்தனர். சென்னை கிண்டியில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் அவர்கள் தங்கியுள்ளனர்.
தலைவர்கள் கருத்து
இந்த ஜனநாயகத்திற்கு விரோதமான ஒன்றிய பாஜக அரசின் தொகுதி மறுசீரமைப்பை எதிர்க்கவே இந்த கூட்டுக் குழு கூட்டம். இந்த கூட்டம் வெற்றிபெறும் என்று இந்த கூட்டத்தில் கலந்து கொள்ள உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் பேட்டி அளித்துள்ளார்.
இந்த ஒருங்கிணைப்பு ஒரு ஆரம்பம்.. இன்னும் அவர்கள் பார்க்க வேண்டியது நிறைய உள்ளது. இந்த கூட்டு நடவடிக்கை குழு மிகப் பெரிய வெற்றி அடையும் என நம்புகிறேன். மாநில உரிமைகளையோ, தொகுதிகளையோ எக்காரணம் கொண்டும் விட்டுத் தர மாட்டோம் என்று கர்நாடக துணை முதல்வர் டிகே சிவக்குமார் கூறினார். மேலும், தொகுதி மறுநீரமைப்புக்கு எதிரான போராட்டத்தின் முதல் கூட்டம் தான் இந்த சென்னை கூட்டம், என்று கூட்டு நடவடிக்கை குழுக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக சென்னை வந்துள்ள கர்நாடகா துணை முதலமைச்சர் டி.கே. சிவக்குமார் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறி உள்ளார்.
செம்ம.. 🔥🔥👏
— Jaya Kanagaraja (@Jayakanagaraja) March 22, 2025
விழா மேடையில் அவரவர் தாய் மொழியில் Name Board வச்சிருக்காங்க... 👌👌
ஒவ்வொரு விஷயத்துலயும் மொழி உணர்வ நெஞ்சை நிமிர்த்தி காட்டுவோம்..
இதுனால தான் நாங்க திமுக காரங்க.. 🔥🔥🔥#FairDelimitation pic.twitter.com/GdDW9OzMmQ
மொழிக்கு முக்கியத்துவம்
நாடாளுமன்ற தொகுதி மறுவரையறைக்கு எதிராக தமிழ்நாடு அரசு மேற்கொண்டு உள்ள கூட்டு நடவடிக்கை குழுக் கூட்டத்தில் பல மொழிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு உள்ளது. தலைவர்களின் தாய் மொழிக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்ட சம்பவம் பெரிய அளவில் கவனம் பெற்றுள்ளது.
சென்னையில் நடைபெறும் கூட்டு குழு நடவடிக்கை கூட்டத்தில் பங்கேற்கும் வெளி மாநில தலைவர்களுக்கு அந்தந்த மாநில மொழிகளில் பெயர் பலகைகள் வைக்கப்பட்டுள்ளன. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என அந்தந்த மாநில தாய் மொழிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் இவ்வாறு பெயர் பலகைகள் வைக்கப்பட்டுள்ளன.












Click it and Unblock the Notifications