"சாதி".. டமார் என வெடிக்கும் பூசல்.. ஓபிஎஸ்ஸின் "50/50" மெகா பிளான்.. காரணம் அந்த 3 மேட்டர்கள்தானா?
அதிமுகவில் உட்கட்சி பூசல் வெடித்து வருகிறது
சென்னை: மீண்டும் அதிமுக தலைமையில் பூசல் கிளம்பி உள்ளதாக கூறப்படுகிறது.. குறிப்பாக ஓபிஎஸ்-ன் கை ஓங்கி வருவதாகவும் உறுதிப்படுத்தப்படுத்தப்படாத தகவல்கள் வருகின்றன.
இந்த 4 வருடத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் ஆட்சி பெரிதாக எந்த குறையும் இல்லாமல் நடந்து முடிந்துள்ளது.. மாறாக, மக்களுக்கு தேவையான பல திட்டங்கள், அறிவிப்புகளையும் முன்னெடுத்து வந்துள்ளது.
அதேசமயம், உட்கட்சி பூசல்களும் இருக்கத்தான் செய்தது.. குறிப்பாக துணை முதல்வரிடம் இருந்து போதுமான ஒத்துழைப்பும், ஆதரவும் முதல்வர் தரப்புக்கு கிடைக்கவில்லை என்று சொல்லப்பட்டது.. இதைதவிர, இரட்டை தலைமை விவகாரம், பாஜகவுடன் ஓவர் நெருக்கம், முதல்வர் வேட்பாளர் விவகாரம் என மொத்த சண்டைகளையும் இந்த தமிழ்நாடே வேடிக்கை பார்த்தது.

லிஸ்ட் ரெடி
இறுதியில், அதெல்லாம் ஒரு முடிவுக்கும் வந்தது.. இவ்வளவு காலம் சற்று ஒதுங்கியிருந்த நிலையில், இப்போது துணை முதல்வர் தன்னுடைய அதிகாரத்தை செலுத்த முனைவதாக தற்போது செய்திகள் கசிந்து வருகின்றன. விரைவில் தேர்தல் நடக்க உள்ளதால், அதற்கான முனைப்பில் கட்சி தலைமை இறங்கி உள்ளது.. என்னதான் இணக்கமாக செயல்பட்டாலும், வேட்பாளர் லிஸ்ட் ரெடியாகும்போது ஓபிஎஸ் - இபிஎஸ் இடையே மீண்டும் பிரச்சனை வெடிக்கும், அதிகார மோதல் தலைதூக்கும் என்று அரசியல் நோக்கர்களும் சொல்லி கொண்டே இருந்தனர்.

மெகா பிளான்
அந்த வகையில், தங்கள் தங்கள் ஆதரவாளர்களுக்கு சீட் தருவது தொடர்பாக விவகாரம் கிளம்பி உள்ளதாக தெரிகிறது.. 50-க்கு 50 என்பதுதான் ஓபிஎஸ் சொல்லும் மெகா பிளானாம்.. அதாவது 234 தொகுதிகளில் 117 - 117 என ஆளுக்கு பாதி பிரித்து கொள்வது, தங்களது 117 தொகுதிகளில் தங்களுக்கு ஆதரவானவர்களை நிறுத்தி கொள்வது என்பதுதான் அந்த ஐடியாவாம்.. அதன்படியேதான் 6 பேர் கொண்ட முதல் லிஸ்ட்டும் வெளியானதாகவும் ஒரு பேச்சு உள்ளது.

சசிகலா
இதற்கெல்லாம் காரணம், எடப்பாடியார் மீது ஓபிஎஸ் சற்று அதிருப்தியில் இருப்பதுதானாம்.. இந்த அதிருப்திக்கு காரணம் 3 விஷயங்கள் என்கிறார்கள்.. முதலாவதாக, சசிகலா விஷயத்தில் முதல்வர் தன்னிச்சையாகவே முடிவு எடுத்தது துணை முதல்வருக்கு பிடிக்கவில்லையாம்.. திடீரென அவராகவே டெல்லிக்கு கிளம்பி சென்று, அமித்ஷா, மோடியை சந்தித்ததும் இல்லாமல், சசிகலாவுக்கு கட்சியில் 100 சதவீதம் கூட இடமில்லை என்று பேட்டி தந்தது, ஓபிஎஸ்-க்கு சற்று அதிர்ச்சிதானாம்.. கட்சியை கூட்டி தன்னிடம் கருத்து எதுவும் கேட்டு முடிவு செய்யாமல், சொந்த முடிவை எடுத்து விடவும் முக்குலத்தோர் வாக்குகளை இழக்க நேரிடுமே என்ற வருத்தம் உள்ளதாக தெரிகிறது.

தேவேந்திர குல வேளாளர்
இதற்கடுத்தபடியாக, தேவேந்திர குல வேளாளர் சமுதாய ஓட்டுக்களை பெறுவதற்காக, மற்ற ஓட்டுக்களை குறிப்பாக தென்மண்டல ஓட்டு வங்கியை பற்றியே கவலைப்படவில்லை என்பது ஓபிஎஸ்-ன் இரண்டாவது வருத்தமாம்.. ஒருசாராரின் வாக்குகளை மட்டுமே பெற்றுவிட்டால், தென்மாவட்டங்களில் பிறரது வாக்குகளை பெற பெரிதாக எந்த முயற்சியும் எடுக்கவில்லையே என்ற எண்ணம் இருக்கிறது.

வன்னியர்கள்
மூன்றாவதாக, வன்னியர்களுக்கான இட ஒதுக்கீட்டு விஷயத்திலும் தன்னை கேட்காமலேயே முதல்வர் முடிவை எடுத்துவிட்டதாக ஓபிஎஸ் நினைக்கிறாராம்.. அதுமட்டுமல்ல, கொங்கு மண்டலத்தை எடப்பாடியாரும், வடமாவட்டங்களை பாமகவும் பிரித்து கவனித்து கொண்டு விட்டால் போதுமா? தென் மாவட்டங்களை வாக்குகளை பெற வழிவகைகளை காணோமே என்பதே ஓபிஎஸ்-ன் இன்னொரு அதிருப்தியாக இருக்கிறதாம்.

3 கோரிக்கைகள்
ஆக, முக்குலத்தோர், தேவேந்திர குல வேளாளர், வன்னியர்கள் என 3 சாதீய விஷயங்களிலும் தன்னிடம் ஆலோசிக்காமல் முடிவெடுத்துவிட்டதாலும், இனியாகிலும் தென்மண்டலங்களை தூக்கி நிறுத்த தன்னுடைய விசுவாசிகளுக்கு சீட் தர வேண்டும் என்பதே ஓபிஎஸ் தற்போது முன்வைத்து வரும் கோரிக்கையாகும்.

ஆதரவாளர்கள்
இந்த விஷயத்தில்தான், தங்கள் ஆதரவாளர்கள் யார் யாருக்கு சீட் தரப்பட வேண்டும் என்பதில் விவகாரம் வெடிக்க ஆரம்பித்துள்ளதாக கூறப்படுகிறது. இது எல்லாவற்றிற்கும் மேலாக, தங்கள் ஆதரவாளர்களை பெரும்பாலும் நிறுத்தி, வெற்றியும் பெற்றுவிட்டால், நாளை ஆட்சி அமைக்க நேரும்போது, அது பல்வேறு வழிகளில் உதவியாக இருக்கும் என்பதே இருவரின் கணக்காகவும் உள்ளதாம். எனவே இனி என்ன நடக்க போகிறது என்பதெல்லாம் பெரிய எதிர்பார்ப்புதான்.. பார்ப்போம்..!












Click it and Unblock the Notifications