சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

"பாஜக".. ரெடியாகிறார் எடப்பாடி.. "உள்ளே வெளியே" பாமக?.. இடியாப்ப சிக்கலில் அதிமுக.. கூல் திமுக..!

உள்ளாட்சி தேர்தலுக்கு அதிமுக தயாராகிக் கொண்டிருக்கிறது

Google Oneindia Tamil News

சென்னை: நிறைய இடியாப்ப சிக்கலில் அதிமுக சிக்கி கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.. இதனால் வரப்போகும் உள்ளாட்சி தேர்தலில் அதிமுகவுக்கான வெற்றி என்பது கேள்விக்குறியாக எழுந்து வருகிறது... எனினும் எடப்பாடி பழனிசாமி ஜரூர் பணியில் களமிறங்கி வருகிறார்..!

வரும் செப்டம்பர் 15ம் தேதிக்குள் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி, தென்காசி ஆகிய 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தலை நடத்தி முடிக்க உத்தரவு வந்துள்ளது.

இதற்கான பணிகளை மாநில தேர்தல் ஆணையமும் மேற்கொண்டு வருகிறது. இதையடுத்து வரும் டிசம்பர் மாதத்திற்குள் அனைத்து மாவட்டங்களிலும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெறவுள்ளது.

உள்ளாட்சி தேர்தலில் அதிமுக தனித்து போட்டியா? அப்ப பாஜக? என்ன நடக்கிறது கூட்டணியில்!உள்ளாட்சி தேர்தலில் அதிமுக தனித்து போட்டியா? அப்ப பாஜக? என்ன நடக்கிறது கூட்டணியில்!

மும்முரம்

மும்முரம்

இதையொட்டி அரசியல் கட்சிகளும் மும்முரமாகிவிட்டன.. அந்த வகையில், திமுக முதல் நபராக இறங்கிவிட்டது.. களப்பணியும் நடந்து வருகிறது.. கூட்டணி முயற்சியும் தயாராகி வருகிறது.. ஆனால், அதிமுகவோ சுணக்கத்திலேயே உள்ளதாக தெரிகிறது.. கடந்த முறை, ஊரக தேர்தலில் அதிமுக அபார வெற்றி பெற்றது..

 அதிமுக

அதிமுக


திமுகவுக்கு செல்லக்கூடிய வெற்றி வாய்ப்பையும் நாசூக்கான முயற்சியினால் அதிமுகவே பெற்றுவிட்டது.. இப்போது மீண்டும் உள்ளாட்சி தேர்தலில் அதிமுக வெற்றியை பெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. ஆனால், உட்கட்சி சிக்கலில் நிறைய மாட்டிக் கொண்டுள்ளது.. சசிகலா முன்னதாகவே களமிறங்கிவிடுவதாக தெரிகிறது.. இவர் களமிறங்கினால்தான், உண்மையிலேயே தன்னுடைய ஆதரவாளர்கள் எத்தனை பேர் இருக்கிறார்கள் என்று அதிமுக தலைமைக்கு தெரியவரும்.

 அதிமுக

அதிமுக

ஆனால், அதற்கு முன்னதாகவே மாவட்ட செயலாளர்கள் பலருக்கும் போனை போட்டு பேசி வந்து கொண்டிருக்கிறார் எடப்பாடி பழனிசாமி.. உள்ளாட்சி தேர்தலுக்கு அவர்களை தெம்பூட்டி பேசுகிறாராம்.. அதேசமயம், திமுகவுக்கு எதிராக எந்த மாதிரியான காய் நகர்த்தல்களில் ஈடுபடலாம் என்ற யோசனைகளை கேட்டும், தெரிவித்தும் வருகிறாராம்.

 மாவட்ட செயலாளர்கள்

மாவட்ட செயலாளர்கள்

அதாவது, கட்சியின் பொதுக்குழு மற்றும் செயற்குழுவை கூட்ட வேண்டி கட்டாயத்தில் அதிமுக இப்போது உள்ளது.. அதற்கு முன்பேயே பெரும்பான்மையான மாவட்ட செயலாளர்கள், ஒன்றிய செயலாளர்களை தன் பக்கம் இழுக்கும் முயற்சியில் எடப்பாடி உள்ளதாக தெரிகிறது. இந்த விஷயம் தெரிந்து ஓபிஎஸ், அவர் ஒரு பக்கம் போனை போட்டு நிர்வாகிகளுக்கு நம்பிக்கையூட்டி வருகிறாராம்.

பஞ்சாயத்துகள்

பஞ்சாயத்துகள்

இப்படி கட்சிக்குள்ளேயே அதிருப்தியும், மோதலுமாய் வெடித்து கிடக்க, கட்சிக்கு வெளியே அதாவது கூட்டணியில் சிக்கல் வந்துள்ளது.. பாஜகவுடன் கூட்டணியே வேண்டாம், இந்த முறையாவது தனித்து நிற்போம் ஒன்று ஒரு டீம் அதிமுக தலைமையிடம் சொல்லி வருகிறது.. ஆனால், டெல்லி வரை சென்று பஞ்சாயத்து பேசிவிட்டு வந்த தலைமையோ, இதை எப்படி எதிர்கொள்ளும் என்று தெரியவில்லை.. ஏற்கனவே பாஜக மேலிடம் எல். முருகனுக்கு ஒரு எம்பி சீட் கேட்டு வரும் நிலையில், பாஜக இல்லாமல் தேர்தலை சந்திக்கும் தைரியம் வருமா? என்பதும் கேள்விக்குறியே.

திமுக

திமுக

மற்றொரு பக்கம் பாமக, இப்போதைக்கு கூட்டணியில் இருந்தாலும், சமீப கால நிகழ்வுகள், திமுகவுக்கு ஆதரவாகவே தென்பட்டு வருகிறது.. நடக்க போகும் தேர்தலில், வடமாவட்டங்களில்தான் பிரதான இடத்தை பிடித்துள்ளன.. அதனால், ராமதாஸை யார் வளைத்து தங்கள் பக்கம் இழுத்து பிடித்து கொள்ள போகிறார்களோ என்ற எண்ணமும் மேலோங்கி உள்ளது.

Recommended Video

    அரும்பாக்கம் குடியிருப்பு அகற்றப்பட்ட விவகாரம்.. உண்மை என்ன? களத்தில் இருந்து
    பாஜக

    பாஜக

    ஒருவேளை அதிமுக கூட்டணியிலேயே பாமக நீடித்தால், தேமுதிகவை உள்ளே இழுத்து போட்டு தேர்தலை சந்திக்கும் முயற்சியில் திமுக உள்ளது.. போதாக்குறைக்கு வேல்முருகன் ஆதரவாக இருப்பதால், திமுகவுக்கு பிரச்சனை பெரிதாக இருக்க வாய்ப்பில்லை.. ஒருவேளை பாமக திமுகவுக்கு ஆதரவு தந்தால், அதிமுக நிலைமை மேலும் சிக்கல்தான். அதிமுக, முதலில் தன் பிரச்சனையை தீர்க்குமா? அல்லது பாமகவை தக்கவைக்குமா? அல்லது பாஜகவை கழட்டிவிடுமா? அல்லது சசிகலாவை எதிர்கொள்ளுமா? தெரியவில்லை.. பார்ப்போம்..!

    English summary
    Local Politics in ADMK and what's Edapadi Palanisamy's plan in the Local body election
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X