ரூ.45 கட்டினால் ரூ.25 லட்சம்.. எல்ஐசியின் சூப்பர் முதலீடு திட்டம் பற்றி தெரியுமா?
சென்னை: எல்ஐசியில் தினமும் ரூ.45 முதலீடு செய்தால், ரூ.25 லட்சம் உங்களுக்கு கிடைக்கும். அந்த திட்டம் குறித்து இப்போது பார்ப்போம்.
அடுத்த நிமிடம் உறுதி இல்லாத இந்த வாழ்க்கையில காப்பீடு செய்தால் தான் உங்கள் குடும்பத்தை பாதுகாக்க முடியும். உங்களுக்கு ஏற்ற இன்சூரன்ஸ் பிளான்களை பல்வேறு நிறுவனங்கள் தருகின்றன. அதில் உங்கள் வருமானம், மாதம் உங்களால் எவ்வளவு பிரீமியம் செலுத்த முடியும் என்பதை முடிவு செய்து காப்பீடுகளை தேர்வு செய்யலாம்.

பல்வேறு தனியார் நிறுவனங்கள் காப்பீடு தந்தாலும் காலம் காலமாக மக்களால் விரும்பப்படும் பாலிசி என்றால் அது எல்ஐசி தான். அரசின் பொதுத்துறை நிறுவனமான லைஃப் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன் (Life Insurance Corporation - LIC) நிறுவனம் பல்வேறு காப்பீடுகளை மக்களுக்கு வழங்கி வருகிறது. இந்தியாவில் கோடிக்கணக்கான மக்கள் எல்ஐசியில் தான் முதலீடு செய்துள்ளார்கள். மேலும் இந்தியாவில் பெரும்பாலான மக்கள் காப்பீடு செய்திருப்பதும் எல்ஐசியில் தான்..
எல்ஐசியில் ஏராளமான திட்டங்கள் முதலீட்டாளர்களுக்காக இருக்கிறது. இதில் பலருக்கும் பிடித்த திட்டம் என்றால் எல்ஐசி ஜீவன் ஆனந்த் பாலிசி (Jeevan Anand Policy) தான். வெறும் 45 ரூபாய் தினமும் செலுத்துவதன் மூலமாக ஒருவர் ரூபாய் 25 லட்சம் ரிட்டன் பெறமுடியும் . இந்த செய்தியில் ஜீவன் ஆனந்த் பாலிசியின் பலன்களை பற்றி பார்ப்போம்.
எல்ஐசி ஜீவன் ஆனந்த் பாலிசி மெச்சூரிட்டி : எல்ஐசி ஜீவன் ஆனந்த் பாலிசி மெச்சூரிட்டி பணம் நிச்சயம் மற்ற பாலிசியை விட அதிகப்படியான முதிர்வு தொகை கிடைக்கும். நீங்கள் பாலிசி போட்ட 21 வருடங்கள் அல்லது 35 வருடங்கள் கழித்து (நீங்கள் தேர்வு செய்யும் பிரீமியம் தொகையை பொறுத்து உங்கள் கைக்கு பெரும் தொகை கிடைக்கும்.

குறைந்த அளவிலான பிரிமியம் தொகையும் இந்த ஜீவன் ஆனந்த் பாலிசியில் செலுத்த முடியும். எப்படி என்றால் குறைந்தபட்சமாக ஒரு நாளைக்கு ரூபாய் 45 என்ற வீதத்தில் ஒரு மாதத்துக்கு 1358 ரூபாயை நீங்கள் பிரீமியம் தொகையாக செலுத்த முடியும். இப்படி செலுத்தினால் 35 வருட கால அளவு பாசிலி செலுத்த வேண்டியதிருக்கும்.
குறைந்தபட்ச காப்பீட்டுத் தொகை ரூ. 1 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆனால் அதேநேரம் நிலையான அதிகபட்ச வரம்பு என்று எதுவும் இல்லை. நீங்கள் விரும்பும் முதிர்வு தொகையை பெறும் வகையில் பாலிசி வடிவமைக்கப்பட்டுள்ளது. அதன்படி பிரீமியம் தொகையை செலுத்தலாம்.
இந்த திட்டம் எப்படி என்றால், எண்டோமென்ட் அஷ்யூரன்ஸ் மற்றும் ஹோல் லைஃப் திட்டங்களின் கலவையாக பார்க்கப்படுகிறது பாலிசிதாரரின் மரணம் மற்றும் சேமிப்பின் போது நிதிப் பாதுகாப்பு என இரண்டு பலன்கள் உண்டு. துரதிர்ஷ்டவசமான மரணம் ஏற்பட்டால், அவரது குடும்பத்தினருக்கு அடிப்படைத் தொகையில் 125 சதவீதம் உறுதித் தொகையாகக் கிடைக்கும். அல்லது வருடாந்திர பீரிமியத்தில் ஏழு மடங்கு தொகை வழங்கப்படும். பாலிசிதாரர் செலுத்திய மொத்த பிரீமியம் தொகையில் 105 சதவீதத்துக்கு குறையாமல் இறப்புப் பலன் வழங்கப்பட வேண்டும் என்ற விதிமுறை உள்ளது.
பாலிசி காலத்தின் முடிவில் செலுத்தப்படும் முதிர்வுப் பலனுக்கு இந்தத் திட்டம் தகுதி பெறுகிறது. திரும்பப்பெறும் போனஸ் மற்றும் இறுதி கூடுதல் போனஸ் உடன் உறுதி செய்யப்பட்ட தொகை முதிர்வு நன்மையாக வழங்கப்படும். உங்களுடைய பாலிசி காலம் முடிந்த பிறகு பிரீமியம் எதுவும் செலுத்தத் தேவையில்லை.

பாலிசி பிரீமியம் எப்படி: இந்த பாலிசியை நீங்கள் உங்களுடைய 30ஆவது வயதில் எடுப்பதாக வைத்துக் கொள்வோம். மொத்தம் 20 ஆண்டுகள் முதிர்வில் எடுத்தால் நீங்கள் ஆண்டுக்கு ரூ. 30,000 செலுத்த வேண்டியிருக்கும். அதாவது மாதத்துக்கு ரூ.2500. அல்லது நாள் ஒன்றுக்கு ரூ. 83 மட்டுமே செலுத்த வேண்டும். 20 ஆண்டுகளில் நீங்கள் மொத்தம் ரூ.5 லட்சம் செலுத்தியிருப்பீர்கள். ஆனால் அதற்குப் பலனாக உங்களுக்கு 20 தவணைகளில் ரூ.4.50 லட்சம் நிச்சயம் கிடைக்கும்.
எல்ஐசி ஜீவன் ஆனந்த் பாலிசியை பொறுத்தவரை குறைந்தபட்ச உறுதித் தொகை - ரூ. 1 லட்சம் ஆகும்.
குறைந்தபட்ச வயது - 18 ஆண்டுகள்
அதிகபட்ச வயது - 50 ஆண்டுகள்
அதிகபட்ச முதிர்வு வயது - 75 ஆண்டுகள்
குறைந்தபட்ச பாலிசி காலம் - 15 ஆண்டுகள்
அதிகபட்ச பாலிசி காலம் - 35 ஆண்டுகள் ஆகும். 15 ஆண்டு முதல் 20 அல்லது 21 ஆண்டுகள், அல்லது 35 ஆண்டுகள் வரை நீங்கள் தேர்வு செய்யலாம்.












Click it and Unblock the Notifications