இது ஒரு நாடுதானா என அரசியமைப்பு சபையை கூட்டி விவாதிக்கலாமா? தைரியம் இருக்கா? -பொங்கிய திமுக பிரமுகர்
சென்னை: இந்தி தெரியாதவர்கள் இந்தியாவை விட்டே வெளியேறலாம் என உத்தரப்பிரதேச பாஜக அமைச்சர் சஞ்சய் நிஷாத் கூறி இருக்கும் நிலையில், இந்த கருத்தினை உங்களது கட்சித் தலைமை சொல்வதற்கு தைரியம் இருந்தால், நாங்கள் நாட்டை விட்டு வெளியேற தயங்கமாட்டோம் என திமுக சுற்றுச்சூழல் அணி செயலாளர் கார்த்திகேய சிவசேனாபதி தெரிவித்துள்ளார்.

உத்தரப்பிரதேச பாஜக அமைச்சர் சஞ்சய் நிஷாத், "இந்தியாவில் வாழ விரும்புபவர்கள் இந்தியை நேசிக்க வேண்டும். இந்திக்கு எதிரானவர்கள் அல்லது இந்தியை விரும்பாதவர்கள், அனைவரும் வெளிநாட்டவர்களாகவோ அல்லது வெளிநாட்டு சக்திகளுடனோ உறவு வைத்திருப்பவர்களாக கருதப்படுவார்கள். மாநில மொழிகள் மதிக்கப்படுகின்றன. ஆனால் முதலில் இந்திக்குதான் முக்கியம். அதன் பிறகுதான் மாநில மொழி. இந்தி பேச முடியாவிட்டால் இந்தியாவை விட்டு வேறு எங்காவது செல்ல வேண்டும்." என்று கூறினார்.

உத்தரப்பிரதேச அமைச்சரின் இந்த கருத்துக்கு தமிழ்நாடு, கர்நாடகம், கேரளா உள்ளிட்ட பல மாநிலங்களில் இருந்து கண்டங்கள் வலுத்து வருகின்றன. இதுகுறித்து திமுக சுற்றுச்சூழல் அணி செயலாளர் கார்த்திகேய சிவசேனாபதி ட்விட்டரில் காட்டமான பதிவை எழுதி இருக்கிறார். அதில், "இந்த பாரதிய ஜனதா கட்சி மந்திரிக்கு தெரிய வேண்டும். உத்தரபிரதேசதிலே ரேஷன் கடைகளிலே உணவுப் பொருட்கள் கிடைப்பதற்கு தமிழ், கன்னடம், தெலுங்கு மலையாளம் பேசக்கூடிய மக்களின் வரிப்பணம் தேவைப்படுகிறது.
அப்படி இந்தி மொழியை கற்றுக் கொள்ளாவிட்டால் நாட்டை விட்டு நாங்கள் வெளியேற வேண்டும் என்ற கருத்தினை உங்களது கட்சித் தலைமை சொல்வதற்கு தைரியம் இருந்தால், நாங்கள் நாட்டை விட்டு வெளியேற தயங்கமாட்டோம். உங்கள் பிரதம மந்திரி அவர்களுக்கும் உங்களது கட்சித் தலைமைக்கும் அந்த தைரியம் இருக்கிறதா? மறுபடியும் அரசியலமைப்பு சபை கூட்டி இந்த நாடு ஒரு நாடு தானா என்பதை விவாதிக்கலாமா அல்லது இந்தக் கூற்றெல்லாம் அதானிக்கு நாட்டை எழுதி கொடுப்பதற்கு திசைதிருப்புவதற்காக நடத்தப்படும் கோமாளிக்கூத்தா?" எனக் குறிப்பிட்டு உள்ளார்.
-
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
குடும்பத்தினருடன் குடகு மலைக்குச் சென்ற திமுக தலைவர் ஸ்டாலின்.. கூட யார் யார்லாம் பாருங்க! -
தொங்கலில் விடப்பட்ட சிங்கப்பெண் அதிரடிப்படை! தவெக அரசு தீவிரத்தை உணரவில்லை என கனிமொழி சாடல் -
விஜய்யை வளைக்கிறதா தாமரை? காங்கிரஸை ஓரங்கட்ட தவெக மெகா பிளான்! அம்பலப்படுத்திய பாஜக -
"மனக் குழப்பத்தில் மனோ தங்கராஜ்".. திமுகவுக்குள் பரபரப்பை உண்டாக்கிய அனிதா ராதாகிருஷ்ணன் பேச்சு -
கொஞ்சம் பொறுமையா இருங்க ஜி! தனித் தவில் வாசிக்க தயாரான அண்ணாமலை! அமைதிப்படுத்த இறங்கிய அமித் ஷா? -
திட்டமிட்டு விஜய்யுடனான சந்திப்பை அமித்ஷா ரத்து செய்தார்.. திமுகவின் முரசொலி விமர்சனம் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
சிவக்குமார் விஜய்யை பாராட்டி பேச பேச சத்யராஜ் கொடுத்த ரியாக்ஷன் பாருங்க.. அமைதியாக கவனிக்கும் திமுக -
“MLA-களை பிடிப்பதை விட்டுவிட்டு.. போலீஸை ஆக்கப்பூர்வமா செயல்பட வைக்கவும்!” விஜய்க்கு உதயநிதி அட்வைஸ் -
அண்ணாமலை 'மும்மொழி' எதிர்ப்பு: நேபாளப் பயணம்... ரஜினியுடன் ரகசிய சந்திப்பா? விரைவில் புது கட்சி -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு!












Click it and Unblock the Notifications