லாக்டவுன்: தமிழகத்தில் மாவட்டங்களுக்கு உள்ளே, வெளியே பயணிக்க இன்று முதல் இ பதிவு கட்டாயம்
சென்னை: தமிழகத்தில் லாக்டவுன் அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் மாவட்டங்களுக்கு உள்ளே பயணிக்கவும் மாவட்டங்களை விட்டு வெளியே செல்லவும் இன்று முதல் இ பதிவு கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
கொரோனா 2-வது அலையை கட்டுப்படுத்தும் வகையில் தமிழகத்தில் 2 வார லாக்டவுன் அமல்படுத்தபட்டுள்ளது. தொடக்கத்தில் சில நாட்கள் இருந்த தளர்வுகள் தற்போது முழுமையாக கைவிடப்பட்டு கடுமையாக்கப்பட்டுள்ளன.
இந்த லாக்டவுன் வரும் 24-ந் தேதி வரை அமலில் இருக்கும். தமிழகத்தில் ஏற்கனவே வெளிநாடுகள், வெளி மாநிலங்களில் இருந்து தமிழகம் வருபவர்கள் http://eregister.tnega.org என்ற இணையத்தில் பதிவு செய்ய வேண்டும் என்று கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

தற்போது, திருமணம், உறவினரின் இறப்பு, மருத்துவ சிகிச்சை, முதியோர்களுக்கான தேவை போன்ற தேவைகளுக்காக மாவட்டங்களுக்கு உள்ளேயும், வெளியேயும் பயணம் மேற்கொள்ள இ-பதிவு முறை கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இது இன்று முதல் நடைமுறைக்கு வந்துள்ளது.
கடந்த ஆண்டு கொரோனா பரவல் அதிகமாக இருந்தபோது இ-பாஸ் நடைமுறை கொண்டு வரப்பட்டது. ஆனால் இ-பாஸ் நடைமுறையில் பல்வேறு குளறுபடிகளை ஏற்படுத்தியது. இந்த நிலையில் இ பதிவு மட்டும் இன்று முதல் அமல்படுத்தப்பட்டுள்ளது. அரசின் http://eregister.tnega.org பதிவு செய்து அதற்கான ஆவணம் வைத்திருந்தாலே போதும்; அதிகாரிகள் ஒப்புதல் தேவை இல்லை என்பதுதான் இ பதிவு.
-
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை












Click it and Unblock the Notifications