இனி ‛ராஜ் பவன்’ கிடையாது.. ஆளுநர் மாளிகை பெயரை மாற்றிய மத்திய அரசு.. ஆர்என் ரவியின் கோரிக்கை ஏற்பு
சென்னை: சென்னை கிண்டியில் உள்ள தமிழக ஆளுநரின் மாளிகையான ‛ராஜ்பவன்' பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. ஆளுநர் மாளிகையின் பெயரை ‛மக்கள் பவன்' என மாற்றம் செய்ய வேண்டும் என்று தமிழக ஆளுநர் ஆர்என் ரவி விருப்பம் தெரிவித்து இருந்தார். இதனை மத்திய உள்துறை அமைச்சகம் ஏற்ற நிலையில் பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி தமிழ்நாடு மட்டுமின்றி அனைத்து மாநிலங்களிலும் உள்ள ‛ராஜ்பவன்' பெயர்கள் ‛லோக்பவன்' என மாற்றம் செய்யப்பட்டுள்ளது. லோக்பவன் என்பதற்கு மக்கள் பவன் என்று பொருள். இந்த பெயர் மாற்றத்தின் பின்னணி பற்றி இங்கு பார்க்கலாம்,
நம் நாட்டில் அனைத்து மாநிலங்களிலும் இருக்கும் ஆளுநர் மாளிகைகள் ‛ராஜ் பவன்' என்று அழைக்கப்பட்டு வருகிறது. அதேபோல் யூனியன் பிரதேசங்களில் உள்ள துணை நிலை ஆளுநர்களின் மாளிகை ‛ராஜ் நிவாஸ்' என்று அழைக்கப்பட்டு வருகிறது.
அதன்படி தமிழகத்தில் சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகை ‛ராஜ் பவன்' என்ற பெயரில் உள்ளது. தமிழக ஆளுநராக ஆர்என் ரவி உள்ளார். இந்நிலையில் தான் ஆளுநர் மாளிகையின் பெயரை மாற்றம் செய்ய வேண்டும் என்று ஆர்என் ரவி கூறி வந்தார்.

கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு தமிழக ஆளுநர் ஆர்என் ரவி நிகழ்ச்சி ஒன்றில் பேசும்போது தனது விருப்பத்தை தெரிவித்தார். ஆளுநர் மாளிகையை ராஜ்பவன் என அழைப்பது சரியானது இல்லை. நான் ராஜாவும் கிடையாது. அது ராஜாவின் பவனும் கிடையாது. இது மக்களுக்கான அலுவலகமாக இருக்க வேண்டும். மக்களுக்காக ஆளுநர் சேவையாற்றி வருகின்றனர். இதனால் மக்கள் பவன் என பெயர் மாற்றம் செய்ய வேண்டும் என்று விருப்பம் தெரிவித்து இருந்தார்.
அதன்பிறகு கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் டெல்லி ஜனாதிபதி மாளிகையில் ஆளுநர்களின் மாநாடு நடந்தது. இந்த மாநாட்டில் அனைத்து மாநிலங்களின் ஆளுநர்கள், அனைத்து யூனியன் பிரதேசங்களின் துணை நிலை ஆளுநர்கள் பங்கேற்றனர். அப்போது ஆளுநர் அலுவலகத்தின் செயல்பாட்டை மேம்படுத்துவதற்கும், மக்களின் நலனுக்கான பல்வேறு யோசனைகளையும் ஆளுநர்கள் முன்வைத்தனர். இந்த மாநாட்டில் ஆர்என் ரவி பேசும்போது, ராஜ் பவன் பெயரை மக்கள் பவன் என மாற்றம் செய்ய வேண்டும் என்று மத்திய அரசுக்கு கோரிக்கை வைத்ததோடு, அதற்கான பரிந்துரையையும் வழங்கியிருந்தார்.
இந்த பரிந்துரையை மத்திய உள்துறை அமைச்சகம் தற்போது ஏற்று கொண்டுள்ளது. இதுதொடர்பாக நவம்பர்25 அன்று உள்துறை அமைச்சகம் அறிவிப்பு வெளியிட்டது. அதில் இந்தியா முழுவதும் உள்ள ராஜ்பவன்கள் 'லோக் பவன்' என்றும், ராஜ் நிவாஸ் 'லோக் நிவாஸ்' என்றும் ஒரே மாதிரியாகப் பெயர் மாற்றப்பட வேண்டும் என்று அந்த உத்தரவில் கூறப்பட்டு இருந்தது. இதில் ‛லோக் பவன்' என்பது தமிழில் ‛மக்கள் பவன்' என்று பொருள்படும்..
இதையடுத்து ஒவ்வொரு மாநிலங்களிலும் ராஜ் பவன் பெயர்கள் மாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர். அந்த வகையில் நேற்று முதல் முதலாக மேற்கு வங்க ஆளுநர் மாளிகையின் பெயர் ‛லோக் பவன்' என்று மாற்றம் செய்யப்பட்டது. இதையடுத்து சென்னையில் உள் தமிழக ஆளுநர் மாளிகையின் பெயரும் ‛மக்கள் பவன்' (லோக் பவன்) என மாற்றம் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது ஆளுநர் ஆர்என் ரவியின் கோரிக்கைக்கு கிடைத்த வெற்றியாகும்.
-
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி! -
ரயிலில் உங்க சீட்டில் வேறு யாரேனும் இருந்தால் ரூ.20,000 இழப்பீடு? இந்த உத்தரவு பற்றி தெரியுமா












Click it and Unblock the Notifications