Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கல்லீரல் பாதிப்பு.. கணவரின் காப்பீடு பணம் ஒரு கோடி ரூபாய்.. போராடி வென்ற சென்னை பெண்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை அரும்பாக்கத்தைச் சேர்ந்தவர் சுவேதா போத்திராஜ் , கல்லீரல் பாதிப்பால் காலமான தனது கணவரின் காப்பீடு பணம் கேட்டு, காப்பீடு நிறுவனத்தில் முறையிட்டார். ஆனால் பொய்யான உத்தரவாதம் அளித்ததாக கூறி காப்பீட்டு தொகையை காப்பீடு நிறுவனம் வழங்க மறுத்தது. இதை எதிர்த்து சுவேதா வழக்கு தொடர்ந்தார். இதனை விசாரித்த நீதிமன்றம், காப்பீடு நிறுவனம் செய்தது நியாயமற்றது' எனக்கூறி காப்பீட்டு தொகை ரூ.98 லட்சத்தை வழங்க உத்தரவிட்டது.

காப்பீடு எடுப்பவர்கள், உயிரிழந்தால் காப்பீடு கைகொடுக்கும் என்று நம்புகிறார்கள். ஆனால் காப்பீடு வழங்க வேண்டிய சில நிறுவனங்கள், ஏதாவது காரணத்தை கூறி,காப்பீட்டை நிராகரிக்கவே முயற்சிக்கின்றன. இதனால் காப்பீடு எடுத்தும் பணம் கிடைக்காமல் பலர் அவதிப்படுகிறார்கள். அவர்கள் நுகர்வோர் நீதிமன்றத்தில் முறையிட்டு நிவாரணம் பெறுகிறார்கள். அந்த வகையில் சென்னை அரும்பாக்கத்தைச் சேர்ந்தவர் சுவேதா போத்திராஜ் என்பவர் சென்னை வடக்கு மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் தாக்கல் செய்த மனு ஒன்றை தாக்கல் செய்தார்.

Liver damage Chennai woman wins Rs 1 crore after fighting for husband s insurance money

அந்த மனுவில் அவர் கூறுகையில், என்கணவர் சிரெயாஸ், சென்னையில் உள்ள தனியார் சாப்ட்வேர் நிறுவனத்தில் மேனேஜராக பணியாற்றி வந்தார். கடந்த 19.4.2020 அன்று அவர், தனியார் இன்சூரன்ஸ் நிறுவனத்தின் மூலம் ரூ.1 கோடிக்கு காப்பீடு செய்திருந்தார். இந்தநிலையில் கல்லீரல் பாதிப்பு காரணமாக 3.10.2022 அன்று அவர் உயிரிழந்துவிட்டார். இதைத்தொடர்ந்து, காப்பீட்டு தொகை ரூ.1 கோடியை வழங்கக்கோரி இன்சூரன்ஸ் நிறுவனத்துக்கு மனு அளித்திருந்தேன்.

'காப்பீடு செய்வதற்கு முன்பாக தனக்கு எந்தவித உடல்நல பாதிப்பும் இல்லை' என உண்மையை மறைத்து எனது கணவர் உத்தரவாதம் அளித்ததாக கூறி காப்பீட்டு தொகை கோரிய எனது விண்ணப்பத்தை இன்சூரன்ஸ் நிறுவனம் நிராகரித்துவிட்டது. ஆனால் கடந்த 2019-ம் ஆண்டு எனது கணவருக்கு எடுக்கப்பட்ட மருத்துவ பரிசோதனையில், கல்லீரல் பாதிப்பு பற்றி எதுவும் தெரிவிக்கப்படவில்லை. எனது கணவர் பணி காரணமாக அடிக்கடி வெளிநாடு செல்லும்போது மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்படும்.

அவ்வாறு மேற்கொள்ளப்பட்ட மருத்துவ பரிசோதனையிலும் ஏற்கனவே நோய் பாதிப்பு இருந்தது குறித்து எதுவும் தெரிவிக்கப்படவில்லை. காப்பீடு எடுப்பதற்கு முன்பாக கல்லீரல் பாதிப்புக்காக எந்த மருத்துவமனையிலும் அவர் சிகிச்சை பெறவில்லை. இதுபோன்ற சூழ்நிலையில், எனது கணவர் பொய்யான உத்தரவாதம் அளித்ததாக கூறி காப்பீட்டு தொகை கோரிய எனது விண்ணப்பத்தை நிராகரித்தது நியாயமே இல்லை. எனவே, காப்பீட்டு தொகையை வழங்க இன்சூரன்ஸ் நிறுவனத்துக்கு உத்தரவிட வேண்டும்" இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனு மீதான விசாரணை ஆணையத்தின் தலைவர் கோபிநாத், உறுப்பினர்கள் கவிதா கண்ணன், ராமமூர்த்தி ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது. அப்போது இன்சூரன்ஸ் நிறுவனம் தரப்பில் வாதிடுகையில், 'காப்பீடுதாரர் பொய்யான உத்தரவாதத்தை அளித்திருக்கும்பட்சத்தில் அவர் செலுத்திய பிரிமீயம் தொகை மட்டுமே அவருக்கு திரும்ப வழங்கப்படும். அந்த வகையில் மனுதாரரின் கணவர் செலுத்திய பிரிமீயம் தொகை ரூ.1 லட்சத்து 71 ஆயிரத்து 930 திரும்ப வழங்கப்பட்டு விட்டது' என்று தெரிவிக்கப்பட்டது.

மனுவை விசாரித்த ஆணையம், 'மனுதாரரின் கணவர் அளித்ததாக கூறப்படும் அசல் உத்தரவாத படிவம் இன்சூரன்ஸ் நிறுவனத்தால் ஆணையத்தில் தாக்கல் செய்யப்படவில்லை. இதனால், இன்சூரன்ஸ் நிறுவனம் கூறுவது போன்று மனுதாரரின் கணவர் பொய்யான உத்தரவாதம் அளித்தாரா? என்ற முடிவுக்கு வர இயலவில்லை.இன்சூரன்ஸ் நிறுவனம் மனுதாரரின் விண்ணப்பத்தை நிராகரித்தது நியாயமற்றது. எனவே, மனுதாரருக்கு இன்சூரன்ஸ் நிறுவனம் ஏற்கனவே வழங்கிய பிரிமீயம் தொகை போக மீதமுள்ள காப்பீட்டு தொகை 98 லட்சத்து 28 ஆயிரம் ரூபாயை வழங்க வேண்டும். மேலும், இழப்பீடாக ரூ.25 ஆயிரமும், வழக்கு செலவு தொகையாக ரூ.5 ஆயிரமும் வழங்க வேண்டும்' என நீதிமன்றம் உத்தரவிட்டது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+