கடலூர் மாவட்டத்துக்கு வரும் ஜனவரி 3 ஆம் தேதி உள்ளூர் விடுமுறை!
கடலூர்: கடலூர் மாவட்டத்துக்கு வரும் ஜனவரி 3 ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. சிதம்பரத்தில் அமைந்துள்ள புகழ்பெற்ற நடராஜர் கோயிலில் மார்கழி ஆருத்ரா தரிசன விழா வெகு விமரிசையாக நடைபெறுவதை முன்னிட்டு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
உலகப் புகழ்பெற்ற சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆண்டுதோறும் மார்கழி மாதம் நடைபெறும் ஆருத்ரா தரிசனமும், ஆனி மாதம் நடைபெறும் ஆனித் திருமஞ்சன தரிசனமும் பிரசித்தி பெற்ற திருவிழாக்கள் அதன்படி இந்த ஆண்டுக்கான மார்கழி ஆருத்ரா தரிசன விழா இன்று காலை விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

தொடர்ந்து அடுத்தடுத்த நாட்களில் சுவாமி வீதி உலா நிகழ்வுகளும், சிறப்பு பூஜைகளும் நடைபெற உள்ளன. இந்த விழாவின் முக்கிய நிகழ்வான ஆருத்ரா தரிசனம், வரும் ஜனவரி 3 ஆம் தேதி மாலை 3 மணிக்கு மேல் நடைபெற உள்ளது.
இந்த நிலையில், சிதம்பரம் நடராஜர் கோவில் ஆருத்ரா தரிசன நிகழ்வை முன்னிட்டு ஜனவரி 3 ஆம் தேதி கடலூர் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடுமுறையானது கடலூர் மாவட்டத்தில் உள்ள தமிழக அரசின் கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கும் பொருந்தும் எனவு அறிவிக்கப்பட்டுள்ளது.
அதேசமயம், அனைத்து துணை கருவூலங்கள், மாவட்ட கருவூலம் ஆகியவை குறைந்த எண்ணிக்கையிலான பணியாளர்களைக் கொண்டு வழக்கம்போல இயங்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த விடுமுறையை ஈடு செய்ய பிப்ரவரி 14 ஆம் தேதி (சனிக்கிழமை) வேலை நாளாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன் -
"பயத்தில் பேன்ட்டிலேயே சிறுநீர் போயிட்டேன்.." IPLஐ கைப்பற்ற தாவூத் போட்ட திட்டம்! லலித் மோடி பகீர்












Click it and Unblock the Notifications