குணப்படுத்துவதில் அசத்தும் கரூர்.. தமிழகத்தில் மருத்துவமனை வாரியாக குணம் அடைந்தவர்கள் விவரம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகத்தில் இன்று ஒரு நாளில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நோயாளிகளில் 103 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். இதுவரை ஒட்டுமொத்தமாக 283 பேர் தமிழகத்தில் கொரோனாவில் இருந்து குணம் அடைந்துள்ளனர்.

Recommended Video

    வேகமாக குணமாகும் கொரோனா நோயாளிகள்... இதான் காரணமா?

    தமிழகத்திலேயே அதிகபட்சமாக கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் இருந்து 51 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

    கொரோனா வைரஸ் தொற்றால் தமிழகம் முழுவதும் இன்று ஒரே நாளில் 56 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1323 ஆக உயர்ந்துள்ளது.

    தஞ்சையில் அதிகம்

    தஞ்சையில் அதிகம்

    சென்னையில் இன்று 11 பேருக்கும், திண்டுக்கல்லில் ஒருவருக்கும், திருச்சியில் 3பேருக்கும், திருவள்ளூரில் 5 பேருக்கும் தேனியில் 2 பேருக்கும், தஞ்சாவூரில் 17 பேருக்கும், சேலத்தில் இருவருக்கும், திருவாரூரில் 4 பேருக்கும், கடலூரில் 3 பேருக்கும், தென்காசியில் 5 பேருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

    தரமான உணவு

    தரமான உணவு

    கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களை குணப்படுத்துவதில் தமிழக அரசு மற்றும் சுகாதாரத்துறை சிறப்பாக செயல்பட்டு வருகிறது. கொரோனா வைரஸ் நோயாளிகளை கனிவுடன் கவனித்து சத்தான உணவுகள் அளித்து, மிக உயர்தரமான சிகிச்சை தமிழகத்தில் வழங்கப்படுவதாக மருத்துவமனையில் பணியாற்றும் சுகாதார பணியாளர்கள் மற்றும் நோயாளிகளும் தெரிவித்து வருகின்றனர்.

    தனிமையில் இருப்பர்

    தனிமையில் இருப்பர்

    இந்நிலையில் தமிழகத்தில் கொரானாவால் பாதிக்கப்பட்ட 1323 பேரில் இதுவரை 283 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர். அவர்களை பாதுகாப்பிற்காக அடுத்த 14 நாட்கள் வீட்டில் தனிமையில் இருக்குமாறு மருத்துவர்கள் அறிவுறத்தி அனுப்பி வைக்கின்றனர். தமிழகத்தில் இன்று ஒரு நாளில் மட்டும்103 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

    கரூரில் அசத்தல்

    கரூரில் அசத்தல்

    தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்கள் எந்த மருத்துவமனையில் எத்தனை பேர் 17ம் தேதி நிலவரப்படி குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர் என்ற விவரத்தை இப்போது பார்ப்போம். தமிழகத்திலேயே மிகஅதிகபட்சமாக கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நோயாளிகளில் 51 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர். கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கரூர் மற்றும் திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த கொரோனா நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

    ஓமந்தூரர் 30 பேர்

    ஓமந்தூரர் 30 பேர்

    திருச்சி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் 33 நோயாளிகளும், சென்னை ஓமந்தூரர் அரசின் தோட்ட மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் 30 பேரும் குணம் அடைந்துள்ளனர். இதேபோல் கோவை இஎஸ்ஐ மருத்துவகல்லூரி மருத்துவமனையில் 27 பேரும், திருநெல்வேலி மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் 19 பேரும், சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் 17 பேரும், விழுப்புரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் 16 பேரும் கொரோனாவில் இருந்து குணமாகி வீடு திரும்பி உள்ளனர்.

    ஈரோட்டில் 13 பேர் குணம்

    ஈரோட்டில் 13 பேர் குணம்

    திருவாரூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் 14 பேரும், மதுரை ராஜாஜி அரசு மருத்துவக்கல்லூரி பொது மருத்துவமனையில் 14 பேரும், ஈரோடு (பெருந்துறை)மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் இதுவரை 13 பேரும், கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் 13 பேரும், தனியார் மருத்துவமனைகளில் 12 பேரும், சேலத்தில் 7 பேரும், சிவங்ககையில் 6 பேரும், சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் 5 பேரும், தூத்துக்குடியில் 2 பேரும், டிஎம்எஸ் மருத்துவமனைகளில் 2 பேரும், திருவண்ணாமலை மற்றும் தஞ்சாவூரில் ஒருவரும் குணமடைந்துள்ளனர்.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+