Explainer: மாதந்தோறும் பணம் வந்துகிட்டே இருக்கும்.. எல்ஐசி ஸ்மார்ட் ஓய்வூதிய திட்டம் பற்றி தெரியுமா?
சென்னை: எல்ஐசி-யின் ஸ்மார்ட் ஓய்வூதியத் திட்டத்தில் ஒரே ஒரு முறை முதலீடு செய்தால், அது வாழ்நாள் முழுவதும் ஓய்வூதியம் வழங்குகிறது. இதில் முதலீடு செய்து, மாதா மாதம், காலாண்டு, அரையாண்டு அல்லது வருடத்திற்கு ஒருமுறை என உங்கள் விருப்பம் போல ஓய்வூதியம் பெறலாம்.
இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகம் (எல்ஐசி) இந்த ஆண்டு ஸ்மார்ட் ஓய்வூதியத் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இது தனிநபர் மற்றும் கூட்டு வாடிக்கையாளர்களுக்காக வடிவமைக்கப்பட்ட ஒரு சூப்பரான சேமிப்பு மற்றும் ஓய்வூதியத் திட்டம். இதில், மாதாந்திர, காலாண்டு, அரையாண்டு அல்லது வருடாந்திர கால இடைவெளிகளில் ஓய்வூதியத்தைப் பெறலாம்.

எல்.ஐ.சி ஸ்மார்ட் பென்ஷன்
இந்தத் திட்டத்தில் பல்வேறு பென்ஷன் விருப்பங்கள் மற்றும் தேவைப்பட்டால் கடன் பெறும் வசதியும் உள்ளது. ஓய்வுக்குப் பிறகு நீங்கள் வழக்கம் போல மாத வருமானத்தை விரும்பினால், எல்ஐசியின் ஸ்மார்ட் ஓய்வூதியத் திட்டம் ஒரு நல்ல சாய்ஸாக இருக்கும். இது ஒரு பாதுகாப்பான, நம்பகமான மற்றும் எளிமையான பென்ஷன் ஸ்கீம்.
எல்.ஐ.சியின் ஸ்மார்ட் பென்ஷன் பிளான் பல ஓய்வூதிய ஆப்ஷன்களை வழங்குகிறது. ஜாயிண்ட் பென்ஷன் ஸ்கீமில், வாழும் பங்குதாரர் மற்றவரின் மறைவுக்குப் பிறகும் ஓய்வூதியப் பலன்களைப் பெற முடியும். மேலும் பாலிசிதாரரின் மறைவுக்குப் பிறகு, அவரால் நாமினியாக சேர்க்கப்பட்டவர் பலன்களை பெற முடியும். குடும்பத்தினர் விரும்பினால், முழுத் தொகையையும் மொத்தமாகப் பெறலாம் அல்லது மாதாந்திர ஓய்வூதிய முறையிலும் பெறலாம். இது தவிர, தவணைகளில் பணத்தைப் பெறுவதற்கான ஆப்ஷனும் உள்ளது.
ஒரு முறை டெபாசிட்
எல்.ஐ.சியின் ஸ்மார்ட் ஓய்வூதியத் திட்டத்தில் நீங்கள் ஒரு முறை பணத்தை டெபாசிட் செய்ய வேண்டும். அதற்கு ஈடாக, நீங்கள் ஒவ்வொரு மாதமும் அல்லது 3 மாதங்களுக்கு ஒரு முறை, 6 மாதங்களுக்கு ஒரு முறை, ஆண்டுக்கு ஒரு முறை என உங்கள் விருப்பத்துக்கு ஏற்றபடி ஓய்வூதியத்தைப் பெறலாம்.
18 வயது முதல் 100 வயது வரை உள்ள யார் வேண்டுமானாலும் இந்தத் திட்டத்தில் சேரலாம். இந்தத் திட்டத்தில் சேர குறைந்தபட்சம் ரூபாய் 1 லட்சம் முதலீடு தேவை, அதிகபட்ச முதலீட்டு வரம்பு இல்லை. ஓய்வூதியப் பலன்களைப் பெறுவதற்கு முழு பிரீமியம் தொகையையும் முன்கூட்டியே செலுத்த வேண்டும். கூடுதலாக, பாலிசி தொடங்கிய தேதியிலிருந்து மூன்று மாதங்களுக்குப் பிறகு கடன் வசதி கிடைக்கிறது.
பென்ஷன் ஆப்ஷன்கள்
இந்தத் திட்டத்தில் இரண்டு வகையான ஓய்வூதிய விருப்பங்கள் உள்ளன.
ஒற்றை ஆயுள் வருடாந்திர தொகை: இதில், பாலிசிதாரர் உயிருடன் இருக்கும் வரை ஓய்வூதியம் பெறுவார்.
கூட்டு ஆயுள் வருடாந்திர தொகை: இதில், பாலிசிதாரருடன் சேர்ந்து, அவரது மனைவியும் ஓய்வூதியம் பெறுவார்.
முதலீட்டு தொகை, தேர்வு செய்யும் கால அளவு அடிப்படையில் ஓய்வூதியத் தொகை மாறுபடும். குறைந்தபட்சமாக மாதத்திற்கு - ரூ. 1,000. ஒவ்வொரு மூன்று மாதங்களுக்கும் - ரூ. 3,000. ஒவ்வொரு ஆறு மாதங்களுக்கும் - ரூ. 6,000. ஒரு வருடத்திற்கு - ரூ. 12,000 பெறலாம்.
கடன் வசதி
பாலிசி ஆரம்பித்த நாளிலிருந்து மூன்று மாதங்களுக்குப் பிறகு அல்லது ஃப்ரீ-லுக் காலம் முடிந்த பிறகு கடனைப் பெறலாம். அதிகபட்ச கடன் வரம்பு பாலிசியின் சரண்டர் மதிப்பைப் பொறுத்தது. நீங்கள் NPS உடன் இணைந்திருந்தால், இந்த திட்டத்தை தேர்வு செய்வதன் மூலம் உங்கள் ஓய்வூதிய ஓய்வூதியத்தை மேம்படுத்தலாம். இதன் மூலம், நீங்கள் தொடர்ந்து வழக்கமான வருமானத்தைப் பெறலாம்.
இந்த திட்டத்தை ஒரு மாற்றுத்திறனாளி எடுத்துக் கொண்டால், பாலிசிதாரர் இறந்துவிட்டால், அந்த மாற்றுத்திறனாளியின் பெயரில் இறப்பு சலுகையிலிருந்து ஓய்வூதியம் வழங்கப்படும்.
இந்தத் திட்டத்தை LIC-யின் அதிகாரப்பூர்வ வலைத்தளம் www.licindia.in மூலமாகவோ அல்லது LIC முகவர்கள், POSP-ஆயுள் காப்பீட்டு பிரதிநிதிகள் அல்லது பொது பொது சேவை மையங்கள் வழியாக ஆஃப்லைனிலோ பெறலாம்.












Click it and Unblock the Notifications