தாமரை சின்னத்தில்தான் போட்டி.. இல்லைன்னா நட்ட நடுத்தெருதான்.. ஓபிஎஸ்ஸை அலறவிட்ட பாஜக!

Subscribe to Oneindia Tamil

சென்னை: லோக்சபா தேர்தலில் பாஜக கூட்டணியில்தான் கட்சி ஏதும் இல்லாத முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் (ஓபிஎஸ்) இடம் பெற்றாக வேண்டிய கட்டாயம் உருவாகி உள்ளது. இதனால் தங்களது தாமரை சின்னத்தில்தான் போட்டியிட வேண்டும் பாஜக நெருக்கடி கொடுப்பதால் தத்தளித்துக் கொண்டிருக்கிறாராம் ஓபிஎஸ்.

ஜெயலலிதா மறைவின் போது தற்காலிக முதல்வராக மீண்டும் பதவியேற்றவர் ஓபிஎஸ். சசிகலாவுக்கு எதிராக தர்ம யுத்தம் தொடங்கிய போது அலை அலையாக அதிமுக தொண்டர்கள் ஓபிஎஸ் பக்கம் நின்றனர். காலம்தான் விசித்திரமானது.

Lok Sabha Election 2024 BJP gives pressure to O Panneerselvam to contest in Lotus Symbol

இப்போது ஓபிஎஸ்-க்கு அண்ணா திமுக என்ற கட்சியும் கொடியாது; அந்த கட்சியின் சின்னமும் கிடையாது; ஆதரவாளர்களும் சொற்பம்தான். இருந்தபோதும் அதிமுகவை மீட்போம் என இடைவிடாமல் முழங்கி வருகிறார் ஓபிஎஸ்.

தற்போது லோக்சபா தேர்தலில் அதிமுக, பாஜக கூட்டணியை முறித்துக் கொண்டு தனி அணியை உருவாக்கி வருகிறது. எந்த ஒரு கட்சியுமே இல்லாத ஓபிஎஸ் தரப்பு, விழுந்து விழுந்து பிரதமர் மோடியையும் பாஜகவையும் ஆதரிக்கிறது. பாஜகவினரை விட மோடியை புகழ்ந்து பேசி வருகிறார் ஓபிஎஸ்.

இதனால் லோக்சபா தேர்தலில் பாஜக கூட்டணியில் அழையாத விருந்தாளியாக போய் பந்தியில் அமர்ந்துவிட்டார் ஓபிஎஸ். பாஜகவோ, இவரையும் வைத்துக் கொண்டு என்ன செய்வது? என்கிற ரேஞ்சில்தான் அணுகிக் கொண்டிருக்கிறதாம். இதனால் போனால் போகிறது என ஒன்றிரண்டு தொகுதிகளை ஓபிஎஸ் தரப்புக்கும் கொடுக்க முன் வந்துள்ளது பாஜக. ஆனால் ஓபிஎஸ் தரப்பு தங்களது தாமரை சின்னத்தில்தான் போட்டியிட்டாக வேண்டும் என்ற கட்டாய நிபந்தனையையும் விதித்துள்ளது பாஜக. இதனை எப்படி ஏற்பது? என்பது தெரியாமல்தான் ஓபிஎஸ் தரப்பு இப்போது விழி பிதுங்கிக் கொண்டிருக்கிறதாம்.

இது தொடர்பாக பாஜக வட்டாரங்களில் நாம் பேசிய போது, கட்சியும் இல்லை, கொடியும் இல்லை, சின்னமும் இல்லை. இரட்டை இலை சின்னத்தில்தான் போட்டியிடுவோம் என ஓபிஎஸ் வசனம் பேசலாம். ஆனால் நடைமுறை யதார்த்தம் வேறானது. எப்படியும் ஓபிஎஸ் தரப்பு சுயேட்சை சின்னத்தில்தான் போட்டியிடும். அதற்கு பாஜகவின் தாமரை சின்னத்திலேயே போட்டியிட்டுப் போகலாமே.. இதையும் கூட ஏற்க முடியாது என வீம்பு பிடித்தால் யாரும் இல்லாமல் தனிமரமாகத்தான் ஓபிஎஸ் போக வேண்டும் என்கின்றனர். அய்யோ பாவமே!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+