நிதிஷ்குமார் முதல்வர் பதவி காலி.. ஆரம்பித்த பாஜக! அதிமுகவுக்கு அச்சம்.. எடப்பாடிக்கும் இதே கதி தானா!
சென்னை: பீகாரில் நிதிஷ் குமார் முதல்வர் பதவியில் இருந்து ஒதுங்கும் நிலையில், அங்கு நேரடியாக பாஜக கண்ட்ரோலை எடுக்கிறது. இதற்கிடையே இன்று பீகாரில் நடப்பதைப் போன்ற சம்பவம் நாளை தமிழ்நாட்டிலும் கூட நடக்கலாம் என்றும்.. எடப்பாடிக்குப் பதிலாக பாஜகவைச் சேர்ந்த ஒருவரே கூட முதல்வர் பதவிக்கு வரலாம் என நெட்டிசன்கள் பதிவிட்டு வருகிறார்கள்.
பீகார் மாநிலத்தில் இப்போது மிகப் பெரிய ஒரு அரசியல் மாற்றம் நடந்துள்ளது. அங்கு 20 ஆண்டுகளுக்கு மேலாகப் பீகார் முதல்வராகப் பணியாற்றிய நிதிஷ் குமார், தனது முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்கிறார். நேற்றே இது தொடர்பான தகவல் வெளியான போதிலும், இன்று தான் நிதிஷ் அதை அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். இதன் மூலம் அவர் பீகார் அரசியலில் இருந்து ஒதுங்குவது உறுதியாகியுள்ளது.

நிதிஷ் குமார்
நாடாளுமன்றத்தின் இரு அவைகள், மாநில சட்டமன்றத்தின் இரு அவைகள் என அனைத்திலும் உறுப்பினராக வேண்டும் என்பது தனது நீண்டநாள் விருப்பம் என அவர் தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். நிதிஷ் குமார் ஏற்கனவே லோக்சபா உறுப்பினர், சட்டமன்ற உறுப்பினர், சட்ட மேலவை உறுப்பினராக இருந்துள்ள நிலையில், இப்போது ராஜ்சயாவிலும் உறுப்பினராவதன் மூலம் தனது கனவை நிறைவேற்றுகிறார். மேலும், இதுநாள் வரை தன்னை நம்பி ஆதரவளித்தோருக்கு நன்றி என்றும் பதிவிட்டிருந்தார்.
பீகார்
பீகார் சட்டசபையைப் பொறுத்தவரை அங்கு மொத்தம் 243 சீட்கள் உள்ளன. அதில் பாஜகவுக்கு 89 இடங்களும், நிதிஷ் கட்சிக்கு 85 இடங்களும் உள்ளன. பாஜகவே அங்கு தனிப்பெரும் கட்சியாக இருந்தாலும் கூட தேர்தலுக்குப் பிறகு அவரே முதல்வராகத் தொடர்ந்தார். இந்தச் சூழலில் தான் நீண்ட அரசியல் அனுபவம் கொண்ட நிதிஷ் முதல்வர் பதவியில் இருந்து விலகியுள்ளார். அவருக்குப் பதிலாக பாஜகவில் இருந்து நேரடியாக ஒருவர் முதல்வராக வருவார் எனத் தெரிகிறது. நிதிஷ் மகனுக்கு துணை முதல்வர் பதவி வழங்கப்படும் எனச் சொல்லப்படுகிறது.
நிதிஷ் குமாரின் இந்த முடிவு பல்வேறு கேள்விகளை அரசியல் அரங்கில் எழுப்புகிறது. பீகார் தேர்தலுக்கு முன்பே, முதல்வர் வேட்பாளர் தொடர்பான சலசலப்பு என்டிஏ கூட்டணியில் நிலவியது. இது வாக்காளர்கள் குழப்பிய நிலையில், தேர்தல் நெருங்கும்போது தான் நிதிஷ் குமார் முதல்வராகத் தொடர்வார் என அறிவித்தார் அமித் ஷா! அதன் பிறகே பீகாரில் என்டிஏ அலை தெளிவாக வீச ஆரம்பித்தது. ஆனால், 5 மாதங்கள் கூட ஆகாத நிலையில், நிதிஷ் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
அதிமுக
இதற்கிடையே நிதிஷுக்கு நேர்ந்தது நாளை எடப்பாடிக்கும் கூட நேரலாம் என்று நெட்டிசன்கள் சிலர் சொல்லி வருகிறார்கள். பீகாரிலாவது நிதிஷ் தான் முதல்வர் என்பதை அமித் ஷா அறிவித்தார். ஆனால், இங்கு என்ன தான் அதிமுக தலைவர்கள், அதிமுக தனிப்பெரும்பான்மை உடன் ஆட்சியை அமைக்கும் எனச் சொன்னாலும் பாஜக தலைவர்கள் கடைசி வரை என்டிஏ அரசு அமையும் என்றே சொல்கிறார்கள். என்டிஏ கூட்டங்களில் பிரதமர் மோடி அதிமுக என்ற வார்த்தையைக் கூட பயன்படுத்துவதில்லை.
எடப்பாடிக்கு ஆபத்து
மேலும், திமுக, விசிக உள்ளிட்ட கட்சிகளும் கூட சீக்கிரமே அதிமுகவை பாஜக விழுங்கிவிடும் என்றே சாடி வருகிறார்கள். நேற்று நடந்த கூட்டம் ஒன்றில் பேசிய காங்கிரஸ் மூத்த தலைவர் ப சிதம்பரம், பாஜகவும் அதிமுகவும் கூட்டணி அமைத்துள்ள சூழலில்.. அடுத்து 5 ஆண்டுகளில் அதிமுகவே இருக்காது என்றும் அவர் கடுமையாகச் சாடினார். இப்படி பலரும் இதையே சொல்லி வரும் சூழலில், சரியாகப் பீகாரிலும் பாஜக நேரடியாக இப்படி கண்ட்ரோலை எடுத்துள்ளது.
இதனால் தேர்தல் முடிந்து ஒருவேளை அதிமுக ஆட்சி அமைந்தாலும் கூட எடப்பாடி எவ்வளவு காலம் முதல்வராகத் தொடர்வார் என்பது கேள்வி தான் என்கிறார்கள். நிதிஷுக்கு நேர்ந்த கதி நாளை அதிமுக ஆட்சியில் எடப்பாடிக்கும் ஏற்படலாம் என்கிறார்கள் நெட்டிசன்கள்!
-
அந்த 2 லேடீஸ்..1 மாஜி தலை! பாஜக மண்ணைக் கவ்வ ‘இவர்கள்’ தான் காரணம்! அமித் ஷாவிடம் அடுக்கிய அண்ணாமலை! -
ரொம்ப அவசரப்படாதீங்க அண்ணாமலை.. அமித் ஷா போட்ட அன்புக் கட்டளை! இன்னும் தமிழ்நாடு திரும்பாதது ஏன்? -
பாஜக போல் வேண்டாம்.. அண்ணாமலையின் பிளான் என்ன? கிறிஸ்தவர் + இஸ்லாமியர்களையும் அரவணைத்து தனிக்கட்சி -
நம்ப வச்சு கழுத்தறுத்து.. டெல்லிக்கே சென்று சாதித்த நயினார்! அண்ணாமலை ஆங்கிரிக்கு இது தான் காரணம்! -
ஓரங்கட்டப்பட்ட அண்ணாமலை.. நீண்ட நாள் ரகசிய ஆயுதத்தை கையில் எடுக்க முடிவு! அதிரடி திட்டம் -
நேரம் ஒதுக்காத அமித்ஷா.. கிரீன் சிக்னல் கொடுக்காத பாஜக தலைமை! டெல்லியில் காத்திருக்கும் அண்ணாமலை -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
ராஜ்யசபா சீட் கொடுத்த பாஜக தலைமை.. திட்டவட்டமாக மறுத்த அண்ணாமலை.. அடுத்த 6 மாதத்திற்கு மெகா பிளான் -
அண்ணாமலையா, மோடியா.. பாஜக ஆதரவாளர்களுக்கு இப்போ டெலிகேட் பொசிஷன்! -
"வீட்டு வேலை செய்த பெண் டூ மாண்புமிகு அமைச்சர்.." மேற்கு வங்கத்தில் பாஜக செய்த சம்பவம்! -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்?












Click it and Unblock the Notifications