கோலாரில் தோண்டியெடுக்கப்பட்ட மொத்தத் தங்கத்திற்கும் மேலானது நீரஜ் சோப்ராவின் ஒற்றை தங்கம்: வைரமுத்து
சென்னை: கோலாரில் தோண்டியெடுக்கப்பட்ட மொத்தத் தங்கத்திற்கும் மேலானது ஒலிம்பிக் தடகளப் போட்டியில் நீரஜ் சோப்ரா வென்ற ஒற்றை தங்கம் என்று கவிஞர் வைரமுத்து வாழ்த்து தெரிவித்துள்ளார்.
Recommended Video
டோக்கியோ ஒலிம்பிக்கில் ஈட்டி எறிதல் போட்டியில் இந்தியாவின் நீரஜ் சோப்ரா தங்கப் பதக்கம் வென்றார். டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளில் இந்தியா வென்ற முதல் தங்கப் பதக்கம் இது.

நாடு முழுவதும் நீரஜ் சோப்ராவுக்கு வாழ்த்துகள் குவிந்து வருகின்றன. ஹரியானா மாநில அரசு ரூ6 கோடி பரிசுத் தொகையை நீரஜ்ஜுக்கு அறிவித்துள்ளது. தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினும் நீரஜ் சோப்ராவுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
கோலாரில் தோண்டியெடுக்கப்பட்ட
— வைரமுத்து (@Vairamuthu) August 8, 2021
மொத்தத் தங்கத்திற்கும் மேலானது
இந்த
ஒற்றை ஒலிம்பிக் தங்கம்
இந்திய தேசியக்கொடியை
ஒலிம்பிக்கில் உயர்த்திப்பிடித்த
நீரஜ்!
உங்களுக்கு எங்கள்
வீர வாழ்த்து#NeerajGoldChopra #Olympics2020 pic.twitter.com/4R8hVQopjP
நீரஜ் சோப்ராவுக்கு தமது ட்விட்டர் பக்கத்தில் கவிஞர் வைரமுத்து தெரிவித்துள்ள வாழ்த்து:
கோலாரில் தோண்டியெடுக்கப்பட்ட
மொத்தத் தங்கத்திற்கும் மேலானது
இந்த
ஒற்றை ஒலிம்பிக் தங்கம்
இந்திய தேசியக்கொடியை
ஒலிம்பிக்கில் உயர்த்திப்பிடித்த
நீரஜ்!
உங்களுக்கு எங்கள்
வீர வாழ்த்து
இவ்வாறு கவிஞர் வைரமுத்து பாராட்டியுள்ளார்.












Click it and Unblock the Notifications