தீபாவளி பண்டிகைக்கு பஸ்ஸில் ஊருக்கு போறீங்களா?.. அப்ப முதல்ல இதை படியுங்கள்!
சென்னை: தீபாவளிக்காக இயக்கப்படும் சிறப்பு பேருந்துகள் எங்கிருந்து எந்தெந்த ஊர்களுக்கு இயக்கப்படுகின்றன என்பது குறித்து தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் சில தகவல்களை வெளியிட்டுள்ளது.
Recommended Video
இந்தியா முழுவதும் தீபாவளிப் பண்டிகை வரும் நவம்பர் 14-ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இதற்காக பல்வேறு இடங்களுக்கு சிறப்பு பேருந்துகள் இன்று முதல் 13-ஆம் தேதி வரை இயக்கப்படுகின்றன.

சென்னையில் கூட்ட நெரிசலைக் குறைக்கும் விதமாக கோயம்பேடு, பூந்தமல்லி, மாதவரம், கே கே நகர், தாம்பரம் ஆகிய 5 பேருந்து நிலையங்களில் இருந்து பேருந்துகளை பிரித்து இயக்குவதற்கும் நீண்ட தூரம் செல்லும் விரைவு பேருந்துகள் சென்னை புறநகர் பகுதியான வண்டலூர் கிளாம்பாக்கத்தில் நின்று செல்லவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
செங்குன்றம் வழியாக பொன்னேரி, கும்மிடிப்பூண்டி, ஊத்துக்கோட்டை செல்லும் பேருந்துகள் மாதவரம் புதிய பேருந்து நிலையத்தில் இருந்தும், ஈசிஆர் வழியாக புதுவை, கடலூர், சிதம்பரம் செல்லும் பேருந்துகள் கே.கே. நகர் மாநகரப் போக்குவரத்துக் கழக பேருந்து நிலையத்தில் இருந்தும் இயக்கப்படுகின்றன.
திண்டிவனம், விக்கிரவாண்டி, பண்ருட்டி வழியாக கும்பகோணம், தஞ்சை செல்லும் பேருந்துகள் தாம்பரம் அறிஞர் அண்ணா பேருந்து நிலையத்தில் இருந்தும் திண்டிவனம் மார்க்கமாக திருவண்ணாமலை செல்லும் பேருந்துகள் போளூர், சேத்துப்பட்டு, வந்தவாசி, செஞ்சி மார்க்கமாகச் செல்லும் பேருந்துகள், திண்டிவனம் வழியாக பண்ருட்டி, நெய்வேலி, சிதம்பரம், புதுவை செல்லும் பேருந்துகள் தாம்பரம் ரயில் நிலையத்தில் இருந்தும், வேலூர், ஆரணி, ஆற்காடு, திருப்பத்தூர், காஞ்சிபுரம், செய்யாறு, ஓசூர், தருமபுரி, கிருஷ்ணகிரி, திருத்தணி செல்லும் பேருந்துகள் பூந்தமல்லி பேருந்து நிலையத்தில் இருந்தும் இயக்கப்படுகின்றன.
திருச்சி, மதுரை, கோவை, நெல்லை உள்ளிட்ட தொலைதூர பேருந்துகள் கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து இயக்கப்படுகின்றன.
-
இந்திய ரயில்வே வரலாற்றில் விசித்திரம்! சேலம்- சென்னை ஓடும் ரயிலில் ரூ.5.78 கோடி கொள்ளை நினைவிருக்கா? -
Chennai Metro: சென்னை பூந்தமல்லி- வடபழனி மெட்ரோ ரயில் சேவை எப்போது தொடங்கும்? எங்கெங்கு நிற்கும்? -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு












Click it and Unblock the Notifications