லாக்டவுன் 6.0: பரபரப்பாக காணப்பட்ட திருமழிசை தற்காலிக சந்தை நடமாட்டமின்றி வெறிச்சோடியது!
சென்னை: சென்னை கோயம்பேடுக்கு பதிலாக பரபரப்புடன் இயங்கி வந்த திருமழிசை தற்காலிக சந்தை புதிய லாக்டவுனால் வெறிச்சோடி கிடக்கிறது.
Recommended Video
சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் ஆகிய நான்கு மாவட்டங்களுக்கு 12 நாட்கள் முழு லாக்டவுன் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் இன்று மற்றும் 28 ஆகிய இரண்டு ஞாயிற்றுக்கிழமைகளில் எந்தவித தளர்வும் இன்றி அனைத்து கடைகளும் மூட தமிழக அரசு உத்தரவிட்டிருக்கிறது.

திருமழிசை சந்தைக்கு விடுமுறை
இதனால் அந்த இரு நாட்களில் தற்காலிக காய்கறி சந்தையான திருமழிசை சந்தை இயங்காது என கோயம்பேடு மொத்த வியாபாரிகள் சங்கத் தலைவர் ராஜசேகர் ஏற்கனவே அறிவித்திருந்தார். அதன்படி எப்போதும் இரவு முதல் காலை வரை பரபரப்புடன் காணப்படும் திருமழிசை சந்தை சனிக்கிழமை இரவு முதல் இன்று காலை வரை விடுமுறை அளிக்கப்பட்டது.

வெறிச்சோடிய சந்தை
இன்றைய தினத்தில் வெளி மாநிலங்களில் இருந்து காய்கறிகள் எதுவும் வரவில்லை. வியாபாரிகளும் யாரும் வரததால் எப்போதும் கூட்டம் நிறைந்து காணப்படும் திருமழிசை தற்காலிக சந்தை ஆட்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது. கடைகளும் அடைக்கப்பட்டு இருந்தது. ஊரடங்கால் பல்வேறு இடங்களில் காய்கறி கடைகள் திறக்கப்படாமல் இருப்பதால் கடந்த இரண்டு நாட்களாக காய்கறிகள் டன் கணக்கில் தேக்கம் அடைந்தது .

பொதுமக்களின் சுய லாக்டவுன்
இதனிடையே புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் அடுத்த கரூர் பகுதி வர்த்தக சங்கத்தினர் தாங்களாகவே சுய லாக்டவுனை அறிவித்து கடைகளை அடைத்துள்ளனர். கரூர் கிராமபகுதியானது புதுக்கோட்டை- சிவகங்கை மாவட்டங்களின் எல்லை பகுதியாகும். கரூரிலிருந்து சுமார் 3கிலோமீட்டர் தூரமான சிவகங்கை மாவட்ட எல்லை பகுதியைச் சேர்ந்த சிறுகானூர், அண்டனூர் ஆகிய கிராம பகுதியில் இருவருக்கு கரோனா தெற்று உறுதியானது. இவர்கள் சிவகங்கை மாவட்ட மருத்துவ கல்லூரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

5 நாட்கள் லாக்டவுன்
தொற்று பாதித்த பகுதி கரூர் கிராமத்திற்கு நடந்து வரும் தூர பகுதி கிராமம் என்பதால் அப்பகுதி அடைக்கபட்டுள்ளது. மேலும் யாருக்கும் தெற்று பரவாமல் தடுப்பதற்காக கரூர் வர்த்தக சங்கத்தினர் ஒரு மனதாக முடிவு செய்து தொடர்ந்து 5 நாட்களுக்கு சுய ஊரடங்கு அறிவித்து கடையடைப்பு செய்துள்ளனர்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications