அதானிக்கு உதவ ரூ.30,000 கோடி முதலீடு செய்ததா எல்ஐசி? அமெரிக்க நாளேடு வெளியிட்ட பகீர் தகவல்.. பின்னணி
சென்னை: அதானி நிறுவனம் முறைகேடான வழியில் தங்கள் நிறுவன பங்குகள் விலையை உயர்த்தியுள்ளதாக ஹிண்டன்பர்க் நிறுவனம் வெளியிட்ட தகவலால் அதானி குழும பங்குகள் கடும் வீழ்ச்சியை சந்தித்தன. இந்த விவகாரம் நடந்து சில மாதங்களே ஆன நிலையில், அமெரிக்காவின் பிரபல நாளேடான வாஷிங்டன் போஸ்ட் வெளியிட்ட செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதானி குழும நிறுவன பங்குகளில் எல்.ஐ.சி 30 ஆயிரம் கோடி முதலீடு செய்ததாக தெரிவித்துள்ளது. எனினும், இதனை எல்.ஐசி மறுத்துள்ளது.
நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்று எல்.ஐ.சி., இந்தியாவில் லாபகரமாக இயங்கும் பொதுத்துறை காப்பீட்டு நிறுவனமாக இருக்கும் எல்.ஐ.சியை சுற்றி சமீப காலமாக அவ்வப்போது சர்ச்சைகள் கிளம்பி வருகின்றன. அந்த வகையில் சமீபத்திய மீண்டும் ஒரு பரபரப்பு கிளம்பியிருக்கிறது.

33 ஆயிரம் கோடி முதலீடு
அதாவது, அதானி குழுமத்தில் ₹33,000 கோடி (சுமார் $3.9 பில்லியன்) முதலீட்டை லைஃப் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா (LIC) மூலம் மேற்கொள்ள நிதி அமைச்சகம் துரிதப்படுத்தியதாக வாஷிங்டன் போஸ்ட் பத்திரிகை செய்தி வெளியிட்டிருந்தது.
அதில், அதானி நிறுவனம் முதலீட்டாளர்கள் நம்பிக்கையை பெறும் வண்ணம் 33 ஆயிரம் கோடி முதலீடு செய்ததாகவும் மத்திய நிதி அமைச்சகத்தின் தலையீட்டின் பேரில் இது நடைபெற்றதாகவும் வாஷிங்டன் போஸ்ட் செய்தி வெளியிட்டு இருந்தது. சில மத்திய அரசு அதிகாரிகள் கூறியதாக வாஷிங்டன் போஸ்ட் இந்த செய்தியை வெளியிட்டுள்ளது.
காங்கிரஸ் குற்றம் சாட்டு
மேலும் அதானி நிறுவனம் தனது கடனை அடைக்க 5 ஆயிரம் கோடி ரூபாய் பத்திரம் வெளியிட்ட நிலையில், அதையும் எல்.ஐ.சிதான் வாங்கியதாக அந்த செய்தியில் கூறப்பட்டு இருந்தது. அதானி நிறுவனத்தின் நலனுக்காக 30 கோடி எல்.ஐ.சி பாலிசிதாரர்களின் பணம் தவறாக பயன்படுத்தப்பட்டதாக காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது.
இந்த விவகாரம் தொடர்பாக காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ஜெய்ராம் ரமேஷ் கூறியிருப்பதாவது: எல்.ஐசியையும் அதன் 30 கோடி பாலிசிதாரர்களின் சேமிப்பையும் மேதானி எந்த அளவு தவறாக பயன்படுத்தினார்கள் என்பது தொடர்பாக ஊடகங்களில் வெளியாகும் செய்திகள் அதிர்ச்சி அளிப்பதாக உள்ளன.
எல்.ஐ.சி நிறுவனம் மறுப்பு
கடந்த மே மாதம் நிதித்துறை அதிகாரிகள் 33 ஆயிரம் கோடி நிதியை அதானி குழும நிறுவனங்களில் முதலீடு செய்ய இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகத்திற்கு திட்டம் வகுத்து கொடுத்ததாக உள் விவகார ஆணையங்கள் கூறுகின்றன. எல்ஐசி நிறுவனம் எவ்வாறு அதானி குழுமத்தில் முதலீடு செய்ய நிர்ப்பந்திக்கப்பட்டது என்பது பற்றி நாடாளுமன்ற பொதுக் கணக்குக் குழு முழுமையாக விசாரிக்க வேண்டும்" என்று தெரிவித்துள்ளது.
இதற்கிடையே, வாஷிங்டன் போஸ்டில் வெளியான செய்திக்கு எல்.ஐ.சி நிறுவனம் மறுப்பு தெரிவித்துள்ளது. எல்.ஐ.சி நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில், " தன் முதலீட்டு முடிவுகளில் வெளி காரணிகளின் தாக்கம் இருப்பதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகள் "பொய்யானவை, ஆதாரமற்றவை மற்றும் உண்மைக்கு புறம்பானவை".
எந்தப் பங்கும் இல்லை
இதுபோன்ற எந்தவொரு முன்மொழிவு அல்லது ஆவணமும் தங்கள் நிறுவனத்தால் ஒருபோதும் தயாரிக்கப்படவில்லை. முதலீட்டு முடிவுகள் LIC-யால் சுதந்திரமாக, வாரியத்தால் அங்கீகரிக்கப்பட்ட கொள்கைகளின்படி எடுக்கப்படுகின்றன. நிதிச் சேவைகள் துறை (நிதி அமைச்சகத்தில்) அல்லது வேறு எந்த அமைப்புக்கும் இத்தகைய முதலீட்டு முடிவுகளில் எந்தப் பங்கும் இல்லை.
எல்ஐசியின் முதலீட்டு முடிவுகள், வாரியத்தால் அங்கீகரிக்கப்பட்ட கொள்கைகளின்படி, விரிவான ஆய்வுக்குப் பிறகு சுயமாக எடுக்கப்படுகின்றன. நிதித்துறை அல்லது வேறு எந்த ஒரு அமைப்புக்கும் இதில் எந்தப் பங்கும் இல்லை. எல்ஐசி மிக உயர்ந்த தர நிலையைக் கொண்டுள்ளது.
அதன் அனைத்து முதலீட்டு முடிவுகளும் தற்போதுள்ள கொள்கைகள், சட்டங்களில் உள்ள விதிகள் மற்றும் ஒழுங்குமுறை வழிகாட்டுதல்கள் ஆகியவற்றுக்கு இணங்க, அதன் அனைத்து பங்குதாரர்களின் நலன்களைக் கருத்தில் கொண்டு எடுக்கப்படுகின்றன" என்று தெரிவித்துள்ளது.
-
4 மணி நேரம்தான் தூக்கம்.. போனை போட்டு விளாசிய ஸ்டாலின்.. விக்கித்த தலைகள்.. என்ன நடந்தது? -
விட்டமின் எம் வரலையே.. பதறும் பாஜக, காங்கிரஸ் வேட்பாளர்கள்.. தமிழக தேர்தலில்.. பெரிய ட்விஸ்ட்! -
அப்செட்டில் ஸ்டாலின்.. ராகுல் பிரசாரத்திற்கு வராததால் காங்கிரஸின் 28 தொகுதிகளிலும் சிக்கல்.. பின்னணி -
விஜயால் வந்த ரெட் சிக்னல்.. ஸ்டாலின் மேஜைக்கு போன உளவுத்துறை ரிப்போர்ட்.. உடனே பறந்த மேஜர் உத்தரவு! -
4 மணி நேர ‘உறக்கம்’.. பொறுப்பாளர்களை போனில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கும் ஸ்டாலின்! அறிவாலய அலர்ட்! -
முதல் நாளே அமெரிக்காவுக்கு வெற்றி.. ஹார்முஸ் வழியாக 34 கப்பல்கள் சென்றன - டிரம்ப் பதிவு -
கைப்புள்ள, நாய் சேகர்னு எனக்கும் பட்ட பெயர் வைக்க தெரியும்! பிடிஆருக்கு சுந்தர் சி பதிலடி -
வார்த்தையை விட்ட எடப்பாடி பழனிசாமி.. வரிந்து கட்டிய பிரேமலதா.. செல்போனில் காரசார உரையாடல் -
மகளிருக்கு டபுள் ஜாக்பாட்.. மகளிர் உரிமை தொகை + ரூ.8000.. மொத்தம் ரூ.10,000! திமுக மெகா ப்ளான்! -
சென்னை எல்லையில் புது பேருந்து நிலையம்! பிரம்மாண்ட கிரீன்ஃபீல்ட் பஸ் ஸ்டாண்ட்! எங்க இருக்கு தெரியுமா -
2030-க்கு பிறகும் இந்திய IT துறை காணாமல் போய்விடும்.. டிசிஎஸ் சிஇஓ கிருதிவாசன் சொன்ன முக்கிய விஷயம்! -
"நீங்களே 4 முறை ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சிக்கு போனீங்கள்!" நீதிபதியை பார்த்து கெஜ்ரிவால் சொன்ன வார்த்தை!












Click it and Unblock the Notifications