அந்த கண்ணை பாருங்க.. திகிலா இருக்கே.. கர்நாடகா சூறாவளிக்கு இடையே.. ஷாக் தந்த மோச்சா புயல்!
சென்னை: வங்கக்கடலில் உருவாகி இருக்கும் மோச்சா புயல் வேகமாக வலிமை அடைந்து வருகிறது. அந்த புயலின் கண் பகுதி தற்போது வெளியாகி உள்ளது.
பெரும் எதிர்பார்ப்பிற்கு இடையே கர்நாடக சட்டசபை இடைதேர்தல் முடிவுகள் வெளியாகி வருகின்றன. கர்நாடகாவில் காங்கிரஸ் மாபெரும் வெற்றியை நோக்கி சென்று கொண்டு இருக்கிறது. 128 இடங்களில் வெற்றியை நோக்கி காங்கிரஸ் கட்சி சென்று கொண்டு இருக்கிறது
கர்நாடக மாநிலத்தில் உள்ள 224 தொகுதிகள் உள்ளன. அங்கே மெஜாரிட்டி பெற 113 இடங்களில் வெற்றிபெற வேண்டும்.
இதுவரை எண்ணப்பட்ட வாக்குகளில் பாஜக 69 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. காங்கிரஸ் 128 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. மஜத மொத்தம் 21 இடங்களில் முன்னிலை வகிக்கிறது.
கர்நாடகாவில் வீசும் காங்கிரஸ் புயலுக்கு இடையே இன்னொரு பக்கம் வங்கக்கடலில் உருவாக்கி இருக்கும் மோச்சா புயல் எதிர்பார்த்ததை விட வேகமாக வளர்ந்து கொண்டு இருக்கிறது. வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி தற்போது அது புயலாக மாறி உள்ளது.

கண் படம் : தற்போது இந்த புயலின் கண் புகைப்படம் வெளியாகி உள்ளது. அந்த புகைப்படத்தை பகிர்ந்து சென்னை ரெயின்ஸ் வானிலை மையம் ட்விட் செய்துள்ளது.
அதில், மோச்சா புயலின் கண் முழுமையாக உருவாகிவிட்டது. இந்த புயல் கரையை கடக்கும் முன் வலிமை இழந்து கடக்கும் என்று வானிலை அமைப்புகள் சொல்கின்றன. ஆனால் தற்போதைய சூழ்நிலையில் புயல் வலிமை இழக்காமல் இதே வேகத்தில் கரையை கடக்கும் வாய்ப்புகள் உள்ளன.
இந்த புயலின் கண் படம் அதிர்ச்சி அளிக்க கூடியதாக, பார்க்கவே திகிலை ஏற்படுத்த கூடியதாக உள்ளது.
புயல் உருவானது எப்படி? : 8 நாட்களுக்கு முன்புதான் தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் புதிய வளிமண்டல மேலடுக்கு சுழற்சி உருவானது. இது கடந்த 1 வாரமாக வலிமை அடைந்து வருகிறது.
பொதுவாக ஒரு தாழ்வு மண்டலம் வலிமை அடைந்து புயல் ஏற்பட கடலின் மேல் வெப்பநிலை 26 டிகிரி செல்சியசுக்கு மேல் இருக்க வேண்டும். அதாவது வளிமண்டல மேலடுக்கு சுழற்சி ஏற்படுகிறதே, அதன் மையத்தில் இந்த வெப்பநிலைக்கு மேல் இருக்க வேண்டும்.
ஆனா வங்கக்கடலில் தற்போது 36 டிகிரி செல்சியசுக்கும் அதிக வெப்பநிலை நிலவி வருகிறது. அதனால் இந்த புயல் கண்டிப்பாக அதி தீவிர புயலாக உருவாகும். அதோடு மிக மிக வலிமையான புயலாக இது இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தீவிர புயலாக உருவான இந்த புயலுக்கு மோச்சா என்று பெயர் வைக்கப்பட்டு உள்ளது. நேற்று இரவு இந்த மோச்சா புயல் அதி தீவிர புயலாக மாறியது. இந்த நிலையில், 2008 ஆம் ஆண்டில் ஏற்பட்ட நர்கிஸ் சூறாவளி, தெற்காசியாவில் இயற்கை பேரழிவுகளில் ஏற்பட்ட பெரிய புயல்களில் ஒன்றாக இப்போதும் பார்க்கப்படுகிறது, அந்த புயலை போலவே தற்போது உருவாகி வரும் மோச்சா புயலும் உள்ளது.
இந்த புயல் தமிழ்நாட்டை தாக்காது. மியான்மரை தாக்க உள்ளது. மியான்மர் அருகே 175 கிமீ வேகத்தில் புயல் கரையை கடக்கும் வாய்ப்புகள் உள்ளன.

புயல்: முன்னதாக சென்னை ரெயின்ஸ் வானிலை அமைப்பு வெளியிட்ட அறிவிப்பில் , மோச்சா புயல் அதி தீவிர சூறாவளி புயலாக தீவிரமடைந்துள்ளது. இந்திய வானிலை மையம் கொடுக்கும் புள்ளிகளில் அடிப்படையில் பார்த்தால் இது சூப்பர் சூறாவளியாக மாறுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. இந்த புயல் மியான்மர் கடற்கரையை நோக்கி சென்று கொண்டு இருக்கிறது.
சூடான கடல், மற்றும் தளர்வான காற்று வெட்டு ஆகியவை இந்த புயல் தீவிரமடைவதற்கு தொடர்ந்து சாதகமான சூழ்நிலையை ஏற்படுத்தி உள்ளன., இந்த புயலுக்கு கண் பகுதி உருவாகி உள்ளது. அந்த கண் பகுதியில் வரும் நாட்களில் மாற்றம் ஏற்படலாம்.
அங்கே நிலவும் வெப்பநிலை காரணமாக இது சூப்பர் சூறாவளியாக மாறுமா என்பது இன்னும் 24- 36 மணி நேரங்களில் தெரிந்துவிடும்.
இந்த புயல் காரணமா தீபகற்ப இந்தியாவில் வானம் மேகங்கள் இன்றி தெளிவாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதால், ஆந்திரப் பிரதேசத்தின் சில பகுதிகளில் வெப்ப அலை ஏற்படக்கூடும், மேலும் தமிழ்நாட்டிலும் வெப்பநிலை அதிகரிக்கும். அடுத்த இரண்டு நாட்களுக்கு சென்னையில் 40 முதல் 42°C வரை வெப்பநிலை உச்சமாக இருக்கும், என்று சென்னை ரெயின்ஸ் தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications