அரசியலில் குதித்த நடிகர் சூர்யாவின் தந்தை சிவக்குமார்.. விசிக வேட்பாளருக்கு வெளிப்படை ஆதரவு!
சென்னை: லோக்சபா தேர்தல் நெருங்கி வரும் நிலையில் நடிகர் சூர்யாவின் தந்தையான நடிகர் சிவக்குமார் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் வேட்பாளர் ரவிக்குமாரை வெற்றி பெற வைக்க வேண்டும் என ஆதரவு கடிதம் எழுதி உள்ளார்.
தமிழ்நாட்டுக்கும், சினிமா துறைக்கும் நெருக்கமான தொடர்பு உள்ளது. சினிமாவில் ஜொலித்த எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டவர்கள் முதல்வர் பதவியை எட்டிப்பிடித்தனர். நடிகர் விஜயகாந்த் எதிர்கட்சி தலைவர் பதவி வரை சென்றார். மேலும் பல நடிகர், நடிகைகள் எம்பி, எம்எல்ஏக்களாக இருந்துள்ளனர்.

நடிகர் சரத்குமார், கமல்ஹாசன் உள்பட பல நடிகர்கள் கட்சியை துவங்கினர். சமீபத்தில் நடிகர் விஜய், தமிழக வெற்றிக் கழகம் என்ற பெயரில் கட்சியை தொடங்கினர். இப்படி திரையுலகத்தை சேர்ந்தவர்கள் அரசியலில் கால்பதித்து வரும் நிலையில் தான் நடிகர் சூர்யாவின் குடும்பம் மட்டும் விலகியே உள்ளது.
இந்நிலையில் தான் நடிகர் சூர்யா மற்றும் நடிகர் கார்த்தியின் தந்தையான நடிகர் சிவக்குமார் விழுப்புரம் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் வேட்பாளர் ரவிக்குமாரை ஆதரித்து கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் ரவிக்குமார் வெற்றி பெற அவர் வாழ்த்து தெரிவித்துள்ளார். மேலம் தனித்து நின்றாலும், ஒடுக்கப்பட்ட மக்களுக்கு குரல் கொடுக்கும் ரவிக்குமார் போன்றவர்களை தமிழ் மக்கள் தேர்வு செய்து பார்லிமெண்ட்டுக்கு அனுப்ப வேண்டும் என பொதுமக்களுக்கு கோரிக்கை வைத்துள்ளார்.
கையிருப்பு 10 ஆயிரம் தான்.. சொந்தமாக 4 கார்கள், வாகன கடன்.. திருமாவளவனின் சொத்து மதிப்பு எவ்வளவு?
ஜெய்பீம் படத்தின்போது சூர்யாவுக்கு எதிராக பாமக கட்சியினர் போராட்டம் நடத்தினர். இந்த வேளையில் நடிகர் சூர்யாவின் குடும்பத்துக்கு ஆதரவாக விடுதலை சிறுத்தைகள் கட்சியும் இருந்தது. இத்தகைய சூழலில் நடிகர் சிவக்குமார் விழுப்புரம் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் வேட்பாளர் ரவிக்குமாரை ஆதரித்து கடிதம் எழுதியுள்ளார்.
வரும் லோக்சபா தேர்தலில் தமிழ்நாட்டில் விடுதலை சிறுத்தைகள் கட்சி திமுக கூட்டணியில் போட்டியிடுகிறது. திமுக கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு சிதம்பரம், விழுப்புரம் என 2 தனி தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. கடந்த 2019 தேர்தலில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் சிதம்பரத்தில் தொல் திருமாவளவனும், விழுப்புரத்தில் ரவிக்குமார் ஆகியோர் வெற்றி பெற்றிருந்தனர். இந்த முறையும் அதே தொகுதிகள் விசிகவுக்கு கிடைத்துள்ள நிலையில் மீண்டும் தொல் திருமாவளவன், ரவிக்குமார் களமிறங்கி உள்ளனர்.
இந்த லோக்சபா தேர்தலில் விசிக தேர்தல் ஆணையத்தில் பானை சின்னம் கேட்டு விண்ணப்பம் செய்தது. கடந்த 2019 லோக்சபா தேர்தலில் திருமாவளவன் பானை சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அதன்பிறகு 2021 சட்டசபை தேர்தலில் விசிக வேட்பாளர்கள் பானை சின்னத்தில் போட்டியிட்டனர். இத்தகைய சூழலில் மீண்டும் பானை சின்னம் கேட்ட நிலையில் விசிகவுக்கு தேர்தல் ஆணையம் ஒதுக்கவில்லை. இதனால் விசிக வேறு சின்னத்தில் போட்டியிடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. இந்நிலையில் தான் நடிகர் சிவக்குமார் விழுப்புரம் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் வேட்பாளர் ரவிக்குமாரை ஆதரித்து கடிதம் எழுதியுள்ளார் என்பது கவனிக்கத்தக்கது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications