நோ கட்டிங்.. நோ ஷேவிங்.. சலூன் கடைகள் திறக்க தடை.. தமிழக அரசு அதிரடி உத்தரவு
பச்சை, ஆரஞ்சு மண்டலங்களில் சலூன் கடைகள் திறக்கப்படும் என கூறப்படுகிறது
சென்னை: பச்சை மற்றும் ஆரஞ்சு மண்டலங்களில் சலூன் கடைகள் திறக்க உள்துறை அமைச்சகம் அனுமதி வழங்கி உள்ளதாக உத்தேச ஒன்று தகவல் வெளியான நிலையில், தமிழகத்தில் சலூன் கடைகள் திறக்கப்பட மாட்டாது என்று தமிழக அரசு அதிரடியாக அறிவித்துள்ளது.
கொரோனாவைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கையாக மேலும் 2 வாரம் லாக்டவுனை மத்திய அரசு நீட்டித்துள்ளது.. இதற்கான தளர்வுகள், கட்டுப்பாடுகள் குறித்தும் விலாவரியாக அரசு தெளிவுபடுத்தி அறிக்கை வெளியிட்டிருந்தது.

அப்போது பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட தளர்வுகளில் ஒன்று சலூன் கடைகள் திறப்புதான்.. ஊரடங்கால் கடந்த ஒரு மாதமாக சலூன் கடைகள் திறக்கப்படவில்லை.. ஆண்கள் கட்டிங், ஷேவிங் செய்ய முடியாமல் அவதிப்பட்டனர்.
முடிந்தவரை வீடுகளில் இருப்பவர்கள் இதற்கு உதவினாலும் பெரும்பாலானோர் ஷேவிங் செய்ய முடியாமலும், முடி வெட்ட முடியாமலும் தாடி மீசையை டிரிம் செய்ய முடியாமலும், தலைக்கு டை அடிக்க முடியாமலும் பெரிதும் அவதிக்குள்ளாயினர்... முடிகள் வளர்ந்து தொங்கியது.. பரட்டை தலையாக பலர் காணப்பட்டனர்.. ஷேவிங் செய்யப்படாமல் புதர்போல தாடி வளர்ந்து காணப்பட்டது.
கோயம்பேட்டில் சலூன் கடை வைத்திருக்கும் ஒருவர், கடையை திறந்து வைத்து கொண்டு கட்டிங், ஷேவிங் என இறங்கிவிட, அவருக்கு தொற்று உறுதியானதும் இந்த இடைப்பட்ட நேரத்தில் நிகழ்ந்தது.. கடைக்கு தினமும் கஸ்டமர்கள் வருவதுடன், குறைந்தது 20 வீடுகளுக்கு சென்றாவது கடை ஓனர் கட்டிங், ஷேவிங் செய்து வந்ததால் உச்சக்கட்ட பீதிக்கு சென்றது கோயம்பேடு!!!
பெரும்பாலான சவரத் தொழிலாளர்கள் வருவாய் இன்றி தவித்து வருகின்றனர். இந்த குடும்பங்கள் பொருளாதார ரீதியாக கடும் நெருக்கடியை சந்தித்தனர்.. அரசும் எந்த இவர்களுக்கு எந்த பொருளாதார உதவியையும் செய்யவில்லை.. அதனால் 2 நாளைக்கு முன்பு கூட முடிதிருத்துவோர் நலசங்கத்தினர் ஒரு கோரிக்கை வைத்திருந்தனர்.
" சலூன் கடைகளை வாரத்தில் 2 நாட்கள் குறிப்பிட்ட நேரத்தில் திறக்க அரசு அனுமதிக்க வேண்டும். மாஸ்க், கிளவுஸ் அணிந்து நாங்கள் பணிபுரிய தயாராக உள்ளோம். இதுதொடர்பாக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று கேட்டுக் கொண்டிருந்தனர். இந்நிலையில் பச்சை மற்றும் ஆரஞ்சு மண்டலங்களில் சலூன் கடைகள் திறக்க உள்துறை அமைச்சகம் அனுமதி வழங்கி உள்ளதாக ஒரு தகவல் கசிந்தது.. எனினும் அது உறுதிப்படுத்தப்படாமலேயே இருந்தது!!
ஒருவேளை இந்த அறிவிப்பு உண்மையானால், அது எந்த அளவுக்கு நடைமுறை சாத்தியம்? தொற்று பரவல் இல்லாமல் கட்டிங், ஷேவிங் செய்யப்படுமா? இதில் சமூக விலகல் முழுதுமாக கடைப்பிடிக்கப்படுமா என்ற சந்தேகமும் எழுந்தது.. அதனால் நிச்சயம் அரசு இதனை மறுபரிசீலனை செய்ய வேண்டி வரும் என்றும் கோரிக்கைகளும் எழுந்தன.
ஆனால் தமிழகத்தில் ஊரடங்கு தொடர்பாக முதல்வர் தலைமையில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் இது தொடர்பாக முடிவெடுக்கப்பட்டது.. அதன்படி சலூன் கடைகள் இயங்க மட்டும் தடை விதிக்கப்பட்டுள்ளது.. கொரோனாவிடம் சிக்கியுள்ள சென்னையிலும் தனிக் கடைகள் இயங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ள நிலையில், சலூன் கடைகளுக்கு தடை விதித்துள்ளதை பலரும் வரவேற்றுள்ளனர்.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications